செவ்வாய், 30 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி பாகம்-7


என்னை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி பெருவாரியான
வலைஞர்களிடம்(வலைப்பூ நண்பர்கள்)
அறிமுகம் செய்த நண்பர்

"சூரியனின் வலை வாசல்"
அருண் பிரசாத்
அவர்களுக்கு நன்றி



விடுதலை செய்யப்பட்ட இந்திரா காந்தி உற்சாகம் அடைந்தார். ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாசர் உடல் நிலை மோசம் அடைந்து, பீகார் தலைநகரான பாட்னாவில் படுத்த படுக்கையில் இருந்தார். அவரை இந்திரா காந்தி போய் பார்த்தார். இந்த சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இருவரும் 50 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். ஜனதா கட்சி ஆக்கபூர்வமாக செயல்படாமல், இந்திராகாந்தியை பழிவாங்குவதிலேயே குறியாக இருந்தது ஜெயப்பிரகாசருக்குப் பிடிக்கவில்லை.

இந்திராவை கைது செய்தது அவருக்கு மன வேதனையை அளித்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது நேருவும், ஜெயப்பிரகாசரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நேருவின் மனைவி கமலாவும், ஜெயப்பிரகாசரின் மனைவியும் உயிர்த்தோழிகள். இந்திரா காந்தி சிறு குழந்தையாக இருந்தபோது ஜெயப்பிரகாசர் செல்லமாகத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவார். நெருக்கடி நிலைப்பிரகடனத்தையும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவர் எதிர்த்தார். என்றாலும், இந்திரா காந்தி நல்லவர், திறமைசாலி என்பதில் எவ்வித கருத்து வேற்றுமையும் இல்லை. நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட சம்பவங்களுக்காக, ஜெயப்பிரகாசரிடம் இந்திரா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

"இந்து! அதையெல்லாம் மறந்து விட்டேன்! மன்னித்து விட்டேன்" என்றார் ஜெயப்பிரகாசர். இருவர் கண்களிலும் நீர் துளிர்த்தது. இந்திரா காந்தி விடைபெறும்போது, ஜெயப்பிரகாசரின் காலைத் தொட்டு வணங்கி, "நீங்கள் விரைவில் பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்" என்றார். ஜெயப்பிரகாசர் இந்திராவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் இன்னும் கொஞ்ச நாட்கள்தான் வாழ்வேன். நீ பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

 ஜெயப்பிரகாசரின் வாழ்த்தைப் பெற்ற இந்திரா காந்தி, புதிய உற்சாகத்தையும், புதிய தெம்பையும் பெற்றார். பின்னர் பூமிதான இயக்க தலைவர் வினோபாவையும் இந்திரா காந்தி சந்தித்தார். "நெருக்கடி நிலை"யின் போது, அவருடைய ஆசிரமம் சோதனை போடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார். இந்திரா காந்தி பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்தார். நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்கு பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இதனால் பொதுமக்களிடம் இந்திரா காந்தியின் செல்வாக்கு மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. இந்திரா காந்தி பாராளுமன்றத்தில் இடம் பெறுவது நல்லது என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். அவர் போட்டியிடுவதற்கு வசதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் டி.பி.சந்திர கவுண்டர் தன் "எம்.பி" பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அங்கு 1978 நவம்பரில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதி, "காங்கிரஸ் கோட்டை" என்று புகழ் பெற்றதாகும். 50 சதவீதத்துக்கு மேல் பெண் வாக்காளரைக் கொண்ட தொகுதி. அங்கு போட்டியிட இந்திரா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, முன்னாள் முதல்_மந்திரி வீரேந்திர பட்டில் போட்டியிட்டார்.

இந்திரா காந்தியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று ஜனதா தலைவர்கள் விரும்பினார்கள். வீரேந்திரபட்டீல் சார்பாக தேர்தல் வேலைகளை கவனிக்க மத்திய தொழில் மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனுப்பி வைக்கப்பட்டார். போட்டி கடுமையாக இருந்தது., எனினும் சுமார் 70,000 ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி 1978 நவம்பர் 12_ந்தேதி லண்டன் சென்றார். அவருடைய பாஸ்போர்ட்டை ஜனதா அரசு முடக்கி வைத்திருந்தபோதிலும், லண்டனுக்கு மட்டும் போய்வரக்கூடிய குறுகிய கால பாஸ்போர்ட்டை வழங்கியது. லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் இந்திரா டெல்லி திரும்பினார். ஆனால் அவரை "எம்.பி"யாக பதவி ஏற்கவிடாமல் தடுக்க ஜனதா அரசாங்கம் குறுக்கு வழியைக் கையாண்டது. முன்பு இந்திரா காந்தியிடம் விசாரணை நடத்தச்சென்ற அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் இந்திரா தடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதுபற்றி விசாரணை நடத்திய குழு பாராளுமன்ற உரிமை மீறல் குற்றத்தை இந்திரா செய்திருப்பதாக தீர்ப்புக் கூறியிருந்தது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்வது என்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அவரை சிறையில் அடைப்பதென்றும் ஜனதா கட்சி முடிவு செய்தது. இதற்கான தீர்மானத்தை டிசம்பர் 19_ந்தேதி பாராளுமன்றத்தில் பிரதமர் தேசாய் கொண்டு வந்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக 279 பேரும், எதிராக 138 பேரும் ஓட்டுப்போட்டனர். தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து இந்திரா சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சமயத்தில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. உறுப்பினரான எஸ்.டி.சோமசுந்தரம் அமைச்சராகப் பதவி ஏற்றதால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆதரவுடன் அங்கு இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார்.

இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ஆனால் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை மொரார்ஜி தேசாய் விரும்பவில்லை. உடனே அவர் எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்டு, "இந்திரா காந்தியை ஆதரிக்காதீர்கள்" என்று கூறினார். இதனால் எம்.ஜி.ஆருக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. "பிரதமரே வேண்டாம் என்று கூறுவதை எப்படி செய்வது?" என்று யோசித்தார். பின்னர், "தஞ்சை தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவருக்குப் போதிய பாதுகாப்பு கொடுப்பது இயலாத காரியம்" என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் தஞ்சையில் போட்டியிடும் திட்டத்தை இந்திரா கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று இந்திரா யோசித்துக்கொண்டிருந்தபோது அவரே எதிர்பாராத அரசியல் திருப்பம் டெல்லியில் ஏற்பட்டது.
விரைவில்
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5,6

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

திங்கள், 29 நவம்பர், 2010

அமீர் VS மம்தா மோகன்தாஸ்

 சமீபத்தில் சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை அடுத்து சசிக்குமார் இயக்கிவரும் படம் 'ஈசன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர்," சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் செய்த மிகப்பெரும் விஷயம் அபிநயா என்ற பேசமுடியாத பெண்னை நடிக்க வைத்து இருப்பதுதான். இந்த விஷயம் எனக்கு தோணாமப் போச்சேன்னு நான் ரொம்ப வெட்கப் படுகிறேன்".என்றார்.

 அதே நேரம் கேன்சரால் அவதியுற்றுவரும் நடிகை மம்தா மோகன்தாஸ், “எனக்கு கேன்சர் வந்ததில்கூட கவலையில்லை. ஆனால் அதனை மனிதர்கள் பார்க்கும் விதம்தான் வருத்தமாயிருக்கிறது. ஜெயம் ரவி ஜோடியாக அமீர் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு கேன்சர் வந்திருப்பதை அறிந்த அமீர் என்னை படத்தில் இருந்து தூக்கிவிட்டார். “உன்னால் நடிக்க முடியாதும்மா” என்றார் அமீர். இப்போது எனக்குப் பதில் நீத்து சந்திரா நடிக்கிறார். கேன்சர் வந்தால் நடிக்க முடியாது என்பதெல்லாம் அபத்தம். டாக்டர்களிடம்கூட அமீரை பேசச் சொன்னேன். அவர் மறுத்துவிட்டார்..” என்று பெரும் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்.

. வாய்பேசமுடியாத பெண்ணை நடிக்கவைக்காததற்க்கு வெட்கப்படுவதாக கூறிகொள்ளும் அமீர் பேசுவது மேடைக்காக மட்டும் தான் போல .... கேன்சருடன் போராடுவது என்பது எவ்வளவு  பெரிய வேதனை என்று என் தந்தைக்கு  அருகிலிருந்து பார்த்தவன் நான். அந்த சோகத்தை மறைக்க மம்தா போன்ற நடிகை  தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பதே பெரிய மனதைரியம்தான், தன்னனம்பிக்கைதான்  . அப்படிப்பட்டவரை மனதளவில் காயப்படுத்தியிருக்கிறார் அமீர். நோயைவிட கொடுமை நோயாளி புறக்கணிக்கப்படுவதுதான். அன்வர் என்ற மலையாளப் படத்தில் இப்போது நடித்துவருகிறார்  மம்தா. நல்லவேளை அந்த மலையாள இயக்குனர் ஏதும் சொல்லவில்லை.

சனி, 27 நவம்பர், 2010

பயப்படாம பாருங்க.....

தயவுசெய்து இருபது வினாடிகள் இமைக்காமல் பார்க்கவும்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-6

கணவர் பெரோஸ் காந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்தத் தகவல். பெரோஸ் காந்திக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது முறை. விமான நிலையத்திலிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார், இந்திரா.

அங்கு இந்திரா காந்தியின் உதவியாளர் உஷா பகத் உள்பட பலர் இருந்தனர். பெரோஸ் காந்திக்கு விட்டு விட்டு உணர்வு திரும்புவதாகவும், அப்போதெல்லாம் "இந்து எங்கே?" என்று அவர் கேட்பதாகவும் உஷா கூறினார். இதைக்கேட்டு இந்திரா கண் கலங்கினார். அன்று பகலில், நெஞ்சு வலிப்பதாக தன்னுடைய நண்பரான டாக்டர் கோசலாவுக்கு பெரோஸ் டெலிபோன் செய்திருக்கிறார். உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு அவர் கூறியிருக்கிறார். பெரோஸ் வந்ததும், டாக்டர் கோசலா மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளார்.

பரிசோதனை நடந்து கொண்டு இருக்கும்போதே, பெரோஸ் உணர்வு இழந்துவிட்டார். அன்றிரவு இந்திரா தூங்கவில்லை. கணவர் படுக்கை அருகிலேயே இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு பெரோஸ் காந்தி கண் விழித்துப் பார்த்தார். கண்களில் கண்ணீருடன் வாடிய முகத்துடன் இந்திரா சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். "இந்து! கவலைப்படாதே, போய் ஏதாவது சாப்பிடு" என்று கூறினார். ஆனால் இந்திரா சாப்பிட மறுத்துவிட்டார். பெரோஸ் காந்தி மீண்டும் நினைவு இழந்தார். இந்திரா துயரத்துடன் கணவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். காலை 7.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே பெரோஸ் காந்தியின் உயிர் பிரிந்தது. 48வது பிறந்த நாளுக்கு நான்கு நாள் இருக்கும்போது பெரோஸ் மரணம் அடைந்தார்.


ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதலே இந்திரா காந்தி மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விடுவார் என்று கூறி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தது. உண்மையில் நேரு இறந்த பின் அரசியலை விட்டு விலகி லண்டனில் குடியேற இந்திரா திட்டமிட்டார். அதை தடுத்து நிறுத்தியவர் காமராஜர்.

"உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை" என்று கூறி அவர் மனதை மாற்றி சாஸ்திரி மந்திரிசபையில் இடம் பெறச்செய்தார். சாஸ்திரி இறந்ததும் இந்திராவை பிரதமராக்கினார். தேர்தலில் தோற்ற இந்திரா காந்தி அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கவில்லை. நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக மனம் வருந்தியதோடு மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற கடுமையாக உழைக்கத் தீர்மானித்தார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது சப்தர்ஜங் ரோட்டில் 1_ம் எண் வீட்டில் வசித்து வந்தார். இது பிரதமருக்குரிய பெரிய பங்களா அல்ல. மந்திரிகள் அல்லது அதிகாரிகளுக்கு உரிய வீடுதான். அங்கு மொரார்ஜி தேசாய் குடி வர விரும்புவதாகவும் எனவே வீட்டை உடனே காலி செய்யும்படியும் இந்திராவிடம் அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். தன் மகன்களுடனும் மருமகள்களுடனும், பேரக்குழந்தைகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்த இந்திரா, எங்கே குடிபோவது என்று திகைத்தார். ஏனென்றால், அலகாபாத்தில் உள்ள பூர்வீக வீடான "ஆனந்த பவனம்" கூட ஏற்கனவே நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.

நல்லவேளையாக, இந்திரா காந்தியின் நீண்ட கால குடும்ப நண்பர் முகமது யூனுஸ், வெல்லிங்டன் கிரசண்ட் ரோட்டில் உள்ள தன் வீட்டை உடனடியாக காலி செய்து இந்திராவுக்குத் தர முன்வந்தார். இந்த வீட்டில்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் சஞ்சய் _ மேனகா திருமணம் நடந்தது. இந்திரா காந்தியின் உதவியாளர்கள் எல்லாம் வெளியேறிவிட்டனர். தனி செயலாளர் ஆர்.கே.தவான் மட்டும் "உங்களிடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறேன்" என்று விசுவாசத்துடன் கூறினார்.

இந்திரா காந்தி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பாதுகாப்பை குறைக்கும்படி மொரார்ஜி கட்டளையிட்டார். "இந்திரா இப்போது சாதாரண பிரஜைதான். அவருக்கு குறைந்த அளவு பாதுகாப்பு போதும்" என்று கூறினார். "நெருக்கடி நிலை"யின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்திரா காந்தியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி சரண்சிங்கும் சுகாதார மந்திரி ராஜ்நாராயணனும் துடித்தனர். "அவசரப்படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்" என்று மொரார்ஜி தேசாய் கூறினார். சட்ட மந்திரி சாந்தி பூஷனும் பிரதமரின் கருத்தை ஆதரித்தார். ஆயினும் இந்திரா காந்தியைக் கைது செய்வதில் சரண்சிங் உறுதியாக இருந்தார்.

அக்டோபர் 2_ந்தேதி அவர் சி.பி.ஐ. டைரக்டரை அழைத்தார். "இந்திராவைக் கைது செய்யத் தயாராகுங்கள்" என்று கட்டளையிட்டார். இந்திரா காந்தியை எந்த முறையில் கைது செய்வது? அவரை எப்படி நடத்துவது? என்று சி.பி.ஐ. டைரக்டர் கேட்டார். "இந்திரா காந்தி இப்போது சாதாரண பிரஜை. எனவே சாதாரண பிரஜை மாதிரியே அவரை நடத்தவேண்டும்" என்றார் சரண்சிங்.

3_ந்தேதி மாலை இந்திரா காந்தியின் வீட்டுக்கு சி.பி.ஐ. போலீசார் சென்றார்கள். "உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்" என்றார்கள். "அப்படியா? தாராளமாக கைது செய்யுங்கள். கை விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதாக இருந்தாலும் சரி" என்றார் இந்திரா காந்தி. ஆனால் கை விலங்கு போடாமல் அவரை போலீசார் அழைத்துச்சென்றார்கள். மறுநாள் இந்திரா காந்தி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வரப்பட்டது. ஆனால் "நாற்காலி வேண்டாம்" என்று இந்திரா கூறிவிட்டார்.

அரசாங்க வக்கீல் தமது வாதத்தில் கூறியதாவது:-

"தேர்தல் பிரசாரத்திற்கு பல வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஜீப்களை இந்திராவும் அவர் மகன் சஞ்சய்காந்தியும் பயன்படுத்தினார்கள். பம்பாயில் பெட்ரோல் கிணறுகள் தோண்ட பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுடன் இந்திரா காந்தி ஒப்பந்தம் செய்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.

இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இதற்கு பதிலளித்து கூறியதாவது:-

"இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா? இவ்வாறு பிராங்க் அந்தோணி கேட்டார். முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அன்றைய தினமே இந்திரா காந்தியை நீதிபதி விடுதலை செய்தார். ஒரே நாளில் விடுதலை ஆவோம் என்று இந்திரா காந்தியே நினைக்கவில்லை.
தஞ்சாவூரில் போட்டியிட விரும்பிய இந்திரா....விரைவில்

முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே.... 

வலைப்பூ நண்பர்களுக்கு நன்றியோ நன்றி.



அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களுக்கு,
கடந்த பதிவோடு நூறு பதிவுகளை தொட்டுவிட்டேன் உங்களின் ஆதரவோடு.....
பதிவுகள்தான் நூறே தவிர அனைத்தும் என் பதிவல்ல....அதில் பாதிதான் என் சொந்தப்பதிவு....மீதி....எனக்கு மின்னஞ்சலில் வந்தது, அந்த நேரத்தில் பரபரப்பாக இருந்த செய்திகள், சில பத்திரிகைகளில் நான் படிக்கும்போது, அட இது நல்லாருக்கே...இந்த செய்தியை இந்த தலைமுறையினர் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்( ஆட்டோ சங்கர், மிசா போன்ற செய்திகள்) பகிர்ந்து கொண்டவை என்று எல்லாம் சேர்த்துதான் நூறு.   நான் இந்த உலகத்தை திருத்தவேண்டும், ஊரை திருத்தவேண்டும் என்றெல்லாம் நினைத்து பதிவுலகிற்கு வரவில்லை. கடந்த ஜூலை மாதம் மத்தியில்  எனக்கு எல்லாமுமாக இருந்த என்தந்தை அப்துல்  ரஹீம் அவர்கள் கேன்சரால் இறந்து போய் விட்டார்கள். அந்த சோகத்திலிருந்து மீள்வதற்கு வழிதெரியாமல் இருந்த போதுதான் எனக்கு பதிவுலகம் அறிமுகமானது. ஒரு பிளாக் ஆரம்பித்தேன். (அதற்க்கு முன்னே ஒரு பிளாக்கை ஆர்வக்கோளாறினால்  ஆரம்பித்து மூடியது வேறு விஷயம். ) என் சோகங்களை மறக்க என் கவனத்தை வலையுலகின் பக்கம் திருப்பினேன். என்ன எழுதுவது என்று தெரியாமல் கடந்த வருடத்தில் நான் எழுதி யூத்புல் விகடனில் வெளிவந்த இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகளை அப்படியே மீள்பதிவு செய்தேன். அப்போது கூட தமிழ்மணம், இன்ட்லி,  தமிழ் 10  போன்ற திரட்டிகளில் இணைக்க(தெரிய)வில்லை. அப்புறம் ஒரு வழியாக அனைத்திலும் இணைத்தேன். ஆனால் ஆரம்பத்தில் ஓட்டும், பின்னூட்டமும் வரவில்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. அதன்பிறகு தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் எனக்கு பதினெட்டாவது இடம் கொடுத்தும், நம்ம நண்பர்  அஹமது  இர்ஷாத்அவர்கள்   வலைச்சரத்திலும், நண்பர்  பிலாசபி பிரபாகரன் அவரின் வலைப்பூவிலும்   என்னை பற்றியும் எழுதி பிரபலம் ஆக்கினார்கள்.  ஏதோ ஓரளவிற்கு நானும் இப்போது தெரிந்தமுகமாகிவிட்டேன். அதற்காக உங்கள் அத்துணை பேருக்கும் நன்றி. மேலும்  என் பதிவுகளை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த திரட்டிகளுக்கும், எனக்கு திரட்டிகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்  ,தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திவரும் நண்பர்களுக்கும், என்னையும் மதித்து பின்தொடரும் நண்பர்களுக்கும் நன்றி...நன்றியோ நன்றி.

(அதே நேரம் நான் யாருடைய கற்பனையில் உதித்த கதை, கவிதை கட்டுரை,ஜோக்குகள் என்று எதையும் திருடவில்லை. சில பொதுவான செய்திகளை சில பத்திரிகைகளில் படித்து பகிர்ந்துள்ளேன்).

புதன், 24 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-5

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947_ல் இருந்து 30 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செலுத்தி வந்த காங்கிரஸ், ஆட்சியை விட்டு இறங்கியது. வரலாற்றில் முதல் முறையாக, காங்கிரஸ் அல்லாத பிரதமராக, மொரார்ஜி தேசாய் 1977 மார்ச் 24_ந்தேதி பதவி ஏற்றார். 1964_ல், நேரு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆவதற்கு மொரார்ஜி தேசாய் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். பின்னர், 1966 ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி திடீர் என்று காலமானதால், பிரதமர் தேர்தல் நடந்தது. அதில், இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு, தேசாய் தோல்வி அடைந்தார். 14 ஆண்டுகளாக தேசாய் கண்டு வந்த "பிரதமர் பதவி கனவு" 1977_ல் பலித்தது.

மார்ச் 24 ந்தேதி மாலை மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றார். மற்ற மந்திரிகள் 26_ந்தேதி பதவி ஏற்றனர். அன்று பதவி ஏற்ற 14 மந்திரிகளின் பெயர்களும் இலாகா விவரமும் வருமாறு:-

1. சரண்சிங் - உள்நாட்டு இலாகா
2. வாஜ்பாய் - வெளிநாடு
3. எச்.எம்.படேல் - நிதி, ரெயில்வே, பாங்கிகள்
4. பாதல் - தபால் தந்தி
5. சாந்திபூஷண் - சட்டம், நீதித் துறை, கம்பெனிகள் விவகாரம்.
6. எல்.கே.அத்வானி - ரேடியோ, தகவல் இலாகா
7. பட்நாயக் - இரும்பு, சுரங்கம்
8. மதுதண்டவதே - ரெயில்வே
9. பி.சி.சுந்தர் - கல்வி, சமுதாயம், சுகாதாரம்
10. மோகன்தாரியா - வர்த்தகம், உணவு, கூட்டுறவு.
11. புருசோத்தம் கவுசிக் - சுற்றுலா, விமான போக்குவரத்து
12. சிக்கந்தர் பக்த் - வீட்டு வசதி, பொதுப்பணி வினியோகம், அகதிகள் மறுவாழ்வு
13. பா.ராமச்சந்திரன் - மின்சாரம்
14. ரவீந்திரவர்மா - பாராளுமன்ற விவகாரம், தொழிலாளர் விவகாரம் (இது தவிர மற்ற எல்லா இலாகாக்களையும் பிரதமர் மொரார்ஜி தேசாய் தன் வசம் வைத்துக்கொண்டார்)


ஜெக ஜீவன்ராம் ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜனநாய காங்கிரஸ் தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் ராஜ்நாராயணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 28 ந்தேதி ஜெகஜீவன்ராம் உள்பட 5 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். அவர்களது இலாகா விவரம்:-

1. ஜெகஜீவன்ராம் - ராணுவம்
2. பகுகுணா - ரசாயனம், உரம்
3. ஜார்ஜ் பெர்னாண்டஸ் - தபால் தந்தி
4. ராஜ்நாராயணன் - சுகாதாரம், கருத்தடை
5. பிரிஜ்லால் வர்மா - தொழில்
பாதலிடம் இருந்த தபால் _ தந்தி பெர்னாண்டசுக்கு ஒதுக்கப் பட்டதால், பாதலுக்கு விவசாயம் _ நீர்ப்பாசனம் இலாகா கொடுக்கப்பட்டது.
இந்திரா வாழ்த்து
மார்ச் 25_ந்தேதி பாராளுமன்றம் கூடியது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றார்கள். அன்று பிரதமர் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தியை சந்தித்து பேசினார்.

தேசாய்க்கு இந்திரா காந்தி வாழ்த்து தெரிவித்தார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், "என் கடமை முடிந்துவிட்டது" என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாளே அவர் உடல் நலம் மிகவும் மோசமானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்துவிட்டதால், ரத்தத்தை சுத்திகரிக்க "டயாலிஸ்" சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த சஞ்சய் காந்தி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_ "அரசியலில் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை. வேறு வழிகளிலும் சமுதாயத்துக்கு பாடுபட வழி உண்டு. எனவே அரசியலை விட்டு ஒதுங்கி விடுகிறேன். அரசியலில் இனி ஈடுபடமாட்டேன். அமேதி தொகுதி மக்கள் தங்களுக்கு உரிய வரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மனதார ஏற்கிறேன். இவ்வாறு சஞ்சய் காந்தி அறிவித்தார்.

1960 செப்டம்பர் மாதம் இந்திரா காந்தி கேரளா சென்றிருந்தார். திருவனந்தபுரத்தில் நடை பெற்ற காங்கிரஸ் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். 7_ந்தேதி இரவு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், ஒரு அதிர்ச்சியான தகவல் அவருக்குக் காத்திருந்தது.
 தொடரும்
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

செவ்வாய், 23 நவம்பர், 2010

கேப்டன் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த்

இந்திய அபோஸ்தல கிறிஸ்தவ பேராயர்களின் திருச்சபை டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்துக்கு சென்னையில் நடக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.



அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.எம். ஜெயகுமார் தலைமையில் ஜான் வில்லியம்ஸ் இந்த விருதினை வழங்குகிறார்.


இந்த அறிவிப்பு நேற்று நடந்த விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

விஜயகாந்தின் சிறந்த சமூக சேவை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் சேவையையும் பாராட்டும் வகையில் இந்த டாக்டர் விருது வழங்கப்படுகிறது

திங்கள், 22 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-4

 1977 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. ஜெயப்பிரகாசர் உருவாக்கிய "ஜனதா கட்சி", ஆட்சியை பிடித்தது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 19_ந்தேதி நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயணன் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:_ ராஜ்நாராயணன் (ஜனதா) 1,77,729 இந்திரா காந்தி (இ.காங்) 1,22,517 (1971 தேர்தலில் இதே தொகுதியில் ராஜ் நாராயணனை 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா காந்தி தோற்கடித்தார்.

இந்திரா தேர்தலை எதிர்த்து ராஜ்நாராயணன் வழக்குத் தொடர்ந்து அதில் "இந்திரா தேர்தல் செல்லாது" என்று தீர்ப்பு கூறப்பட்டதும் அதன் விளைவாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது) உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி தோல்வி அடைந்தார்.

அவரை ஜனதா வேட்பாளர் ரவீந்திரபிரசாத் சிங் சுமார் 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்றும் வாஜ்பாய், ஜெகஜீவன்ராம், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜோதிபாசு உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.

இந்திரா காந்தி மந்திரிசபையில் மந்திரிகளாக இருந்தவர்களில் 32 பேர் தோல்வி அடைந்தனர். மற்றும் காங்கிரசின் முன்னணி தலைவர்கள் பலரும் தோல்வியைத் தழுவினர். சங்கர் தயாள் சர்மா, தினேஷ்சிங், கே.சி.பந்த், பிரணாப் முகர்ஜி, அனுமந்தையா ஆகியோர் தோற்றவர்களில் முக்கியமானவர்கள். காங்கிரஸ் தலைவர்களில் சவான், பரூவா, கரண்சிங் உள்பட சிலர் மட்டும் வெற்றி பெற்றனர். ஆட்சியைப் பிடித்த ஜனதா பாராளுமன்றத்தின் மொத்த இடங்கள் 542 அதில் 299 இடங்களில் ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மற்ற கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள்:_ இ.காங்கிரஸ் 153 மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு 22 அ.தி.மு.க. 19 அகாலிதளம் 8 வ.கம்žனிஸ்டு 7 தி.மு.க. 1 இதர கட்சிகள் 33

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெருக்கடி நிலை அத்துமீறல்கள் எதிரொலிக்கவில்லை என்றே சொல்லலாம். அ.தி.மு.க, இ.காங்கிரஸ், வ.கம்ïனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகியவை ஒரு அணியாகவும், தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ், இ.கம்ïனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க _ இ.காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள் வருமாறு:_ மொத்தம் _40 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட) அ.தி.மு.க. 19 இ.காங்கிரஸ் 14 வ.கம்ïனிஸ்டு 3 தி.மு.க _ ஸ்தாபன காங்கிரஸ் அணி ஸ்தாபன காங்கிரஸ் 3 தி.மு.க. 1. வடசென்னை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அங்கு ஆசைத்தம்பி வெற்றி பெற்றார்.

இந்திரா தோல்வி பற்றிய செய்திகள் வர வர, டெல்லியில் எதிர்க்கட்சியினர் பட்டாசுகளைக் கொளுத்தியும், வாண வேடிக்கைகள் நடத்தியும் விழா கொண்டாடினர். இந்திரா காந்தியின் வீட்டில் மவுனம் நிலவியது. இந்திரா தன் அறையில் தன்னந்தனியே அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய நீண்டகால சிநேகிதியான புபுல் ஜெயக்கர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும், இந்திரா எழுந்து அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, "புபுல்! நான் தோற்றுவிட்டேன்" என்றார். இருவரும் சற்று நேரம் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

பிறகு, "கவலைப்படாதே! மீண்டும் நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு இரு" என்று ஆறுதலாகக் கூறிவிட்டு புபுல் ஜெயக்கர் விடைபெற்றார். அப்போது அங்கு ராஜீவ் காந்தி வந்தார். "இவ்வளவுக்கும் சஞ்சய்தான் காரணம். அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்றார். (அப்போது சஞ்சய் காந்தி, அமேதி தொகுதியில் இருந்து திரும்பவில்லை). பாராளுமன்ற தேர்தலின் பெரும்பாலான முடிவுகள் வெளியான பிறகு (21_ந்தேதி) மாலையில் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இடைக்கால ஜனாதிபதி ஜாட்டியை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார். மறுநாள் (22_ந்தேதி) தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறைகளில் இருந்த "மிசா" கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திரா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

"மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டும். நானும் எனது கட்சியினரும் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஜனநாயக முறையின் ஒரு பகுதி தேர்தல். தேர்தலை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல வாழ்வு அளிப்பதுதான் முக்கியமே தவிர, தேர்தலில் பெறும் வெற்றி அல்லது தோல்வி அதிக முக்கியம் அல்ல.

மத்தியில் அமையப்போகும் புதிய அரசாங்கத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதசார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம் ஆகிய அடிப்படை கொள்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். நமது தேசத்தை எதிர்நோக்கியுள்ள பணிகளை நிறைவேற்ற புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை அளிக்க நானும், காங்கிரஸ் கட்சியும் தயாராக இருக்கிறோம்.

எனது மந்திரிகளும், எனது கட்சியினரும், இந்த தேசத்தின் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் ஒத்துழைத்து என் மீது ஆழ்ந்த பரிவு காட்டினார்கள். பிரதமர் என்ற முறையில் உங்களிடம் இருந்து விடைபெறும் இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் நான் கொண்டுள்ள அன்பும், அவர்களின் நல்வாழ்வில் நான் வைத்திருக்கும் அக்கறையும் மாறாமல் இருக்கிறது. என்னால் இயன்ற அளவு மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதே சிறு வயது முதல் என்னுடைய லட்சியம் ஆகும். இதுவே என்னுடைய நோக்கமாக இருக்கும். இப்போதும், எப்போதும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்".

இவ்வாறு அதில் இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்தார்.
மொரார்ஜி தேசாயின் கனவு பலித்தது வரும் புதனன்று.......
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை  உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே.... 

ஞாயிறு, 21 நவம்பர், 2010

திருமணம் என்றால் என்ன?-ரஜினியின் விளக்கத்தை கேளுங்க...

தமிழின் 20 முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் என் வலைத்தளத்திற்கு 18-வது இடம் கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி.
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய நண்பர் அலைவரிசை அஹமது இர்ஷாத் அவர்களுக்கும் நன்றி.

சனி, 20 நவம்பர், 2010

ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்

  நான் ரசித்த ரஜினி படம் தொடர் பதிவிற்கு என்னையும் ஒரு பதிவராக மதித்து அளித்த நண்பர் சோழ பரம்பரை எம்.எல்.ஏ., நாகராஜ சோழன் அவர்களுக்கும், அழைக்க நினைத்த பிலாசபி பிரபாகரனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ரஜினிகாந்த் நடித்த படங்களை பற்றி பதிவர்கள் தொடர்ந்து போதும் போதுமென்ற அளவிற்கு விமர்சனம் செய்து விட்டதால், எனக்கு பிடித்த படங்களிலிருந்து காட்சிகளை வரிசை படுத்தியுள்ளேன்.

அவர்கள்  
கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையத்த இந்தப்படம் வெளியான ஆண்டு   1977.
இந்த  படத்தின்  படப்பிடிப்பின்  போது நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவம்: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு ரஜினியை திட்டிவிட்டு கோபத்துடன்  சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பிட்டாராம் இயக்குனர் பாலச்சந்தர். பின்னர் ரஜினி அவரை சமாதானப்படுத்திதொடர்ந்து  நடித்தாராம்.  


இளமை ஊஞ்சலாடுகிறது  
ஸ்ரீதர் இயக்கிய இந்தப்படத்திற்கு இசை இளையராஜா வெளியான ஆண்டு 1978


16 - வயதினிலே
பாரதிராஜாஜா இயக்கிய முதல் படம். இசை: இளையராஜா வெளியான ஆண்டு  1977


மூன்றுமுகம்
ஜகன்னாதன் இயக்கிய இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். வெளியான ஆண்டு 1982



மன்னன்
பி.வாசு இயக்கிய இந்த படத்திற்கு இசை இளையராஜா, ரஜினிகாந்த் சொந்தக்குரலில் பாடி மன்னிக்கவும் பேசியிருப்பார். படம் வெளியான ஆண்டு 1992


தளபதி
மணிரத்னம் இயக்கத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்த படம். இளையராஜாவின் இசையால் இந்தப்படம் வெற்றி பெற்றதாக சொல்பவர்களும் உண்டு. படம் வெளியான ஆண்டு 1991


சந்தரமுகி
பி.வாசுவின் இயக்கத்தில் வித்யாசாகரின் இசையில் வெளிவந்து ஒருவருடத்தை கடந்து ஓடிய படம் -வெளிவந்த ஆண்டு 2005




முரட்டுக்காளை -
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த படம். ரஜினியின் முதல் மசாலா படமென்று கூட சொல்லலாம் இசை இளையராஜா.வெளிவந்த ஆண்டு :1980


பாட்சா 
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ரஜினியின் மாஸ்டர் பீஸ் படம். இசை: தேவா வெளியான ஆண்டு :1995


முள்ளும் மலரும் -
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தரை விட ரஜினிக்கு பிடித்த இயக்குனரான  மகேந்த்ரன் இயக்கிய படம். ரஜினிகாந்த் நடிப்பு திறமைக்கு  தீனி போட்ட படம்.  -இளையராஜா இசையமைத்திருந்தார். வெளிவந்த ஆண்டு -1978


எனக்கு பிடித்த பாடல்கள்

சந்தனக்காற்றே- தனிக்காட்டு ராஜா
அதோ வாராண்டி- பொல்லாதவன்
பேசக்கூடாது- அடுத்த வாரிசு
மாலை சூடும்- நான் மகான் அல்ல
ராத்திரியில்- தங்கமகன்
என்னைத்தானே- நல்லவனுக்கு நல்லவன்
பெண்மானே சங்கீதம்- நான் சிகப்பு மனிதன்
நதியோரம் -அன்னை ஒரு ஆலயம் 
கண்மணியே- ஆறிலிருந்து அறுபது வரை
ஒரு ஜீவன்தான்- நான் அடிமை இல்லை.


கொசுறு: ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை முதன் முதலில் பேனரில் போட்டு விளம்பரப்படுத்தியவர் அப்போதைய விநியோகஸ்தரும் இப்போதைய தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு அவர்கள். விளம்பரப்படுத்தப்பட்ட படம் பாஸ்கர் அவர்கள் இயக்கிய
பைரவி.

இந்த பதிவை தொடர
மதியோடை மதி.சுதா அவர்களையும்
தொப்பி தொப்பி அவர்களையும் அழைக்கிறேன்.
பப்ளி ஹரிஸ் அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், வம்பை வேலைக்கு வாங்குவோம்ல...மணிவண்ணன் அவர்கள் முந்திக்கொண்டார். 

வெள்ளி, 19 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-3

"நெருக்கடி நிலை"யின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாசரும், மற்ற தலைவர்களும் பாராளுமன்றதேர்தலில் இந்திரா காந்தியை தோற்கடிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

"நெருக்கடி நிலை" கொண்டு வந்ததால் இந்திரா காந்திக்கு கெட்ட பெயர். எனவே, எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறாமல் இருந்தால் இந்திராவை சுலபமாகத் தோற்கடிக்கலாம்" என்று ஜெயப்பிரகாசர் யோசனை தெரிவித்தார். அது மட்டுமின்றி எல்லா கட்சித் தலைவர்களையும் அழைத்து, "ஒற்றுமையாக இருங்கள். ஒரே கட்சியாக செயல்பட்டு, இந்திரா காந்தியை தோற்கடியுங்கள்" என்றார். அதன்படி ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோசலிஸ்டு, லோக்தளம் ஆகிய நான்கு பெரிய கட்சிகளும் "ஜனதா கட்சி" என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. வேற்றுமைகளை மறந்து ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தன.

இந்த சமயத்தில், எதிர்பாராத திருப்பமாக இ.காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகஜீவன்ராம் (மத்திய விவசாய மந்திரி) விலகினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெரிய தலைவராக விளங்கிய ஜெகஜீவன்ராம் அதுவரை இந்திரா காந்தியின் வலது கரமாக விளங்கியவர். அவர் இ.காங்கிரசைவிட்டு விலகியதோடு மட்டுமின்றி, இந்திரா காந்தியை தாக்கியும், நெருக்கடி நிலை கொடுமைகளைக் கண்டித்தும் அறிக்கை விடுத்தார். "ஜனநாயக காங்கிரஸ்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி ஜனதாவுடன் கூட்டு சேர்ந்தார். ஜெகஜீவன்ராமை பின்பற்றி மத்திய மந்திரிகள் எச்.என். பகுகுணா, நந்தினி சத்பதி (ஒரிசா முன்னாள் முதல்_மந்திரி), கே.ஆர்.கணேஷ், டி.என்.திவாரி ஆகியோரும் இ.காங்கிரசை விட்டு விலகினர். இவர்கள் ஜனதா கட்சியில் சேர்ந்தார்கள். ஜெகஜீவன்ராமும், மற்றவர்களும் இ.காங்கிரசை விட்டு விலகி ஜனதாவுடன் சேர்ந்து கொண்டது, இந்திராவுக்கு அதிர்ச்சி அளித்தது.

தேர்தலில் இ.காங்கிரஸ் வெற்றி பெறுவது சந்தேகம் என்பதைப் புரிந்து கொண்ட சஞ்சய் காந்தி, "தேர்தலை ரத்து செய்து விடுங்கள்" என்று இந்திரா காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. "நெருக்கடி நிலையினால் ஏற்கனவே நமக்கு கெட்ட பெயர். அப்படி இருக்க தேர்தலை ரத்து செய்தால், அது நமக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்தலை ரத்து செய்யமாட்டேன்" என்று கூறிவிட்டார். தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, 11_2_1977_ல் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். (தேர்தலை தள்ளிப்போடும்படி இந்திரா காந்தி வற்புறுத்தியதாகவும், அந்த அதிர்ச்சியால் ஜனாதிபதி மரணம் அடைந்ததாகவும் பின்னர் சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மை அல்ல என்று இந்திரா மறுத்தார்.) பக்ருதீன் அலி அகமதுவுக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஜாட்டி, தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றார்.

இதற்கிடையே நேருவின் தங்கையும், பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவருமான விஜயலட்சுமி பண்டிட், இந்திரா காந்தியைத் தாக்கி அறிக்கை விடுத்தார். "நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த ஜனநாயகத்துக்கு களங்கம் உண்டாக்கிவிட்டார் இந்திரா காந்தி. இந்தியாவில் மீண்டும் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும்" என்று அறிக்கை விடுத்தார். ஜனதா வெற்றி பெற்றால் தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்ததாக பின்னர் பத்திரிகைகள் எழுதின.

மார்ச் 14_ந்தேதி அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. ஒரு காரில் வந்த மர்ம மனிதர்கள், சஞ்சய் காந்தியின் காரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். அந்த சமயத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த தன் உதவியாளரை நோக்கித் திரும்பி பேசிக்கொண்டிருந்ததால், சஞ்சய் காந்தி உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மர்ம கும்பல் தப்பிச்சென்று விட்டது. இதுபற்றி சஞ்சய் காந்தி போலீசில் புகார் செய்தார். ஆனால் துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது கடைசிவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

சஞ்சய் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யப்போன சில இடங்களில் அவருக்கு எதிராக விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "கட்டாய கருத்தடையால் கணவரை இழந்தோம். நீ குற்றவாளி!" என்று அவர்கள் குரல் எழுப்பினர். சஞ்சய் காந்தி தான் பேசிய கூட்டங்களில் கட்டாய கருத்தடை திட்டத்தை நியாயப்படுத்திப் பேசினார். அதனால் அவருக்கு எதிர்ப்பு மேலும் அதிகமாகியது.

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும், அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தியும் போட்டியிட்டனர். இரண்டும் அடுத்தடுத்து இருந்தன. "காங்கிரஸ் கோட்டைகள்" என்று வர்ணிக்கப்பட்ட தொகுதிகள் இவை. அங்கு இ.காங்கிரசுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவது கண்டு, இந்திரா காந்தி கவலை அடைந்தார். ஆயினும் குறுகிய ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும் என்று அவர் நம்பினார். பாராளுமன்றத்திலும் சொற்ப மெஜாரிட்டியுடன் இ.காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று, உளவுத்துறை மூலம் அவருக்கு வந்த தகவல்கள் கூறின. ஆனால்...
(இந்திய அரசியலில் ஏற்பட்ட எதிர்பாரா திருப்பம் வரும் திங்கள் அன்று. அதுவரை பொறுத்திருங்கள்
 அதென்ன எமெர்ஜென்சி அல்லது மிசா
பாகம்-1
பாகம்- 2

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

புதன், 17 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி- பாகம் 2

 முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே போய் படிச்சுட்டு வாங்க  

நெருக்கடி நிலை அமுலுக்கு வந்தபின் 1975, ஜுலை 1_ந்தேதி இந்திரா காந்தி தன்னுடைய 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம்பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாடப்புத்தகங்களை குறைந்த விலையில் வழங்குவது முதலியவை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப்பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக 336 ஓட்டுகளும், எதிராக 59 ஓட்டுகளும் பதிவாயின. "நெருக்கடி நிலைமை"யின் போது சில நன்மைகளும், பல தீமைகளும் நடந்தன.
அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். ஒழுங்காக வேலை பார்த்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல்லை. கள்ள மார்க்கெட் ஒழிந்தது. அதே சமயத்தில், சஞ்சய் காந்தி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் விருப்பப்படி எல்லாம் உத்தரவு பிறப்பித்தார். பிறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக, வட இந்தியாவில் கட்டாயமாக பலர் கருத்தடை செய்யப்பட்டனர்.
நெருக்கடி நிலை அமுலுக்கு வந்த ஐந்து மாத காலத்திற்குள் 37 லட்சம் பேர் கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்கும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். (நெருக்கடி நிலையின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி அப்போது செய்தி எதுவும் வெளியாகவில்லை. காரணம், அப்போது பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருந்ததால் அச்செய்திகளை வெளியிட அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். நெருக்கடி நிலை ரத்தான பிறகு இதுபற்றிய செய்திகள் வெளியாயின). நெருக்கடி நிலையை காமராஜர் எதிர்த்தார்.
திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து பகிரங்கமாகப் பேசினார். "நெருக்கடி நிலை" அமுலாகி 4 மாதத்தில் (1975 அக்டோபர் 2) காமராஜர் திடீரென்று காலமானார். அப்போது இந்திரா காந்தி விமானத்தில் வந்து காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண் கலங்கினார்.
இதற்கிடையே இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. "ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லும்" என்று 1975 டிசம்பர் 19_ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 1976 மார்ச்சில் முடிவடைவதாக இருந்தது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தை நீடித்து, தேர்தலை தள்ளிவைக்க இந்திரா விரும்பினார்.
"தேர்தலை தள்ளி வைக்க வேண்டாம். இப்போதே நடத்துவது நல்லது" என்று சில மந்திரிகள் யோசனை கூறினார்கள். அதை இந்திரா ஏற்கவில்லை. "நெருக்கடி நிலை காலவரம்பு இன்றி நீடிக்கவேண்டும்" என்று சஞ்சய் காந்தி வற்புறுத்தினார். அதை ஏற்று பாராளுமன்ற தேர்தலை இந்திரா தள்ளிவைத்தார். அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
நெருக்கடி நிலையின்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. நெருக்கடி நிலையை முதல்_அமைச்சர் கருணாநிதி எதிர்த்தார். இதன் காரணமாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு 1976 ஜனவரி மாதம் 31_ந்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் நடத்த முடிவு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 1 ஆண்டு கழிந்தது.
அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திரா காந்தி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தினால் தனக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினார். 1977 ஜனவரி 18_ந்தேதி ரேடியோவில் பேசுகையில் "பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். சிறையில் இருக்கும் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்" என்று அறிவித்தார்.
                                          (தொடரும்) 
நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை  உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

செவ்வாய், 16 நவம்பர், 2010

இவைகளை சன் டி.வி.,நிறுவனம் வாங்கினால்.....



ஸ்பைஸ் ஜெட்டின்  பெரும்பான்மையான பங்குகளை சன் டி.வி. அதிபர் க(ல்)லா நிதிமாறன் வாங்கிட்டாராம்.தொ(ல்)லைகாட்சி, சினிமா இப்போது விமான போக்குவரத்து இனி இவர் கையில்.  இப்படியே போனால்.....நகைச்சுவையாக யோசித்ததில்.......


வங்காள விரிகுடா கடலை சன் நிறுவனம் வாங்கியுள்ளது.இனிமேல் அந்தப்பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் ஆங்காங்கே கடலில் இருக்கும்  டோல் சாவடியில்    சன்னுக்கு சந்தா செலுத்த வேண்டுகிறோம். மீறி சந்தா செலுத்தாமல் பயணிக்கும் கப்பல்களில் ஓட்டை போடப்படும் என்று எச்சரிக்கிறோம்.


தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் உட்பட இந்தியா முழுவதுமுள்ள ஒயின் ஷாப்புகளை  சன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளது. இனி சரக்குகள் பாண்டிச்சேரி விலைக்கே கிடைக்கும்(பாண்டிச்சேரியில்). மற்ற இடங்களில் பாண்டிச்சேரி விலையைவிட பத்துரூபாய் குறைவாக கிடைக்கும். முரசொலிமாறன், கலாநிதிமாறன்,தயாநிதிமாறன் ஆகியோரின் பிறந்தநாளுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக  பாதி விலைக்கு சரக்குகள் கிடைக்கும்.


தென்னிந்திய ரயில்வே துறையை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. இனி பயணிகள்  ரயிலுக்காக காத்திருக்கும் வேளையில் சன் பிச்சர்சின் படங்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் இலவசமாக காண்பிக்கப்படும். ஏதாவது தடங்கலினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பணம் திருப்பித்தரமாட்டாது. பதிலாக....ஒருமாதத்திற்காக சன் டி.டி.ஹெச்சிற்கு ரீசார்ஜ் செய்து தரப்படும்.


இந்தியா முழுவதும் காற்று உரிமையை சன் நிறுவனம் இயற்கையிடமிருந்து வாங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கான 20 கிலோ காற்று அடைக்கப்பட்ட பேக்கேஜின் சலுகை விலை ரூபாய் இருநூறு மட்டுமே.....ஒரு வருடத்திற்கான காற்றின் சலுகை விலை ரூபாய் 2000  மட்டுமே.
எச்சரிக்கை: எப்போது கடைசியாக காற்று ரீசார்ஜ் செய்துள்ளோம் என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. முன் எச்செரிக்கையில்லாமல்  காற்று துண்டிக்கப்படும். அப்படி துண்டிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ சன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த குளறுபடிகளை தவிர்க்க முப்பது வருடத்திற்கான ஆயும் சந்தா பெக்கேஜ்ஜை வெறும் ஐம்பது ஆயிரத்துக்கு பெற்றிடுங்கள். ஆயுள் சந்தா முடியும் முன் நீங்கள் இறந்து விட்டால் மீதமுள்ள காற்று உங்கள் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 

மேலும் விரிவான விளக்கங்களை பெற 000-0000-000 (TOLL FREE) என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள். உங்களுக்கு பதிலளிக்க சுமார் 50,000 ரோபோக்களை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

திங்கள், 15 நவம்பர், 2010

அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி?


வங்காளதேச விடுதலையைத் தொடர்ந்து புகழேணியின் உச்சியில் இருந்த இந்திராவுக்கு எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவருடன் போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ராஜ்நாராயண் "அரசியல் கோமாளி" என்று வர்ணிக்கப்பட்டவர். தேர்தலில் வெற்றி பெற இந்திரா காந்தி ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 1975 ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். "இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது" என்பதே அந்தத் தீர்ப்பு.
 இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்தையும் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அடையச் செய்தது.
 
தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்ததாவது:_ "மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25_ந்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்திரா மனு தீர்ப்புக் கூறப்பட்ட அரை மணி நேரத்திற்கெல்லாம், "தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும்" என்று கோரி இந்திரா காந்தி சார்பில் நீதிபதி சின்கா முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு தீர்ப்பை அமுல் நடத்துவது இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்த இருபது நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.

இந்திரா காந்தி மந்திரிசபையில் மூத்த மந்திரிகளாக இருந்த ஜெகஜீவன்ராம், சவான், உமாசங்கர், தீட்சித், பிரமானந்த ரெட்டி, சங்கர் தயாள் சர்மா, இ.காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஆகியோர், "அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா காந்தி அப்பீல் செய்ய இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இந்திரா காந்தி தலைமையில் நாங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்கும், ஸ்திரத் தன்மைக்கும் அவர் தலைமை அவசியமானது" என்று அறிக்கை வெளியிட்டனர்.
அப்போதைய ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய், காஷ்மீரில் தங்கியிருந்த ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்து, "கோர்ட்டு தீர்ப்புக்குத் தலைவணங்கி இந்திரா பதவி விலக வேண்டும்" என்று வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிரபல வழக்கறிஞர் பல்கிவாலா தாக்கல் செய்தார். மனுவை ஜுன் 23_ந்தேதி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, மறுநாள் தீர்ப்புக் கூறினார்.
தீர்ப்பு விவரம் வருமாறு:_ "அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு கூறப்படும் வரை அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பின் அமுலை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிறுத்தி வைக்கிறோம். அதாவது, இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை." இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதால், இந்திரா காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

இந்திரா காந்தி மத்திய மந்திரிகளையும், இ.காங்கிரசைச் சேர்ந்த முதல்_மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். 

"நீங்கள் ராஜினாமா செய்தால் இந்தியா முழுவதும் குழப்பங்கள் ஏற்படும். இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்படும். எனவே பொறுமையுடன் இருங்கள். நான் இந்திய அரசியல் சட்டத்தை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்" என்று கூறினார் ரே. அவர் அரசியல் சட்டத்தில் நிபுணர். மீண்டும் அரசியல் சட்டத்தை நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர் இந்திரா காந்தியை சந்தித்து, "நீங்கள் பதவியில் நீடிக்கலாம் என்று கோர்ட்டு அறிவித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். அப்போது, உளவுத்துறையிடம் இருந்து தனக்கு வந்துள்ள தகவல்களை அவரிடம் இந்திரா கொடுத்தார்.

இந்திரா காந்திக்கு எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், இந்திரா காந்தியை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. "நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி" என்றார் ரே.
நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார்.இறுதியில், "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். (ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29_ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். போராட்டத்தை நடத்துவதற்காக, மொரார்ஜி தேசாய் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.)
பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

"உள்நாட்டுக் கலவரம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டார். பிறகு, "நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்" என்று தெரிவித்தார். இந்தக் கால கட்டத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கு கொண்டிருந்தார்.

தாயாருக்கு அவர் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். நெருக்கடி நிலைமை பிரகடனம் ஆகப்போகிறது என்று தெரிந்து கொண்டதும் அவர் தாயாரை சந்தித்தார். "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள். எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார்.

இந்திரா காந்தி இதற்குத் தயங்கினார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு தலைவர்களை கைது செய்யவும், பத்திரிகைத் தணிக்கைக்கும் சம்மதித்தார். 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாசரை, நள்ளிரவில் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர். "விநாசகாலே விபரீத புத்தி" ("கெட்ட காலம் வந்துவிட்டால் விபரீத புத்திதான் வரும்") என்று கூறியபடி அவர் போலீசாருடன் சென்றார். மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதே, பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியோ, தலைவர்கள் கைது பற்றியோ செய்தி இடம் பெறக்கூடாது என்று சஞ்சய் காந்தி நினைத்தார். அதற்காக அவர் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். பத்திரிகைகள் அச்சாகத் தொடங்குவதற்கு முன், பத்திரிகை ஆபீசுகளுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அன்று காலை நாளிதழ்கள் வெளிவரவில்லை. ஜெனரேட்டர் வசதியுள்ள ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வெளிவந்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது மந்திரிகளுக்கு கூட தெரியாது! காலை 6 மணிக்கு மந்திரி சபை கூட்டம் இருப்பதாக காலை 5 மணிக்கு மந்திரிகளின் வீடுகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு மந்திரிகள் கூடினார்கள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது பற்றி இந்திரா விளக்கினார்.

"நெருக்கடி நிலையை காலதாமதமின்றி உடனடியாக பிரகடனம் செய்யவேண்டியிருந்ததால், மந்திரிசபை கூட்டத்தை முன்னதாகக் கூட்டி ஒப்புதல் பெற முடியவில்லை" என்று கூறிய இந்திரா, நள்ளிரவில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவித்தார். சில மந்திரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது என்றாலும் தங்கள் கருத்தை வெளியிட தைரியம் இன்றி மவுனமாக இருந்தனர். பின்னர், நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது குறித்து, ரேடியோவில் இந்திரா காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-

"மக்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது முதலே, அதற்கெதிராக சதி உருவாகி வந்தது. ஜனநாயகம் செயல்படுவதைச் சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நமது ராணுவத்தையும், போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் நெருக்கடி நிலையை ரத்து செய்யும் அளவுக்கு உள்நாட்டு நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும் என்று நம்புகிறேன்." இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்.
அதன்பிறகு மக்களிடம் நல்லபெயரெடுக்க இந்திரா கொண்டுவந்த இருபது அம்சத்திட்டம், தி.மு.க-ஆட்சி டிஸ்மிஸ் பற்றி விரைவில்......  
நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை  உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

ஞாயிறு, 14 நவம்பர், 2010

அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை


சந்தில் சிந்து பாடும் விருது


நான் சமீபத்தில் ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டிக்கு பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. நான் கேட்டு கொள்வதற்கு இணங்க ராசாவை நீக்க சொல்லி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பினார்கள். இதனால் தான் ராசா ராஜினாமா செய்துள்ளார் என்று கூறும் செல்வி ஜெயலலிதாவுக்கு....

சிறந்த பல்டியடிப்பவர் விருது


ராசா குற்றவாளியில்லை அதனால் ராஜினாமா பண்ண தேவையில்லை என்று கூறிவிட்டு, இப்போது பாராளுமன்றம் சிறந்தமுறையில் நடைபெறவேண்டி தம்பி ராசா ராஜினாமா செய்துள்ளார் என்று கூறும் கலைஞர் கருணாநிதிக்கு.....


சிறந்த பதிலடியாளர்  விருது


காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் என்று ஜெயலலிதா கூறியும் கூட்டணியில் இடமில்லை என்று கூறிய குலாம்நபி ஆசாத்துக்கு....
.
சிறந்த பேய்முழி முழிப்பவர்கள் விருது..


ஒருவேளை ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அண்ணா தி.மு.க-வோடு காங்கிரெஸ் கூட்டு வைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் வைகோ, கம்யூனிஸ்டுகளுக்கு......



சிறந்த அடங்கவே மாட்டேண்டா விருது


ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்குகொடுக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் EVKS. இளங்கோவனுக்கு

சிறந்த ஏமாளி விருது...


தன் சொந்த தம்பியும், அவரது மகனும் காங்கிரசில் சேர்வதை தடுக்க முடியாமல் ஏமாந்து போயிருக்கும் ராமதாசுக்கு....


சிறந்த மீடியா வெளிச்சம் பட்டவர் விருது


கடந்த ஒரு வாரமாக இந்தியாவிலிருக்கும் அனைத்து மீடியாவுமே வரிந்து கட்டிக்கொண்டு இவரை காட்டியதால் அ. ராசாவுக்கு....

மற்றவர்களுக்கான விருதுகள் பின்னர் அறிவிக்கப்படும். விருது பெற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம்.

சனி, 13 நவம்பர், 2010

மாறிவிட்ட பழமொழிகள்- மீள்பதிவு

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் மாறி அல்லது மருவி புது மொழிகளாகி விட்டது. சில பழமொழிகளின் உண்மையான அர்த்தங்களை தொகுத்து கொடுத்துள்ளேன்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு
இதன் அர்த்தம் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு என்பதல்ல....
ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

களவும் கற்று மற....
இதன் அர்த்தம் களவு, திருட்டு போன்றவைகளை கற்றுவிட்டு பின் மறக்கவேண்டும் என்பதல்ல...மாறாக,
களவு, திருட்டு போன்றவற்றை கற்க மற என்பதாகும். அதாவது களவும் கற்க மற...

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்
இதன் அர்த்தம் ஒருவன் ஏதாவது ஒன்றில் சிக்கி உண்மையை சொல்லாமல் இருந்தால் அவனை அடித்து நொறுக்கினால் உண்மையை சொல்வான் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல....
அடி... அதாவது இறைவனின் திருவடி அல்லது காலடி. ஒருவனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் அவன் இறைவனின் திருவடியில் சரணடைந்து விட்டால் இறைவனின் உதவி நமக்கு கிடைக்கும். இறைவனின் திருவடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்.

ஓன்று பட்டால் உண்டு வாழ்வு
இதன் அர்த்தம், நாம் ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கை உண்டு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும் கூட, உண்மையான அர்த்தம் அதுவல்ல...நம் வாழ்க்கையில் துன்பம், பசி பட்டினி, கஷ்டம், நஷ்டம் போன்ற ஏதாவது ஒன்றை பட்டால்தான் வாழ்க்கை கிடைக்கும். எதுவுமே படாவிட்டால் வாழ்க்கை கிடைக்காது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாகும்.

கல்லை கண்டால் நாயைக் காணாம் , நாயைக் கண்டால் கல்லைக் காணாம்
இதன் அர்த்தம், நாய் வரும்போது கல்லை காணாம், கல்கிடைக்கும் போது நாயை காணாம் என்பதல்ல..
தத்ரூபமாக வடிக்கப்பட்ட ஒரு நாயின் சிற்பத்தை பார்க்கும்போது, அதை நாயாக பார்த்தால் கல் மறைந்து நம் மனக்கண்ணில் நாயாக காட்சிதரும். மாறாக அந்த நாயின் சிற்பத்தை கல்லாக பார்த்தால், என்னதான் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தாலும் கல்தான் நம் மனக்கண்ணில் தெரியும் என்பதாகும். அதாவது, நாயக்கண்டால் கல்லை காணோம். கல்லைக்கண்டால் நாயை காணோம் என்பதாகும்


அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
இந்த பழமொழியின் அர்த்தம், அரசனன்று கொல்பவன் . அதாவது (அரசன்+அன்று)
கொல்பவன் அரசனன்று(அரசன் அல்ல அல்லது அரசன் இல்லை).
தெய்வமே நின்று கொல்லும்.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே...) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட....
இதன் அர்த்தம், அரசை அதாவது அரசமரத்தை நம்பி புருஷனை கைவிட்ட...என்பதாகும். அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு உண்டாகும் என்பது கிராமத்து வழக்கம்

வெள்ளி, 12 நவம்பர், 2010

எனக்கு பிடித்த ரஜினி வில்லனாக நடித்த படம் (தொடர் பதிவல்ல...)

ரஜினிகாந்த் வில்லனாக நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம்

அவர்கள்
ரஜினிகாந்த் நல்லவனாக நடித்து, காதலித்து தோல்வியுற்றிருக்கும் சுஜாதாவை திருமணம் செய்துகொள்வார். பின்னர் அவரது சைக்கோத்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவார். அப்போது அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கடுமையான சூடு.இந்தப்படம் வெளிவந்திருக்கும் நாளில், ஐயோ இப்படி ஒரு கணவன் நமக்கு வாய்க்கக்கூடாதே என்றுதான் எல்லா பெண்களும் நிச்சயமாக நினைத்திருப்பார்கள் .ராமநாதன் என்னும் கேரக்டரில் கலக்கியிருப்பார். ரஜினி மிக அழகாகவும்,ஸ்டெயிலாகவும் இருப்பார்.(நான் பிறந்த ஆண்டான)  1977- ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தை கே.பாலச்சந்தர் தயாரித்து இயக்கியிருப்பார். எம். எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார்.


வியாழன், 11 நவம்பர், 2010

கிரந்த எழுத்துக்களும் சில பெயர்களும்

ஸ ஷ க்ஷ ஜ ஹ போன்ற கிரந்த எழுத்துக்களை நீக்கிவிட்டு புதிதாக சில எழுத்துக்களை சேர்க்க போகிறார்களாம். மேற்கண்ட எழுத்துக்கள் தமிழோடு கலந்துவிட்ட எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை நீக்கிவிட்டால் பிரபலமான பெயர்களை இனி எப்படி அழைப்பது. ஒரு கற்பனை.....
ஸ்டாலின்- ச்டாலின்
ஜெயலலிதா- செயலலிதா
எம்.ஜி.ஆர்- எம் .சி.ஆர்.
ரஜினி- ரசினி
விஜயகாந்த்- விசயகாந்த் (நிறைய விசயங்களை புள்ளி விவரத்துடன் பேசுவதால் இந்த பெயரும் பொருத்தம்தான்)
சிவாஜி - சிவாசி
ஜெமினி- செமினி
வாஜ்பாய்- வாச்பாய்
விஜய்- விசய்
பாரதி ராஜா-பாரதிராசா
பாக்யராஜ்- பாக்யராசு
தாஜ்மஹால்- தாச்மகால்
மும்தாஜ்- மும்தாச்
ஷாஜஹான்-சாசகான்
மஜ்னு- மச்னு
ஜூலியட்-சூலியட்
இப்படியே போனால் பட்டியல் நீளும்.பட்டியல் போடுவதற்கு இந்த பதிவு போதாது என்பதால் இத்துடன் சுபம்  போட்டுவிடுகிறேன்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

விடை சொல்லமுடியா வினாக்கள்.

சில கேள்விகளுக்கு நம்மால் விடை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சில கேள்விகள் இங்கே?

மத்திய அரசுக்கு கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை?

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவர்?

ராமதாஸ் அடுத்து எந்த கட்சியுடன்                                                                                   கூட்டணி வைப்பார்? எப்போது அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவார்?

ஜெயலிலிதா எப்போது கொடனாட்டிலிருந்து இறங்குவார்?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?

தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வே ஆட்சியை பிடித்தால் யார் முதலமைச்சர்?

இந்தியாவின் உண்மையான பிரதமர் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

விஜயகாந்தின் அடுத்த கூட்டணியும் மக்களோடுதானா?

திங்கள், 8 நவம்பர், 2010

கண்ணீரில் ஒரு கவிதாஞ்சலி

 அன்றைய காலக்கட்டத்தில் கலைஞரின் வசனம் மிக புகழ் பெற்றது. இவரின் வசனத்திற்க்காகவே படங்கள் வெற்றியை ஈட்டின என்று சொன்னால் மிகையில்லை.இவர் வசனமெழுதும் படங்கள் வெளிவந்தபோது கதாநாயகனுக்கு இணையாக இவரது பெயரையும் போட்டுதான் விளம்பரப்படுத்தினார்கள். அன்றைய இளைஞர்களை இவரது வசனம் ஈர்த்து திரையரங்குகளை நிரப்பின. திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு இவரது வசனங்கள் பெரிதும் துணை புரிந்தது. இன்று சினிமாவில் இருக்கும் பெருவாரியான நடிகர்களுக்கு இவரின் பராசக்தி, மனோகரா ஆகிய படங்களின்  வசனமும்,  வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனமும்தான் பாலபாடம், நுழைவுச்சீட்டு. அடடடா இதே ஏன்பா இப்ப சொல்லறே? இன்னைக்குத்தான் அவர் வசனம்  எழுதிய படங்களை கட்சிக்காரர்கள் சேர்ந்து கூட பத்துநாள் ஓட்ட  முடியலியேன்னு சொல்றீங்களா? உண்மைதான். ஆனால், விஷயம் இதுவல்ல....
திரைப்பட வசனங்கள் மட்டுமல்ல....கலைஞர் படித்த கவிதாஞ்சலியும் பிரசித்தி பெற்றதுதான். ஆம்.....தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது சென்னை வானொலியில் கலைஞர் அவர்கள் வாசித்த கவிதாஞ்சலி பலபேரின் கண்களை குளமாக்கியது. இதோ அந்த கவிதாஞ்சலி இன்றைய தலைமுறையினருக்காக....

சனி, 6 நவம்பர், 2010

கமலஹாசன் ஒரு சகாப்த்தம்


இயற் பெயர்: கமல்ஹாசன்
பிறப்பு: நவம்பர் 07 1954
பரமக்குடி ,
தொழில்: நடிகர்
நடிப்புக் காலம் :1960-தற்போது

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
* களத்தூர் கண்ணம்மா
* 16 வயதினிலே
* வறுமையின் நிறம் சிகப்பு
* மூன்றாம் பிறை (திரைப்படம்)
* சலங்கை ஒலி
* ஏக் துஜே கே லியே (ஹிந்தி)
* ஸ்வாதி முத்யம் (தெலுங்கு)
* நாயகன்
* சத்யா
* சாகர் (ஹிந்தி)
* அபூர்வ சகோதரர்கள்
* குணா
* தேவர் மகன்
* அவ்வை சண்முகி
* ஹே ராம்
* அன்பே சிவம்
* விருமாண்டி
* இந்தியன்
* ஆளவந்தான்
* மைக்கேல் மதன காமராஜன்
* தெனாலி
* மகாநதி
* நம்மவர்
* குருதிப்புனல்
* வேட்டையாடு விளையாடு
* தசாவதாரம்
* உன்னைப்போல் ஒருவன்


திரைப்படக் குறிப்பு

கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
* 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
* 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

நடித்துள்ள படங்கள்

* 2009 - ஈநாடு (தெலுங்கு)
* 2009 - "உன்னைப்போல் ஒருவன்"
* 2008 - தசாவதாரம் (தெலுங்கு)
* 2008 - தசாவதாரம்
* 2006 - வேட்டையாடு விளையாடு
* 2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)
* 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)
* 2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
* 2004 - விருமாண்டி (த) (எ) (இ)
* 2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)
* 2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)
* 2003 - அன்பே சிவம் (எ)
* 2002 - பஞ்சதந்திரம்
* 2002 - பம்மல் கே.சம்பந்தம்
* 2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)
* 2001 - லேடீச் ஒன்லி
* 2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)
* 2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)
* 2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
* 2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)
* 2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)
* 2000 - தெனாலி
* 2000 - தெனாலி (தெலுங்கு)
* 2000 - ஹே ராம் (த) (எ) (இ)
* 2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)

தொண்ணூறுகள்

* 1998 - காதலா காதலா
* 1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
* 1996 - அவ்வை சண்முகி
* 1996 - பாமனெ (தெலுங்கு)
* 1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
* 1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
* 1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
* 1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
* 1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
* 1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)
* 1995 - சதி லீலாவதிi (த)
* 1994 - நம்மவர்
* 1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
* 1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
* 1994 - மகாநதி (திரைப்படம்) (b)
* 1993 - கலைஞன்
* 1993 - மகராசன் (த)
* 1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
* 1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
* 1992 - சிங்காரவேலன்
* 1991 - குணா
* 1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
* 1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
* 1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
* 1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)

எண்பதுகள்

* 1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
* 1989 - வெற்றி விழா
* 1989 - சாணக்யன் (மலயாளம்)
* 1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
* 1989 - அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
* 1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
* 1988 - உன்னால் முடியும் தம்பி
* 1988 - சூர சம்ஹாரம்
* 1988 - டெய்சி (மலையாளம்)
* 1988 - சத்யா (த)
* 1988 - பேசும் படம்
* 1987 - புஷ்பக் (ஹிந்தி)
* 1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)
* 1987 - புஷ்பக விமானா (கன்னடம்)
* 1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
* 1987 - நாயக்குடு (தெலுங்கு)
* 1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)
* 1987 - நாயகன்
* 1987 - பேர் சொல்லும் பிள்ளை
* 1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
* 1987 - விரதம் (மலயாளம்)
* 1987 - காதல் பரிசு
* 1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
* 1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
* 1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
* 1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
* 1986 - விக்ரம் (த)
* 1986 - நானும் ஒரு தொழிலாளி
* 1986 - சிப்பிக்குள் முத்து
* 1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - ஹிந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்
* 1986 - மனக்கணக்கு (நட்புக்காக)
* 1985 - தேகா பியார் துமாரா (ஹிந்தி)
* 1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
* 1985 - மங்கம்மா சபதம்
* 1985 - ஜிராப்டார் (ஹிந்தி)
* 1985 - சாகர் (ஹிந்தி)
* 1985 - உயர்ந்த உள்ளம்
* 1985 - அந்த ஒரு நிமிடம்
* 1985 - காக்கிச் சட்டை
* 1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.
* 1984 - கரிஷ்மா (ஹிந்தி)
* 1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
* 1984 - ராஜ் திலக் (ஹிந்தி)
* 1984 - யாட்கார் (ஹிந்தி)
* 1984 - ஏக் நை பகெலி (ஹிந்தி)
* 1984 - ஜே தேஷ் (ஹிந்தி)
* 1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
* 1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
* 1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
* 1983 - சத்மா (ஹிந்தி)
* 1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
* 1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)
* 1983 - சினேக பந்தம் (மலையாளம்)
* 1983 - சட்டம்
* 1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
* 1983 - சாரா ஸீ சிந்தகிi (ஹிந்தி)
* 1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)
* 1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
* 1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)
* 1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
* 1982 - பகடை பன்னிரெண்டு
* 1982 - ஜே தோ கமல் ஹொகயா (ஹிந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் ஹிந்தித் தயாரிப்பு.
* 1982 - ராணித் தேனி (நட்புக்காக)
* 1982 - எழம் ராத்திரி (மலையாளம்)
* 1982 - சகலகலா வல்லவன்
* 1982 - சனம் தேரி கசம் (ஹிந்தி)
* 1982 - ஷிம்லா ஸ்பெஷல்
* 1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக ஹிந்தியில் மறுதயாரிப்பு.
* 1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)
* 1982 - அந்தகடு (தெலுங்கு)
* 1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)
* 1982 - வாழ்வே மாயம்
* 1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
* 1981 - எல்லாம் இன்பமயம்
* 1981 - டிக்! டிக்! டிக்!
* 1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
* 1981 - சங்கர்லால்
* 1981 - சவால்
* 1981 - கடல் மீன்கள்
* 1981 - எக் துஜே கெ லியே (ஹிந்தி)
* 1981 - ராஜ பார்வை (த)
* 1981 - ராம் லக்சுமன்
* 1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)
* 1981 - மீண்டும் கோகிலா
* 1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
* 1981 - தில்லு முல்லு (நட்புக்காக)
* 1980 - நட்சத்திரம் (நட்புக்காக)
* 1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)
* 1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)
* 1980 - வறுமையின் நிறம் சிகப்பு
* 1980 - குரு
* 1980 - உல்லாசப் பறவைகள்

எழுபதுகள்

* 1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)
* 1979 - நீல மலர்கள் (நட்புக்காக)
* 1979 - மங்கள வாத்தியம்
* 1979 - கல்யாணராமன் (தமிழ்)
* 1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
* 1979 - இடிகாதா காது (தெலுங்கு)
* 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
* 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்
* 1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
* 1979 - நினைத்தாலே இனிக்கும்
* 1979 - தாயில்லாமல் நான் இல்லை
* 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
* 1979 - நீயா!
* 1979 - சிகப்புக்கல் மூக்குத்தி
* 1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
* 1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
* 1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
* 1978 - மதனோல்சவம் (மலையாளம்)
* 1978 - யீட்ட (மலையாளம்)
* 1978 - அவள் அப்படித்தான்
* 1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!
* 1978 - சிகப்பு ரோஜாக்கள்
* 1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)
* 1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
* 1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
* 1978 - இளமை ஊஞ்சலாடுகிறது
* 1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)
* 1978 - நிழல் நிஜமாகிறது
* 1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
* 1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
* 1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்
* 1977 - நாம் பிறந்த மண்
* 1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
* 1977 - ஆடு புலி ஆட்டம்
* 1977 - 16 வயதினிலே
* 1977 - ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
* 1977 - நிறைகுடம் (மலயாளம்)
* 1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
* 1977 - கபிதா (வங்காளம்)
* 1977 - உன்னை சுற்றும் உலகம்
* 1977 - சிறீதேவி (மலையாளம்)
* 1977 - மதுர சொப்னம் (மலையாளம்)
* 1977 - அவர்கள் (நட்புக்காக)
* 1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)
* 1977 - சிவதாண்டவம் (மலையாளம்)
* 1977 - உயர்ந்தவர்கள்l
* 1976 - லலிதா (நட்புக்காக)
* 1976 - மோகம் முப்பது வருஷம்
* 1976 - மூன்று முடிச்சு
* 1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)
* 1976 - பொன்னி (மலையாளம்)
* 1976 - இதய மலர்
* 1976 - குமார விஜயம்
* 1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
* 1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)
* 1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
* 1976 - சத்தியம்
* 1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)
* 1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)
* 1976 - மன்மத லீலை
* 1976 - சமசியா (மலையாளம்)
* 1976 - அப்பூப்பான் (மலையாளம்)
* 1976 - அக்னி புஷ்பம் (மலயாளம்)
* 1975 - அந்தரங்கம்
* 1975 - ராசலீலா (மலையாளம்)
* 1975 - மற்றொரு சீதா (மலையாளம்)
* 1975 - திருவோணம் (மலையாளம்)
* 1975 - அபூர்வ ராகங்கள்
* 1975 - மாலை சூட வா
* 1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
* 1975 - பட்டிக்காட்டு ராஜா
* 1975 - தங்கத்திலே வைரம்
* 1975 - மேல்நாட்டு மருமகள் (வானி கண்பதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
* 1975 - தேன் சிந்துதே வானம்
* 1975 - ஆயிரத்தில் ஒருத்தி
* 1975 - பட்டாம்பூச்சி
* 1975 - சினிமா பைத்தியம்
* 1974 - பணத்துக்காக
* 1974 - ஆய்னா (ஹிந்தி)
* 1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)
* 1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
* 1974 - அவள் ஒரு தொடர்கதை
* 1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)
* 1974 - அன்புத் தங்கை
* 1974 - கன்யாகுமாரி (மலையாளம்)
* 1974 - நான் அவனில்லை
* 1974 - குமாஸ்தாவின் மகள்
* 1974 - பருவ காலம்
* 1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்
* 1973 - அரங்கேற்றம்
* 1972 - குறத்தி மகன்
* 1970 - மாணவன்

அறுபதுகள்

* 1963 - ஆனந்த ஜோதி
* 1963 - வானம்பாடி
* 1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)
* 1962 - பாத காணிக்கைi
* 1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
* 1960 - களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்

* ராஜ பார்வை
* விக்ரம்
* அபூர்வ சகோதரர்கள்
* சத்யா
* கடமை கண்ணியம் கட்டுப்பாடு
* மைக்கேல் மதன காமராஜன்
* குணா
* தேவர் மகன்
* குருதிப்புனல்
* ஹே ராம்
* விருமாண்டி
* மகளிர் மட்டும்
* நளதமயந்தி
* மும்பை எக்ஸ்பிரஸ்
* உன்னை போல் ஒருவன்

கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்

* 1999 - விவி நெ.1 (இந்தி)
* 1997 - விராசாத் (இந்தி)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்

* 1998 - Chachi 420
* 2000 - ஹே ராம்
* 2004 - விருமாண்டி

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

* 2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)
* 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
* 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
* 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
* 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
* 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
* 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
* 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
* 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
* 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
* 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
* 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
* 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
* 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
* 1974 - ஆய்னா (நடனங்கள்)
* 1985 - ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)



விருதுகள்

* மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
* சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
* 18 பிலிம்பேர் விருதுகள்.
* பத்மஸ்ரீ விருது (1990)
* சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)