வியாழன், 31 மார்ச், 2011

கேப்டன் பிளீஸ்......என்னையும் அடிங்க.....


ஒரு கவிதை(மாதிரி)

வாக்களிப்பதற்காக
தேர்தலன்று
 ஒரே ஒரு நாள்
 மட்டும் 
அரசியல்வாதிகளிடம்
நாம் லஞ்சம் 
வாங்கியதன்
விளைவு....
வேலை நடக்க
அடுத்த அஞ்சு வருஷம்
 அவர்களிடம் லஞ்சம்
 கொடுத்து தொலைக்க
 வேண்டியிருக்கிறது....

ஒரு நகைச்சுவை

அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....


அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது

 
ஒரு அறிவிப்பு 
 
இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள்  சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள் 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக என் முந்தைய பதிவு 

என் கனவில் வந்து அழுத எம்.ஜி.ஆர். -உண்மையை போட்டு உடைத்த விஜயகாந்த்

என் கனவில் வந்து அழுத எம்.ஜி.ஆர். -உண்மையை போட்டு உடைத்த விஜயகாந்த்

இப்போது ஆனந்தவிகடனில் வெளிவரும் பேட்டியை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு காமடி பண்ணுவதே ட்ரென்ட் ஆகிவிட்டது. இதோ...அதே பாணியில் கேள்விகளை மட்டும் விகடனிலிருந்து சுட்டு பதில்களை என் பாணியில் யோசித்ததின் விளைவு இந்த பதிவு..... சி.பி., நல்லநேரம் சதீஷ் குமார் ஆகியோர் மன்னிப்பார்களாக...

 1.மக்களுடன் கூட்டணி என சொன்ன நீங்க அ.தி.மு.க வுடன் கூட்டணி போட்டது ஏன்..?

நான் மக்களுடனும்,தெய்வத்துடனும்தான் கூட்டணி என்ற கொள்கையிலிருந்து மாறாமல் தான் இருந்தேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி நல்லா தூங்கிட்டு இருந்தேன். அப்ப என் கனவுல இதயதெய்வம், புரட்சி தலைவர் வெள்ளை எம்.ஜி.ஆர்-ரும், ஜானகி அம்மையாரும் ஒண்ணா வந்து....நீ அண்ணா.தி.மு.க-வோடு தான் கூட்டணி வச்சுக்கணும். அழிந்து வரும் என் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கணும்ன்னு ஒரே அழுகை. அதான் நான் தெய்வமா மதிக்கிற எம்.ஜி.ஆர்- அவர்களே சொல்லிட்டாரேன்னு தெய்வத்தோட கட்சியுடன் கூட்டணி வச்சுக்கிட்டேன்.



2. ''அ.தி.மு.க-வுடன் நீங்கள் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகிறதே?''

இந்த கேள்வியை கேட்டு நீங்க என்னை கேவலபடுத்தல...அறிஞர் அண்ணாவை கேவலப்படுத்துறீங்க....பின்னே...அவரோட ஆவி சொன்னதாலதான கூட்டணி வச்சிருக்கேன். இதை எப்படி சந்தர்ப்ப வாதம்ன்னு சொல்ல முடியும்


'3. 'நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் போக மாட்டீர்கள் என்றும் அழகிரி சத்தியம் செய்து வந்தாரே?''

நான் என்னிக்காவது மானஸ்தன்னு அழகிரிகிட்ட சொல்லியிருக்கேனா? நான் மானஸ்தன்னு அவரா நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்றது?




4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?''

எங்கள் கூட்டணி கட்சியினர் அனைவரும் போயஸ் கார்டனில் போய் ஒன்றாக பேசினோமே...அதுவே பெரிய சாதனைதானே.....போயஸ் கார்டனில் போய் பேசும் வாய்ப்பு காலம் காலமாக இருந்த வைகோவிற்கே கிடைக்கலியே...



5. ''தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?'' 

அதுக்காக நீரா ராடியா இங்கே வந்து வாக்களிக்க முடியாதே...



6. ''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?''

வெயில் கடுமையா இருக்குன்னு கூட ரெண்டு ரவுண்டு ஊத்திக்கு போறேனா...அதுனால மக்கள்லாம் என் கண்ணுக்கு தெளிவில்லாமல் தெரியுறாங்க...அவங்க மனோபாவத்த கணிக்கவே முடியல...

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக முந்தைய பதிவு 

புலன் விசாரணை பாகம்- 6

புதன், 30 மார்ச், 2011

புலன் விசாரணை பாகம்- 6

முந்தைய பாகங்கள் 



"ஹலோ மிஸ்டர் இன்ஸ்பெக்டர்....நீங்க பெரிய போலீஸ் அதிகாரியா இருக்கலாம்...அதுக்காக இன்னைக்கு சொசைட்டில பெரிய அந்தஸ்துல இருக்க என்கிட்டே எது வேணும்னாலும் கேக்கலாம்ன்னு நினைக்காதீங்க..."

"நான் ஒன்னும் தப்பா கேக்கலியே? எங்களுக்கு கிடைச்ச தகவல்கள் அடிப்படியிலதான் கேக்கிறேன்."

"திரும்ப திரும்ப அதையே  சொல்லிட்டு இருக்காதீங்க .....என் மேல குற்றம் சுமத்தும் அளவுக்கு அப்படி என்ன தகவல தெரிஞ்சுக்கிட்டீங்க?....உண்மையான கொலைகாரன கண்டு பிடிக்க முடியாட்டி வேலைய விட்டு போயிடுங்க....உங்களுக்கு கேச குளோஸ் பண்ணி மேலிடத்துல நல்ல பேரு வாங்கனும்ன்னு நினைச்சீங்கன்னா பெட்டி கேஸ்லையும் வழிப்பறி, பிக்பாக்கெட் கேஸ்லையும் எந்த இளிச்சவாயனாவது மாட்டிருப்பான். அதுல ஒருத்தன பிடிச்சு இவன்தான் கொலைகாரன்னு சொல்லி கேசை குளோஸ் பண்ணுங்க...போங்க...போயி அந்த வேலைய பாருங்க ...இன்னொரு தடவை இப்படி சொல்லிட்டு இங்க வராதீங்க...."

"சார் பேசி முடிச்சுட்டீங்களா? இப்ப நான் பேசறேன்....உங்களுக்கும் கொலையான நடிகைக்கும் கால்சீட் விசயத்துல வாக்குவாதம் வந்துச்சா?"

"ஆமாம்"

"அப்போ நீங்க என்ன சொன்னீங்க அவங்கள பார்த்துன்னு நினைவிருக்கா?"

"என்ன சொன்னேன்னு நீங்களே சொல்லுங்களே...."


"நன்றி கெட்டவ நீ....நான் அறிமுகப்படுத்தினேன்....இன்னைக்கு எனக்கு எதிரா பேசுறியா?உன்னை ஒழிக்காம விடமாட்டேன்.  நீ எப்படி பீல்டுல இருக்கேன்னு பார்த்திடுறேன்னு நீங்க அவங்கள மிரட்டியதா......"

ரெட்டி கலகலவென்று சிரித்தார்....

"இதைத்தான் எங்களுக்கு தகவல் கிடைச்சிச்சு தகவல் கிடைச்சிச்சுன்னு திரும்ப திரும்ப சொன்னீங்களா? சரியான சிரிப்பு போலீசா இருக்கீங்க....வழக்கமா அது ஆத்திரத்துல சொல்ற வார்த்தை....ஒரு பையன பார்த்து அவனோட அப்பா நீ செத்து தொலைடான்னு சொன்னா அவரு மனப்பூர்வமா சொல்லிட்டாருன்னு அர்த்தமா? நானும் அவள என் குழந்தை  மாதிரிதான் பார்த்தேன். அன்னைக்கு அவ பன்னிய குழப்பத்துல எனக்கு கோபம் வந்துடுச்சு...அதான் அப்படி சொன்னேன்.   இதப்போயி சீரியஸா எடுத்துக்கு"

"சார்...வழக்கமா நீங்க அப்படி சொன்னதுக்கப்புறம் அவங்க உயிரோட இருந்தாங்கன்னா பிரச்சினையே இல்லை. இப்ப செத்து போயிட்டாங்களே....அப்ப நாங்க எல்லோரையும் சந்தேகப்படும் மாதிரிதான் வரும்."

"நீங்க சந்தேகப்படுறது ஒன்னும் தப்பில்லை. ஆனா எல்லோரையும் சந்தேக படக்கூடாதுன்னு சொல்றேன்...சரி அன்னிக்கு நடந்தத சொல்றேன்...வேணாம்... நீங்களே கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்....நேரா விசயத்திற்கு வாரேன்...நான் அப்படி சொல்லிட்டு போன ரெண்டாவது நாளு சூட்டிங்காக வெளிநாடு போயிட்டேன். அங்கே போன அடுத்த நாளு எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தா நடிகை ஸ்ரீமதி....அதுல....சார் நடந்த குழப்பத்துக்கு நான் காரணமில்லை.என்னுடைய பி.ஏ. தயாளன் தான் காரணம்...உங்களிடம் கால்ஷீட் கொடுத்த   அதே தேதியில்  அந்த படத்துக்கும் கால்சீட் கொடுத்துட்டான். இதை கண்டுபிடிச்ச நான் அவனை என்னிடமிருந்து துரத்திட்டேன்னு சொல்லிருந்தா....அதோட அவள் மேல இருந்த கோபமெல்லாம் போயிருச்சு...அதுக்கப்புறம் நானே அவளுக்கு ரிப்ளை மெயில் அனுப்பினேன் .பரவாயில்லமா...நீ அந்த படத்துல நடி...நான் மத்தவங்க சம்பந்த பட்ட போர்சன முடிச்சுடுறேன். அப்புறம் உன் சம்பந்தப்பட்ட காட்சிகளா எடுக்கலாம்ன்னு....   சந்தேகமிருந்தா நீங்களே பாருங்க....."

தன் லேப்டாப்பை உயிர்பித்து மின்னஞ்சலை திறந்து காட்டினார்...

"சார்...அவங்களுக்கு குடும்பம் இருக்கா...அவங்கள..எங்கேருந்து நடிக்க அழைச்சுக்கு வந்தீங்க...."

"அவளுக்கு குடும்பம் இருந்தது...சமீபத்துலதான் அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்  இறந்தாங்க....ஒரு அண்ணன் மட்டும் கிராமத்துல இருக்காரு....ஆனா அவளுக்கும், அவ  குடும்பத்துக்கும் என்னைக்கு அவ நடிக்க வந்தாளோ....அன்னிக்கே தொடர்பு விட்டு போச்சு...யாரோடவும் பேச்சு வார்த்தையில்லை."

"அப்படியா...இப்ப அவ அண்ணன் எங்கே இருக்காரு..."

"புதுக்கோட்டை பக்கத்துல அரசர்குளம் என்ற கிராமத்துல....."

"ரொம்ப நன்றி சார்...."

----------------------------------------------------

போலீஸ் ஸ்டேசன்..

"என்னய்யா கேசு இப்படி இழுத்துக்கே போகுது....எதுக்கும் அவ பி.ஏ. வை கொஞ்சம் விசாரிச்சிடலாமா?"

"அவன் இப்ப எந்த மூலையில இருக்கானோ...."

"இங்கேதான் எங்கேயாவது இருப்பான்..அவன் அட்ரஸ் வாங்குறது ஒன்னும் பெரிய விசயமில்லை..."

"சார் நான் ஒன்னு சொல்லட்டுமா?"

"சொல்லுங்க..."

 "அவ அண்ணன் கிராமத்துல இருக்காருன்னு ரெட்டி சொன்னாருல்லியா? நாம ஏன் அவர விசாரிக்க கூடாது..."

"அங்கே போனா மட்டும் என்ன தகவல் கிடைச்சிடப்போகுது....அவளோட எங்களுக்கு ஒட்டுமில்லை உறவுமில்லைன்னு  சொல்ல போறான் அவ அண்ணன்..."

"இருந்தாலும் போயி பார்க்கலாம்...குடும்ப பகையில அவள யாராவது கொலை செஞ்சிருந்தா? நாம அவ அண்ணன் கிட்ட விசாரிச்சா ஏதாவது தகவல் கிடைக்கலாமில்லையா?"

"இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை...நாளைக்கே அரசர்குளத்துக்கு கிளம்புவோம்....அவளோட பி.ஏ.வ அப்புறம் பார்த்துக்குவோம்...."


வியாழனன்று விசாரணை தொடரும்.......

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக முந்தைய பதிவு.....

ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு விஜயகாந்த் வாழ்க....

ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு விஜயகாந்த் வாழ்க....



பொது இடத்துல எப்படி நடந்துக்க வேணும்ன்னு கூட வருங்கால முதலமைச்சருன்னு சொல்லிட்டு திரிஞ்ச  விஜயகாந்துக்கு தெரியல...அதைவிட கொடுமை அவரு வேட்பாளரு பேருகூட தெரியல...

தர்மபுரியில இவரு கட்சி வேட்பாளரா பாஸ்கருங்கறவர் போட்டியிடறாரு...ஆனா பிரச்சாரத்துக்கு அங்கே போன விஜயகாந்த் நெப்போலியனை அதாங்க சரக்க உள்ள விட்டுகிட்டு பாஸ்கருங்கற பேர பாண்டியன்னு மாத்தி சொல்லிட்டாரு...உடனே வண்டிக்குள்ள இருந்த வேட்பாளர் எந்திருச்சு என் பேரு பாண்டியன் இல்லை பாஸ்கருன்னு சொன்னதுதான் தாமதம் நம்ம விஜயகாந்துக்கு வந்துச்சு பாருங்க கோவம், உங்க கோவம் எங்க கோவமில்லை. பொது இடம்ன்னு கூட பாக்காம நச்சு நச்சுன்னு அந்த வேட்பாளரோட நடு மண்டையில நாலு போடு போட்டாரு...பாவங்க வேட்பாளரு...அப்படியே பேஸ்தடிச்சு போயிட்டாரு...மக்களும் அதிர்ச்சியாயிட்டாங்க....

இப்படி கேனத்தனமா ஏதாவது தப்பு பண்ணா மாட்டிவிடும் பிளான்ல கண்ணுல எண்ணைய விட்டுக்கு  இந்தாளு கூடவே வீடியோ கேமராவோட திரியற மக்கள் தொலைக்காட்சிக்கு நல்ல தீனி கிடச்சிடுச்சுன்னு அதை அப்படியே சூட் பண்ணிட்டு வந்து ஒளிபரப்பு செஞ்சுட்டாங்க...

 ஜெயலலிதா பரவாயில்லை யாரையாவது திட்டறதும் குட்டறதும் நாலு சுவத்துககுள்ளதான் நடத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன் ....ஆனா இந்தாளு முன்னூறு  நானூறு பேருக்கு மத்தியில இதை பண்ணுறாரு...இப்படி நடந்துக்கறது புதுசில்ல நம்ம விஜயகாந்துக்கு....

இதுக்கு முன்னாடி திருச்சியில ஒருத்தர இப்படி பளார்ன்னு அறைஞ்சு மாட்டிக்கிட்டாரு....கேட்டதுக்கு நானும் அவனும் பால்ய நண்பர்கள். அதான் அறைஞ்சு அறைஞ்சு விளையாடிக்கிட்டோம்ன்னு சொன்னாரு...

அப்புறம் ஒரு கோயம்புத்தூர் நிர்வகிய இப்படித்தான் அடிச்சாரு...அவரு மானஸ்தன் அப்பவே கட்சிய விட்டு போயிட்டாரு....இப்ப வேட்பாளரு....இந்த ஆளுகிட்ட இவங்க மாட்டிக்கு முழிக்கிறத நினைச்சா பாவமா இருக்கு.....இந்த ஆள நம்பி ஆட்சிய ஒப்படச்சா விளங்குன மாதிரிதான்.

இதுலேர்ந்து ஒன்னே ஒன்னு எனக்கு விளங்குது....எதையும் ஒளிச்சு மறச்சு பண்ண தெரியாத நேர்மையான தலைவரு நம்ம கேப்டன்தான்னு..... இப்படி ஒரு ஆளு அரசியல்ல கிடைக்க நம்ம கொடுத்து வச்சிருக்கணும் ....ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு நம்ம கேப்டனுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.....

கீழே இருக்கும் அந்த அருமையான காட்சிய கண்டு ரசிக்கறதும் ....சிரிக்கறதும் ...காறி துப்பறதும்  உங்க விருப்பம் 


முந்தைய பதிவு நீங்க படிக்க..... 

எவ்வளவு நாளுக்குத்தான் அரசியல் பதிவே போடுறது? மனுஷனுக்கு ரிலாக்ஸ் வேணாம் 18+

செவ்வாய், 29 மார்ச், 2011

எவ்வளவு நாளுக்குத்தான் அரசியல் பதிவே போடுறது? மனுஷனுக்கு ரிலாக்ஸ் வேணாம் 18+


‘ஃபேர் எவர்’ விளம்பரத்தில் நடித்து வந்த அசினுக்கு மார்ச் மாதத்திலிருந்து மங்களம் பாடிவிட்டது கம்பெனி. எட்டிப் பிடிக்கிற தூரத்தில் இருந்தாலும், தட்டிப் பறிச்ச நடிகையை ஒண்ணுமே செய்ய முடியாமல் இருக்கிறாராம் அசின். ஏன்? பல இடங்களில் அவர் வாய்ப்பை இவரும் தட்டிப் பறித்திருக்கிறார், அதனால்தான்! சரி, நடிகை யாரு? நம்ம த்ரிஷாவேதான்! அடடா... வண்ணத்துப் பூச்சிங்க சண்டையிது. என்னத்தை சொல்லி விலக்குறது? 



 
திரிசங்கு திவ்யா!
திவ்யாவை ‘குத்து’ ரம்யா என்றால், நம்முடைய ரசிகர்களுக்கு புரியும். சமீபத்தில் தன்னுடைய காஸ்ட்யூமரின் கன்னத்தில் அறைந்து, ‘பளீரென’ மீடியாவைக் கவர்ந்தவர். கன்னடத்தில் மட்டுமல்ல... தமிழிலும் சிம்பு, சூர்யா, தனுஷ், ஜீவா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த திவ்யாவுக்கு தொடர்ந்து கன்னட மொழி படங்களில் பிரச்னை. இவர் நடித்த ‘தண்டம் தஷகுணம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு போகவில்லையாம் இவர். அந்த நேரத்தில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாராம். சங்கத்தில் புகார் கொடுத்து விட்டார் தயாரிப்பாளர் கணேஷ். அதையும் மதிக்காத திவ்யா, விசாரணைக்கெல்லாம் வர முடியாது. வேணும்னா, நான் கன்னட படவுலகத்திலிருந்தே விலகிக்கிறேன் என்று கூறிவிட்டார். மொழி வெறி பிடித்த திவ்யாவுக்கு தமிழில் நடிக்க தடை போட வேண்டும் என்று பல மாதங்களாக நடிகர் சங்கத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்து மக்கள் கட்சியும் இந்தப் பக்கம் வர விடாது போலிருக்கிறது. அப்ப திவ்யாவின் நிலைமை? கரண்டுக்கு தப்புன பல்லி கிரைண்டர்ல விழுந்த கதைதான். 



 

மகளுக்காக..!
படிப்போ, அரசியலோ, இரு துறைக்குமே இது எக்ஸாம் டைம்! ஷூட்டிங்காக இருந்தாலும் சரி, அது மீட்டிங்காக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட நாளில் என்னை வீட்டுக்கு போக அனுமதிக்கணும் என்று கேட்டுக் கொண்டாராம் குஷ்பு. அது மகளின் இந்தி பரிட்சைக்கான நாள்! வாரிசுக்கு இந்தி சொல்லித் தருவதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு.

விளம்பரமும், களேபரமும்!
திடீரென்று ஒருநாள் ‘காவலன்’ படத்தின் விளம்பரம் வரவில்லை, எந்த செய்திதாளிலும். டெல்லியில் ‘வேலாயுதம்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யின் காதுக்கு விஷயம் போனது. என்னன்னு உடனே பாருங்கப்பா... என்றாராம் எஸ்.ஏ.சி.யிடம். தயாரிப்பாளரோ, ‘‘நஷ்டம். முடியாது’’ என்று கைவிரிக்க, அந்தச் செலவு இப்போது விஜய் பாக்கெட்டிலிருந்து!


எஸ்.எஸ்.ஆரின் பெருமூச்சு!
‘எத்தன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.- நடையில தடுமாற்றம் இருந்தாலும் நாக்குல அதே கம்பீரம். ‘இப்பல்லாம் ஒரு ஷாட் முடிஞ்சதும் கேரவனுக்குள்ளே போய் படுத்துக்குறாங்க ஹீரோக்கள். எங்க காலத்துல சிவாஜி, எம்.ஜி.ஆரெல்லாம் கூட அடுத்தவங்க நடிக்கிறப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு ஆர்வமா கவனிப்போம். ஹ்ம்ம்... அதெல்லாம் அந்த காலம்’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டார். 


டிஸ்கி: என்னடா இவன் மூணு நடிகைகள் படம் போட்டவன், ரெண்டு நடிகர்கள் படம் போடலையேன்னு பார்க்கறீங்களா?....எவ்வளவு தேடியும் அவர்களின் போட்டோ கூகிள் இமேஜ்ல சிக்கவேயில்லை...ஹி..ஹி... 

 
நேற்று படிக்காமல் தவற விட்டவர்களுக்காக........

அண்ணா.தி.மு.க-கூட்டணி144 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்-பரபரப்பான புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஞாயிறு, 27 மார்ச், 2011

இதை கவிதையென்று சொல்வதோ...ட்வீட்டென்று சொல்வதோ உங்க இஷ்டம்.

free twitter icons

எல்லோருக்கும் ரெண்டு 
நேர் பதங்கள் உண்டு......
நல்லவன்- மகாநல்லவன்
யோக்கியன்- மகாயோக்கியன் 
அரசியல்வாதிகளை 
பொறுத்தவரை
திருடன்- மகாதிருடன்

===================================

இன்னும் எவ்வளவு 
இலவசங்கள் 
கொடுத்தாலும் 
வாங்கிக் கொள்வான்
தமிழன்...
தான் சுரண்டப்படும்
சுரணை இல்லாமல்.....

==================================

டாஸ்மாக்கை எதிர்த்து 
போராடும் தாய்மார்கள் 
அந்த வருமானத்திலிருந்து 
வரும் இலவசங்களை
மட்டும் எப்படி 
வாங்கி கொள்கிறார்கள்


நேற்று படிக்காமல் தவற விட்டவர்களுக்காக........

அய்யய்யோ....108 ஆம்புலன்சை "அதுக்கு" பயன்படுத்தாதீங்க...

வெள்ளி, 25 மார்ச், 2011

அய்யய்யோ....108 ஆம்புலன்சை "அதுக்கு" பயன்படுத்தாதீங்க...



வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை கடுமையான குற்றமாக பார்த்து வருகிறது தேர்தல் ஆணையம்.ஒவ்வொரு பகுதியின் எல்லையிலும் வாகனங்கள்  சோதனைக்கு உட்படுத்த படுகிறது. இதுவரை சுமார் முப்பது கோடி ரூபாய் சிக்கியதாக தெரிகிறது. ஆனால்,  புது  புது வழிகளை யோசித்து மக்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் நம் அரசியல்வாதிகள். அதேநேரம் அவர்களின் வழிகளையெல்லாம் கண்டுபிடித்து அடைத்து வருகிறது தேர்தல் ஆணையம். போலீசாரின் கண்ணில் மண்ணை தூவ தற்போது அரசியல் கட்சிகள் 108 ஆம்புலன்ஸை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்சில் சைரனை போட்டுக் கொண்டால் போலீசார் அதனை நிறுத்தி சோதனை செய்வதில்லை. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பணம் எடுத்துச் சென்று வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்பட்டு வருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். தேவைப்பட்டால், சந்தேகம் வந்தால் 108 ஆம்புலன்ஸ உள்பட அனைத்து ஆம்புலன்களையும் கூட சோதனையிடலாமா என்பது குறித்து அதிகாரிகள் யோசித்து வருகிறார்களாம்.

அய்யா....அரசியல் வாதிகளே....தயவு செய்து ஆம்புலன்ஸை அதுக்கு பயன் படுத்தாதீர்கள். பணம் கொடுக்க வேறு என்ன எலவையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்கள் பாடு, தேர்தல்கமிசன் பாடு. அதை விடுத்து  நீங்கள் ஆம்புலன்ஸை பயன்படுத்துவதாக இருந்தால் அதனால் எத்தனை உயிர்போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிஜமாகவே ஒருவர் அடிபட்டோ,அல்லது   உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போதோ  அவர்களை அவசரமாக அழைத்துசெல்லும் ஆம்புலன்ஸ்களை நீங்கள் பணம் கடத்துவதாக நினைத்து போலீசார் சோதனையிடும் அந்த 10  நிமிடமோ, 15 நிமிடமோ கால இடைவெளியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். உயிர் போகும் சாத்தியம் கூட உண்டு...

நீங்கள் பணம் கொடுக்க உயிரோடு  விளையாடாதீர்கள். மக்களுக்கு உதவ நீங்கள் தேர்தல் நேரத்தில் காட்டும் ஈடுபாட்டில் ஒரு ஐம்பது  சதவீதத்தை தேர்தலுக்கு பிறகும் காட்டினால் மக்களின் தரம் இன்னும் உயரும்....அதற்காக புது புது வழிகளை யோசியுங்கள். வருங்கால சந்ததியினர் உங்களை வாழ்த்துவார்கள்.

வியாழன், 24 மார்ச், 2011

கலைஞரும் ஜெயலலிதாவும் எம்புட்டு நல்லவுங்களா இருக்காக......



வாசு என்ன திடீர்ன்னு வந்திருக்கே?

அரசியல் செய்தி வச்சிருக்கேன்...அதான் உன்கிட்ட சொல்லலாம்ன்னு?

போன வாரம்....கலைஞர் திருவாரூர் போனத பத்தி ஒரு மாதிரியும்,   ஜெயலலிதா ஸ்ரீரங்கம் போனது பத்தி வேறமாதிரியும்  நீ சொன்னது ஒருதலை பட்சமா இருக்குன்னு கொஞ்சம் எதிர்ப்பா போச்சே....

அட....இப்பவும் சொல்றேன்பா 2002- ஆண்டு  ஆண்டிப்பட்டில ஜெயலலிதா போட்டியிட்டப்போ 41 ஆயிரம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாங்க....அடுத்த 2006 தேர்தல்ல வாக்கு வித்தியாசம் 25 ஆயிரமா கொறஞ்சிருச்சாம்.இப்ப நடந்த நாடாளு மன்ற தேர்தல்ல பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியிலே அந்த வாக்கு வித்தியாசமும் இன்னும் கணிசமா கொறஞ்சு போச்சுங்கற தகவல்கள் அடிப்படையில்தான்  சொன்னேன். ஆனா, கலைஞர் விஷயம் வேறு....அவரு முதல் முதல்ல  1957-தேர்தல்ல போட்டியிடறப்போ திருவாரூர் தொகுதியே இல்லே....அதான் குளித்தலையில போட்டியிட்டாராம். அடுத்த தேர்தல்ல 1962-ல தான் திருவாரூர் தொகுதியே உருவாச்சு....அப்ப அங்க போட்டிபோட நினைச்சப்போ....ஏற்கனவே 1957-ல ஜெயிச்ச தி.மு.க-எம்.எல்.ஏ-க்கள் பதினஞ்சு பேரையும் தோற்கடிக்கனும்னு காமராஜர் வரிஞ்சு கட்டிக்கு வேலைபார்த்தாரு....அந்த நேரத்துல கலைஞர் திருவாரூர்ல போட்டியிட்டா அவரு ஜெயிச்சாலும் ஜெயிச்சுடுவாருன்னு நினைச்சு அதை ரிசர்வ் தொகுதியா ஆக்கிட்டாங்களாம் காங்கிரஸ் காரங்க....அதான் கலைஞரு தஞ்சாவூர்ல நின்னு பரிசுத்த நாடார ஜெயிச்சாராம். இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா அன்னைக்கு1952-தேர்தல்ல   ஜெயிச்ச 15 பேர்ல, 1962-தேர்தல்ல  கலைஞர் தவிர எல்லோரும் தோத்துட்டாங்கலாம். அண்ணா கூட காஞ்சிபுரத்துல தோத்துட்டாராம். ஆனாலும் அந்த தேர்தல்ல தி.மு.க 50- இடம் ஜெயிச்சுச்சாம். ஏறக்குறைய அம்பது வருசத்துக்கப்புறம் இப்பத்தான் திருவாரூர் பொது தொகுதியா ஆயிருக்குன்னு இப்ப போட்டி போடறாரு....

அடேங்கப்பா இவ்வளவு விஷயம் இருக்கா? தேர்தல் அறிக்கையில ஆளாளுக்கு இலவசங்களை அள்ளி ஏறச்சிருக்காங்க போல...

அத ஏன் கேக்கறே?....தி.மு.க-வுடைய தேர்தல் அறிக்கையிலிருந்து 90 சதவிகிதம் காப்பி பண்ணி அண்ணா தி.மு.க தேர்தல் அறிக்கை விட்டிருக்கிறதா சொல்லறாங்கப்பா....

அப்போ...கதாநாயகிய காலிபண்ண வந்த வில்லன்னு சொல்லு...

அது வில்லனா கதாநாயகனான்னு தேர்தலுக்கு அப்புறம்தான் தெரியும்...

அத சொல்லு....கலைஞரும் நல்லவரா இருக்காரு....ஜெயலலிதாவும் நல்லவங்களா இருக்காங்க நம்ம இப்ப யாருக்குத்தான் வோட்டு போடறது?

நமக்கே இவ்வளவு குழப்பம் இருக்கும்போது மக்களுக்கு? என்னவோ போ...தேர்தலுக்கு தேர்தல் தான் மக்களை நினைக்குறாங்க இவங்க....அஞ்சு வருசத்துக்கு ஒருதடவை டி.வி-யும், மிக்சியும் கிரைண்டரும் கொடுத்து மக்களை சைலண்டாக்கிட்டு இவங்க கோடி கோடியா அடிச்சுடுறாங்க...பாவம் மக்கள் இது தெரியாம இலவசங்களை யாரு அதிகமா கொடுக்கறாங்கன்னு ஆங்காங்கே பட்டிமன்றம் நடத்திக்கு இருக்காங்க....

ஏப்பா....எனக்கொரு சந்தேகம்? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி குடுக்கும்போதே அது நல்ல அரிசியில்ல....யாரும் சாப்பிட முடியல...புழு பூச்சி இருக்குன்னு குற்றம் சொன்ன ஜெயலலிதா இப்ப இலவசமா அரிசி கொடுக்கறதா சொல்லியிருக்காங்களே....இவங்க என்ன அரிசி போடுவாங்க?.....

வேறென்ன பொன்னியும் சீரக சம்பாவுமா போடப்போறாங்க....எல்லாம் அதே அரிசியத்தான்....அதுக்குத்தான் கூடவே இருபது லிட்டர் தண்ணியும் கொடுக்கறாங்களே?

அது எதுக்குப்பா?

வேறெதுக்கு அந்த அரிசிய சமைச்சு சாப்பிடும்போது  தொண்டையில  அடைச்சுக்கிட்டா தண்ணி குடிக்கனும்ல அதுக்குத்தான்.

அதுவும் சரிதான்.....ஜெயலலிதா இனிமே என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க  மேடம்னு கூப்பிட்டாலே போதும்ன்னு  சொல்லிட்டாங்க போல...

நேத்து வேட்பு மனு தாக்கல் முடிஞ்சு தேர்தல் அறிக்கை வெளியிடும்போது நிருபர்கள் எல்லோரும் அம்மா அம்மான்னு கூப்பிட்டாங்களாம். அவங்களுக்காக சொன்னது அது....

நான் என்னவோ கட்சிக்காரங்களுக்கு சொன்னதுன்னு நினைச்சேன். இப்பத்தான் அண்ணா.தி.மு.க வேட்பாளர்கள் எல்லோரும் நிம்மதியா இருப்பாங்க....

எதுக்கு இப்படி சொல்றே?

அதான் வேட்புமனு தாக்கல் முடிஞ்சுச்சு இல்ல.....இனிமேல வேட்பாளர்கள மாத்த மாட்டாங்கல்ல....

அட நீ வேற....நேத்து வேட்பு மனு தாக்கலுக்கு  அப்புறமும் கூட  ஒரு  வேட்பாளர மாத்திருக்காங்க.....

அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் யாருப்பா?

முதன்முதல்ல ஜெயலலிதா வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது தூத்துக்குடி வேட்பாளரா அறிவிக்கப்பட்டிருந்து முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஜெனிபர் சந்திரன்...கூட்டணி குழப்பத்துக்கு அப்புறம் ஜெயலலிதா வெளியிட்ட லிஸ்டுல தூத்துக்குடி வேட்பாளரா அறிவிக்க பட்டிருந்து ஜெனிபருக்கு பதிலா ஏ.பால்ங்கறவர்.ஆனா நேத்து மதியம் திடீர்ன்னு அவரையும் மாத்திட்டு செல்லபாண்டியன்னு ஒருத்தரை வேட்பாளரா  அறிவிச்சிருக்காங்க....

என்னவோ போ.....வேட்புமனு தாக்கல் முடியும் கடைசி நாள்  வரை இந்த வேட்பாளருக்கு கண்டம்தான்...வேறென்ன சொல்ல....

இது புதுசில்லைப்பா அங்கே.....அந்த கட்சியில அவைத்தலைவரா இருக்கும் மதுசூதனனுக்கே ஆர்.கே.நகர்ல சீட் கொடுத்து பறிச்சிக்கிட்டாங்க....மத்தவங்களெல்லாம் எம்மாத்திரம்? ...சரிப்பா நான் கிளம்பறேன்....மீண்டும் சந்திப்போம்
நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக....

புதன், 23 மார்ச், 2011

நாங்களும் இலவசங்களை வாரி இறைப்போம்ல....-அண்ணா.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு




திருச்சி: திமுகவுக்குப் போட்டியாக அதிரடியான அறிவிப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன. அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில், இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.

- ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.

- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.

- வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.

- கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

- நடுத்தர மக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

- +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

- பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

- பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

- தனியார் கேபிள் அரசுடமையாக்கப்படும்.  அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும். 
 
- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.

- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.

- 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.

- முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

- முதியோர் இல்லங்களில் இலவச மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும்.

- ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ. 25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.

புலன் விசாரணை பாகம்- 5

முந்தைய பாகங்கள் 




"நிஜமாத்தான்  சொல்றீங்களா?"

"சத்தியமா நான் சொல்லுறது நிஜம் சார்...ஆனா அதுக்காக அவரு கொலை வரை போயிருக்க மாட்டாருன்னு நான் நினைக்கிறேன்"

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க...."

"அப்படி சொன்னதுக்கு அடுத்த நாள் அவரு ஷூட்டிங்க்காக வெளிநாடு போயிட்டாரு....இன்னும் வரல....ஸ்ரீமதி கொல்லப்பட்ட அன்னைக்கும் அவரு வெளிநாட்டுலதான் இருந்தாரு..."

"விளங்கித்தான் பேசுறீங்களா தரன்....இன்னைக்கு ஐநூறு ஆயிரத்துக்கு எல்லாம்  கொலை பண்ணுற கூலிப்படைகள் நாட்டுல பெருகிட்டாங்க...அதுல ஒரு படைய ஏற்பாடு பண்ணிட்டு இவரு நல்லபிள்ளையாட்டம் வெளிநாட்டுக்கு போயிருக்கலாம் இல்லையா?"

"அப்படி இல்லை சார்....அவரு இன்னிக்கு தமிழ் சினிமாவுல டாப் டென் டைரக்டர்....அவரு போயி....."

"உங்களுக்கு குருபக்தி அதிகம்னு ஒத்துக்கிறேன். இப்போ யாரையும் நாங்க குற்றம் சாட்டல.....விசாரணை மட்டுதான்....யாரு உண்மையான குற்றவாளின்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரியத்தான் போகுது....அடிக்கடி நாங்க விசாரணைக்கு உங்கட்ட வருவோம்....ஷூட்டிங்காக வெளில போறதா இருந்தா எனக்கு ஒரு வார்த்த போன்ல தகவல் சொல்லிடுங்க....இப்ப ரெட்டி எங்கே இருக்காரு....."

"இன்னும் வெளிநாட்டுலேர்ந்து திரும்பல....அனேகமா இந்த வாரம் வரலாம்..."

"தகவலுக்கு நன்றி நாங்க கிளம்பறோம்...ஆங்...ரெட்டி வந்ததும் எனக்கு தகவல்  கொடுங்க..."

===========================

போலீஸ் ஸ்டேசன்.

இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் கான்ஸ்டபிளிடம்.....

"எதுக்குத்தான் இந்த எழவெடுத்த வேலைக்கு வந்தோம்ன்னு இருக்கு.....எந்த நாயோ அந்த நடிகைய கொன்னு போட்டுட்டு போயிட்டான். நம்ம கிடந்தது லோள் பட வேண்டியிருக்கு...சே....நிம்மதியா சாப்பிட முடியல....தூங்க முடியல...நேத்திக்கு பாரு.....எங்க அக்கா பொண்ணுக்கு நல்ல வரனா வந்திருக்கு....வாடா போயி பையன பார்த்துட்டு வருவோம்ன்னு எங்க அக்கா கூப்பிட்டுச்சு....அதுக்கு கூட போக முடியல....எங்கேயோ ரொம்ப தூரமா இருந்தாலும் பரவாயில்லை...இங்கே இருக்க சோளிங்கநல்லூர் தான் மாப்பிள்ளை வீடு. அதுக்கு போக முடியல....எங்கக்கா வேற....நிலைமை புரியாம .... நீ இந்த வேலைய கட்டிக்கு  அழு.....உனக்கு சொந்தம் பந்தம்லாம் எதுக்குன்னு கோப படுத்து....மனசுக்கு கஷ்டமா இருக்கு..."

"சார் அதான் விசாரணை பண்ணிட்டு இருக்கோமே....சீக்கிரம் கொலைகாரனை பிடிச்சிடலாம் சார்...."

"எங்கே....இவனை கேட்டா அவங்கறான்....அவன கேட்டா இவங்கறான்....இந்த டைரக்டர் ரெட்டி யார சொல்லப்போறானோ...அந்த நாள் சினிமா மாதிரி ஆகிருச்சு இந்த விசாரணை....பார்ப்போம்...."

அப்போது தில்லையம்பலத்தின் செல்போன் அடித்தது...

"ஹலோ.....தில்லையம்பலம் ஸ்பீக்கிங்...."

"....................................."

"சொல்லுங்க தரன்"
"........................."

"அப்படியா....எப்ப வந்தாரு..."

"......................................."

"ஓகே....ஓகே...நான் பார்த்துக்கிறேன்..."

"கான்ஸ்டபில் டைரக்டர் ரெட்டி வந்துட்டாராம்.....தரன் சொன்னான்....அவர பார்க்க கிளம்புவோம் வாங்க..."

----------------------------------------------------------------------

டைரக்டர் ரெட்டி வீடு.....

"வணக்கம் சார்...."

"வாங்க....என்னை தேடிட்டு வந்துருக்கீங்க...."

"நடிகை ஸ்ரீமதி கொலை வழக்குல உங்கள கொஞ்சம் விசாரிக்கணும்..."

"ஓ....தாராளமா....அவ ஒரு நல்ல நடிகை. டைரக்டர் ஆர்டிஸ்ட்ன்னு பேரெடுத்தவ....அவ போனது சினிமா பீல்டுக்கே பெரிய இழப்புன்னு சொல்லலாம்...அதை விட எனக்கு பெரிய இழப்பு....இன்னைக்கு நன்றி விசுவாசம்ன்னா என்னன்னு கேட்குற
சினிமா உலகத்துல...அவ என்மேல வச்சிருந்த குருபக்தி அபரிதமானது...."

"அப்படிப்பட்ட ஒருத்திய எதுக்கு சார் கொலை செஞ்சீங்க?"

என்று திடீரென்று இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த டைரக்டர் ரெட்டி 

"என்ன இன்ஸ்பெக்டர் முட்டாள்தனமான கேள்விய கேக்கறீங்க?"

"சார் எங்களுக்கு கிடைச்ச தகவல்கள் அடிப்படியில் தான் கேட்கறேன்"

"என்ன பெரிய பொடலங்கா தகவல் உங்களுக்கு கிடைச்சிருச்சு....நான் எதுக்கு அவள கொல்லனும்?....."

"அதத்தான் மிஸ்டர் ரெட்டி நானும் கேக்கறேன்....நீங்க எதுக்கு அவள கொன்னீங்க?"

விசாரணை வரும் வியாழன் தொடரும்............

திங்கள், 21 மார்ச், 2011

தன்மானம்ன்னா கிலோ எவ்வளவுங்க?-நீங்களாவது சொல்லுங்களேன்.....



அண்ணா.தி.மு.க-கூட்டணியிலிருந்து தன்மானமில்லையென்று ம.தி.மு.க-விலகியுள்ளது  பற்றித்தான் கடந்த மூன்று நாட்களாக பேச்சு. வைகோவின் தன்மானத்தை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா?

கடந்த 1993-ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வைகோ......கட்சியையும், கொடியையும் கைப்பற்றும்  முயற்சில் இறங்கி தோல்விகண்டு பின்னர் மறுமலர்ச்சி(?) தி.மு.க.-வை நிறுவினர். அன்று அவரோடு தோள்கொடுத்த பலர் இன்று அவருடன் இல்லை என்பது வேறுவிஷயம்.

அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவை எதிர்த்து  கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக, 1500 கிலோமீட்டர் தொலைவு 51 நாள்கள், பல்லாயிரக்கணக்கான தோழர்களுடன் செருப்புதேய, கால்கடுக்க  நடைப்பயணம் சென்றார். நீண்ட தூரம் நடந்ததால் காலில் ஏற்பட்டிருந்த கொப்புளங்களுக்கு  1998 - ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் களிம்பு வாங்கி பூசி ரணத்தை ஆற்றினார்....
அப்போது எங்கே போயிருந்தது இவரின் தன்மானம்?

அதன் பிறகு மத்தியில் அமைந்திருந்த பா.ஜ.க- கூட்டணி ஆட்சியிலிருந்து ஜெயலலிதா வாபஸ் வாங்கியவுடன் அந்த கூட்டணிக்கு தன் பரம எதிரியான தி.மு.க. வந்து சேர்ந்தது. அப்போதும் இந்த தன்மான புலி அந்த கூட்டணில் தொடர்ந்தார். அதன் பிறகு 1999-ஆம் ஆண்டு நடந்த  நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.கூட்டணியிலேயே நீடித்தார் 

எந்த கட்சியால் கொலைப்பழி சுமத்தி நீக்கப்பட்டாரோ....
எந்த கட்சிக்கு எதிராக நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் உயிரை மாய்த்துகொண்டார்களோ...அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது நெருடலாக தெரியவில்லை இவருக்கு.....அப்போது எங்கே போனதாம் இவரின் தன்மானம்?

அதன்பிறகு 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சில சீட் பிரச்சினைக்காக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியாகி தனித்து போட்டியிட்டு டெபாசிட் இழந்த போது இவருடன் இருந்த தன்மானம், மீண்டும் தி.மு.க-கூட்டணில் சேர்ந்து 2004  நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது எங்கே போயிற்று?

பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசு இவரை கைது செய்தது. ஓரிரு மாதத்தில் வெளியேறி பாசிச ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என்று கூறிய வைகோ....கலைஞரிடம்  23 தொகுதிகள் கேட்டு, கலைஞர் 22 தொகுதிகள் தர முன்வந்தும்   ஒரே  ஒரு தொகுதிக்காக, நாங்கள் ஒ பாசிடிவ் ரத்தம் போன்றவர்கள் யாருடனும் கூட்டு சேருவோம் என்று கூறிவிட்டு  தி.மு.க கூட்டணியிலிருந்து விலகும் போது இவருடன் இருந்தது தன்மானமா? சீட் பேரமா?

முதல்நாள் வரை பாசிசஜெயலலிதா என்று கூறிவிட்டு அடுத்த நாள் அன்பு சகோதரி என்று பாசமழை பொழிந்து 35 சீட் வாங்கிய போது எங்கே போச்சாம் இவரின் தன்மானம்.


அட போங்க சார்....தன்மானமாவது...புடலங்காயாவது...அரசியல் செய்ய  அந்த எலவுலாம் எதுக்கு?.....

ஞாயிறு, 20 மார்ச், 2011

தேர்தல் அறிக்கையில் பதிவர்களுக்கு புதிய சலுகை



தலைவர் எதுக்கு தேர்தல் கமிசன் முன்னாடி ஆர்ப்பார்ட்டம் பண்ணுறாரு......

அதுவா....கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இப்ப இருக்க 234 தொகுதி பத்தலையாம்....அதனால 300 தொகுதியா உயர்த்த சொல்லி போராட்டம் பண்றாரு.... 

================================

நம்ம  தலைவர் பதிவர்களை கவர் பண்ணறமாதிரி தேர்தல் அறிக்கை விட்டிருக்காரா எப்படி?

பின்னே.....எங்கள் கட்சியை ஆதரித்து பதிவு எழுதினால் அவங்களுக்குமாதந்தோறும்  நெட் பில் இலவசம்ன்னு சொல்லிருக்காரே....

==========================================

குடிமக்களின் ஓட்டு எல்லாம் தலைவருக்குத்தான்னு எப்படி சொல்றே....

டாஸ்மாக் பார்ல ஒரு ஆளுக்கு மூணு முட்டை வாரந்தோறும் இலவசமா வழங்கப்படும்ன்னு   தேர்தல் அறிக்கையில சொல்லிருக்காரே...

============================================

அடுத்து நம்ம ஆட்சிதான்னு தலைவரு இவ்வளவு நம்பிக்கையா சொல்றாரே எப்படி?

ஓட்டு பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் ஒரு மாசம் வித்தியாசம் இருக்கே... அதை வச்சுத்தான் .

=========================================

எல்லா சாஃப்ட்வேர்  இஞ்சினியரையும் வரவச்சு நம்ம தலைவரு என்ன பேசிட்டு இருக்காரு?....

அதுவா....வாக்குப்பதிவு மிசின்ல விழுந்த வோட்டை எல்லாம் நம்ம சின்னத்துக்கு திருப்பற மாதிரி ஸ்பெசல் ரிமோட் செஞ்சுதர  முடியுமான்னு கேக்கறாரு

நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக.....

சனி, 19 மார்ச், 2011

வாழ்க கலைஞர், வாழ்க கலைஞரின் கதாநாயகி


நேற்று வெளியிடப்பட்ட தி.மு.க.தேர்தல் அறிக்கையும் என் மனதில் தோன்றியவையும்





ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.

தந்தி அடித்து தானே வலியுறுத்துவீங்க.....


சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை போல திருச்சியிலும், மதுரையிலும் மன நல மருத்துவமனைகள் அமைப்போம்.

அப்படியே தமிழ்நாடு முழுதும் அமச்சீங்கன்னா....இந்த அரசியல்வாதிங்க அடிக்கும் கூத்தினால் சட்டையை பிச்சுக்கு திரியும் பொதுமக்கள் சேர்வதுக்கு வசதியா இருக்கும்

====================================

மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறையை சிறப்பாக செயல்படுத்துவோம்.


முதல்ல அரசு மருத்துவமனையில் எல்லா நேரமும் மருத்துவர்கள் இருக்குமாறு செய்யுங்க....
 
==========================================

அரசுக் கல்லூரிகளிலும், தொழில்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு, முதலாவது ஆண்டிலேயே இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.


கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க நெட் கணக்சனையும் சேர்த்து கொடுங்க....

==================================================

மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.


முதல்ல அவங்க உட்கார நாலு சீட் ஏற்பாடு பண்ணுங்க....
 
======================================

கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும்.


டாஸ்மாக் போல அரசே கந்து வட்டிக்கடையும் நடத்துமா?
 
==============================

பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும்.


இலவச மின்சாரம் பயன்படுத்தும் பரம ஏழைகளை போலவா?


============================================

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்

உப்பா கொடுக்கப்போறீங்க...பார்த்து மக்களுக்கு ரோசம் வந்துடப்போகுது 

=========================================


பெண்களுக்கு இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும். பெண்கள் எதைக் கோருகிறார்களோ அதைப் பொறுத்து கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.


அதை இயக்க கரண்டு இருக்குமா?

=====================================

அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்.

அரசு அலுவலகங்களில் மட்டும்தான்.ஸ்பெக்ட்ரம் பற்றி பேசக்கூடாது.

வெள்ளி, 18 மார்ச், 2011

நான் வைகோவை புறக்கணித்தேனா?-மறுக்கிறார் ஜெயலலிதா

கடந்த ஐந்து நாட்களாக நமது கப்சா புலனாய்வு இதழுக்காக அண்ணா.தி.மு.க-வின் பொது செயலாளர் செல்வி ஜெயலலிதாவிடம் பேட்டி    கேட்டிருந்தோம். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நேற்று மாலை போயஸ் கார்டன் கேட்டில் வாட்ச்மேன் அருகிலிருந்த இன்டர்காம் மூலம் பேட்டி தந்தார். இனி நமது  கேள்விகளும், அவரின்  பதில்களும்.........



கேள்வி : தன்னிச்சையாக நீங்கள் வேட்பாளரை  அறிவித்ததால் உங்களின் கூட்டணி கட்சிகள் மூன்றாவது அணி வரை போய்விட்டார்களே?....

ஜெயலலிதா: அது நானே எதிர்பார்க்கவில்லை. வழக்கமா நான் வேட்பாளர்களை அறிவித்தால் நான் தான் அதை மாற்றிக்கொண்டே இருப்பேன். இந்த முறை கூட்டணி கட்சியினர் மாற்ற சொன்னார்கள். கொஞ்சம் பிடிவாதமாக இருந்தால்...அம்மா நீங்க பார்த்து ஏதாவது செய்யுங்கன்னு கெஞ்சுவாங்க நம்ம கொடுக்கறதை கொடுத்து விடுவோம்ன்னு நினைச்சேன். ஆனா அவங்க எல்லோரும் சேர்ந்து விஜயகாந்த் ஆபிசுக்கு போயி மூணாவது அணின்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க....




கேள்வி: அப்புறம் எப்படி நிலைமையை சமாளிச்சீங்க?

ஜெயலலிதா: அது பெரிய கதை. அந்த 160 -பேரும் வேட்பாளருங்க இல்லை...நான் மாற்ற நினைச்சிருந்த ஒன்றிய செயலாளர்கள் லிஸ்ட்.... வேட்பாளர் பட்டியலுக்கு பதிலா தவறுதலா சசிகலா அந்த பட்டியலை எடுத்து கொடுத்துட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.






கேள்வி : இத்தனை நாளா உங்க கூட்டணியில் இருந்த வைகோவிற்கு சீட் கொடுக்காம புறக்கணித்து  விட்டுட்டீங்களே?.......

ஜெயலலிதா:நான் அன்பு சகோதரர் வைகோவை புறக்கணித்தேன் என்று சொல்வதே தவறு. நடந்தது என்னன்னா..... அவரோட கட்சிய மறந்துட்டு எங்க கட்சியோட கிளை செயலாளரு போல வைகோ நடந்துகிட்டதால....செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம் முன்னிலையில அண்ணா.தி.மு.க-வில இணைஞ்சுட்டாறு போலன்னு இவ்வளவு நாளா நினைச்சுக்கு இருந்தேன். இப்பத்தான் தெரியுது அவருக்கு கட்சின்னு ஒன்னு இருக்கற விஷயமே....

 
கேள்வி : அடிக்கடி வேட்பாளர மாத்துவீங்களே...இப்ப எப்படி? 
 
ஜெயலலிதா: வழக்கம்போல்தான்....


 
கேள்வி : எதுக்கு அடிக்கடி இப்படி வேட்பாளர மாத்துறீங்க....அதனால அவங்க நம்பகத்தன்மை கெட்டுப்போயிடாதா?

ஜெயலலிதா: யார் சொன்னது? அப்போது  நான் வெளியிடுவது  வேட்பாளர் பட்டியலே கிடையாது. அது டம்மி லிஸ்ட். முதலில் வேட்பாளர்கள் என்று ஒரு லிஸ்டை வெளியிடுவேன். அந்த லிஸ்டுக்கு மக்களும் எனது கட்சிக்காரர்களும் என்ன மாதிரி வரவேற்பு கொடுக்கிறார்கள், யார் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள், யார்யாரை மாற்ற சொல்லி போராடுகிறார்கள்  என்று பார்ப்பேன். அதன் பிறகு வேட்பாளர்களையும் போராட்டம் செய்பவர்களையும்  மாற்றிவிடுவேன். இது ஒரு வகையில் ராஜதந்திரம்.





கேள்வி : வேட்பாளர்களை மாற்றுவீர்கள் சரி....போராடுபவர்களை ஏன் மாற்றுகிறீர்கள்?

ஜெயலலிதா: பின்னே...நான் ஒருவரை அறிவித்தால் இதயதெய்வம்,புரட்சித்தலைவி,   அம்மாவின்  ஆணை என்று அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும் அதை விட்டுவிட்டு போராடினால் எப்படி?

ஓகே....தொகுதி பங்கீடு பற்றி பேச கூட்டணி கட்சியினர் வந்துட்டாங்க.....பேட்டியை நிறைவு செய்வோம்....

அண்ணா நாமம் வாழ்க....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....




வியாழன், 17 மார்ச், 2011

முடிவுக்கு வரும் மூன்றாவது அணி நாடகம்(அரசியல் பக்கங்கள்)

"அடடே வாப்பா வாசு......ரொம்ப நாளாச்சு பார்த்து? எப்படி இருக்கே....."

"இருக்கேன்பா....அரசியல் கடுமையா சூடு பிடிச்சுருச்சு போல...."

"ஆமாப்பா....ஜெயலலிதா ஏதோ தன்னிச்சையா  வேட்பாளரு அறிவிச்சிட்டாங்கன்னு ஒரே ரகளையா  இருக்குப்பா....ஏதோ மூணாவது அணி அமைய போகுதாம்...."

"அட நீ வேற...அப்படில்லாம் ஒன்னும் நடக்காது....."

"அப்புறம் எதுக்குப்பா..எல்லாரும் விஜயகாந்த் ஆபீசில கூடுனாங்க?"

"அதுவா அது ஒரு நாடகம்பா...."

"நாடகமா?"

"ஆமாம்....ஜெயலலிதாட்ட கேட்ட தொகுதிய அவங்க ஒதுக்கலியா? மூணாவது அணி அமைச்சா  ஓட்டு பிரியும், அதனால ஜெயலலிதாவுக்குத்தான் நட்டம்.அதான் மூணாவது அணின்னு  பூச்சாண்டி காட்டினா மிரண்டுருவாங்க....   கேட்ட தொகுதிய கொடுத்துருவாங்கன்னு மிரட்டி பாக்குறாங்க....."

"நான் கூட உண்மையா இருக்குமோன்னு நினைச்சேன்."

"தமிழ்நாட்டுல மூணாவது அணி அமைஞ்சா அது எடுபடாதுன்னு அவங்களுக்கே நல்லா தெரியும். அப்படி அமைஞ்சா அது கலைஞர் ருக்குத்தான் சாதகம்ன்னு தெரியாமலா இருக்கும். நீ வேண்ணா பாரு... நாளைக்கு ஜெயலலிதா நிறைய இடத்துல அண்ணா.தி.மு.க வேட்பாளர வாபஸ் வாங்க சொல்லிருவாங்க..."

"அப்படி மாத்துனா வேட்பாளருங்க அப்செட் ஆகிட மாட்டாங்களா? "

"அத பத்தி என்ன இருக்கு...வேட்பாளர மாத்துறதும் மந்திரிய மாத்துறதும், நிர்வாகிகள மாத்தறதும்  ஜெயலலிதாவுக்கு ஒன்னும் புதுசில்லையே ...."

"அப்படி எல்லோரும் சமரசம் ஆகிட்டா....வைகோ கதி...."

"இங்கே அவரப்பத்தி எந்த தலைவரு கவலை படப்போறாரு....எல்லோருக்கும் அவங்க கேட்ட தொகுதி கெடைச்சா சரிதான் "

"பாவம்பா வைகோ"...

"அவர் நிலைமை இப்படி ஆகக்கூடாது.....அவரு நிலைய விட்டு இறங்கி அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே மறந்துட்டு எந்த நேரமும் அண்ணா தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் போல நடந்துக்கிட்டாரு....இப்ப அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே ஜெயலலிதாவும் மறந்துட்டாங்க....."

"அதுக்காக இப்படியா....அஞ்சு வருசமா கூடவே இருந்தாரு....இப்படி நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாங்களே...."

"அதான் ஜெயலலிதா....நாளைக்கு இப்ப கூட்டணி வச்சிருக்க தலைவர்களுக்கும் இதுதான் கதி."

"ஒருவேளை அவரு கூட இருந்த தலைவருங்களெல்லாம் விலகிட்டதால சீட்டு கொடுக்க யோசிச்சிருப்பாங்களோ...."

"எப்போதுமே வைகோவுக்கு தலைவர்களாலே ஒரு பலமும் இல்லை. இவரோட பேச்சு திறமைக்குத்தான் ஒரு கூட்டம் கட்டுண்டு இருக்கு...."

"அது தெரியாமலா இருக்கும் ஜெயலலிதாவுக்கு...."

"அதான் விஜயகாந்த் இருக்காரேன்னு நினைச்சிருக்கலாம். என்னைக்கு திருமங்கலம் இடைதேர்தல் வந்துச்சோ...அப்போதிலிருந்து இந்த அவமானம் தொடருது...."

"இனி அவரு தி.மு.க பக்கமும் போகமுடியாது "

"எப்படி போக முடியும் அங்கேருந்து ஒரே ஒரு சீட்டு பிரச்சினையில இங்கே வந்தவருதானே....இப்போ ஒண்ணுமே கிடைக்காத இடத்துக்கு எப்படி போவாரு...."

"வேறென்ன பண்ணுவாரு "

"எனக்கென்ன தெரியும் அவருக்கு ஆதரவா இருக்க தொகுதியில தனியா நின்னு ஓட்ட பிரிக்கலாம்.....அவருக்கு சீமான் நெடுமாறன்னு தமிழ் ஈழ அதவாளர்கள் அதரவு தரலாம். "

"ஜெயலலிதாவுக்கு எப்போதுமே சாதகமான தொகுதியாசே ஆண்டிப்பட்டி....அப்புறம் எதுக்கு தொகுதி மாறுறாங்க?"

"அதுவா.....எல்லாம் அழகிரி பயம்தான். 2002-ல ஜெயலலிதா போட்டியிட்டப்போ கிடைச்ச வோட்டு வித்தியாசத்தை விட 2006 தேர்தல்ல ரொம்ப கொறஞ்சிருச்சாம்...அப்புறம் 2009 நாடாளுமன்ற தேர்தல்ல அதைவிட ஒட்டு வித்தியாசம் இன்னும் கொறைச்சு போச்சாம்....அதான் இந்த தடவை அழகிரி ஏதும் அதிரடி பண்ணிருவாரோன்னு பிராமின் அதிகம் இருக்க ஸ்ரீரங்கத்துல போட்டியிடுறாங்கலாம்..."

"ஓ..இதுதான் காரணமா? அங்கே தி.மு.க-வுல வெயிட்டான கேண்டிடேட்டா போடலை போலையே"

"ஆனந்துன்னு  ஒரு 29 வயசு இளைஞரை நிறுத்தியிருக்காரு கலைஞர்.பாப்போம் யானை காதுல இந்த எறும்பும்  புகுதான்னு....."

"கலைஞர் தொகுதி மாறியதுக்கும் பயம்தான் காரணமா?"

"ஏற்கனவே தமிழ்நாட்டுல பல்வேறு தொகுதியில போட்டியிட்டு ஜெயித்த பெருமை கலைஞருக்கு இருக்கு....இப்போ அவரோட சொந்த தொகுதியில நிக்கறார்  அவ்வளவுதான்....ஓகேப்பா நான் கிளம்பறேன்...."

"போன தடவை மாதிரி இல்லாமல் அடிக்கடி வாப்பா....."

"அதான் தேர்தல் வந்துடுச்சுல்ல இனி  அடிக்கடி வருவேன்....."

"ஏன்பா....பிரச்சாரத்துக்கு வர்ற தலைவருங்க மாதிரியா?"

"அப்படித்தான் வச்சுக்கவே....."

"அப்படின்னா தேர்தல் முடிஞ்சா   அடுத்த தேர்தல் வரை வரவே மாட்டேன்னு சொல்லு...."

"ஹா...ஹா...."
 

புதன், 16 மார்ச், 2011

புலன் விசாரணை - பாகம்-4

முந்தைய பாகங்கள்


"சொல்லுங்க...எதுக்கு அவளை கொலை பண்ணுனீங்க"....

இந்த கேள்வியால் அதிர்ந்த தரன்

"சார் சத்தியமா எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை...."

"பின்னே எதுக்கு அவங்கள கொலை பண்ணப்போவதா மிரட்டுனீங்க...."

"அது வந்து......வந்து....சொல்லிடறேன் சார்.....நானும் ஸ்ரீமதியும் ஒரே படத்துல அறிமுகமானதால எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்துச்சு...அதுவே போகப்போக காதலா மாறிச்சு. கொஞ்சம் அப்படி இப்படி இருந்ததுல ரெண்டு தடவை கர்ப்பம் ஆனாள். யாருக்கும் தெரியாம கலைச்சா".

"அப்படின்னா இப்ப கர்ப்பமா இருந்ததுக்கும் நீங்கதான் காரணமுன்னு சொல்லுங்க...."

"ஆமா....நான்தான் காரணம். பிரச்சினையே அதுதான்....அன்னைக்கு ஷூட்டிங்க்ல இருந்த ஸ்ரீ மதி எனக்கு போன் போட்டா....நானும் போனேன். போனவுடனே  நான் கர்ப்பமா இருக்கேன். ஏற்கனவே ரெண்டு தடவை கர்பத்த கலைச்சதால  இனி கலைக்க முடியாது. அது என் உயிருக்கே ஆபத்தாகிடும்ன்னு டாக்டர்கள் சொல்றாங்க....அதனால இந்த விஷயம் யாருக்கும் தெரியறதுக்கு முன்னாடியே என்னை கல்யாணம் செஞ்சுக்கங்கன்னு சொன்னா....நான் இப்பத்தான் வளர்ந்து வர்றேன். இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா ரசிகைகள் ஆதரவு எனக்கு வராது. இன்னும் சில வருஷம் கழிக்கட்டும்ன்னு சொன்னேன். ஆனா அவ பிடிவாதமா இருந்தா....அதான் கோபத்துல அப்படி கத்திட்டு வந்துட்டேன். இதுதான் சார் நடந்தது....நான் கொலையெல்லாம் பன்னால சார். நம்புங்க...."

"அப்புறம் எதுக்கு அவங்க எனக்கு பழககம்தான்னு பொய் சொன்னீங்க?"

"இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா என் கேரியர் பாதிக்கும்ன்னு அப்படி சொல்லிட்டேன் சார். "

"சரி..உங்களுக்கு தெரிஞ்ச உண்மைகளை சொல்லுங்க.....ஸ்ரீமதிக்கும் யாருக்கும் பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், முன் விரோதம் இருந்துச்சா?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்...இருந்திருந்தா எங்கிட்ட சொல்லிருப்பா"....
அப்போது போன் வந்தது அதை எடுத்து பேசிக்கொண்டிருந்தான் தரன்.

இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்.
கான்ஸ்டபிளிடம் ஹஸ்கி வாய்சில்.......

"யோவ்...இவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கணும். இவனை நோட்டம் போட்டுக்கே  இருக்கணும். தேவை பட்டா கைதுகூட பண்ணலாம்."

"சார்...ஒரு சந்தேகம்.இவன் இன்னைக்கு ஒரு நடிகர். இவனை கைது பண்ணினா பிரச்சினை ஏதும் வராதுல்ல சார்..."

"கான்ஸ்டபில்....உங்களுக்கு தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. தெரியுமா?"

"கேள்விபட்டிருக்கேன் சார்....."

"அவங்க அன்னைக்கு பெரிய நடிகருங்க....அப்படிப்பட்ட நடிகருங்கலையே லஷ்மி காந்தன்னு ஒரு மஞ்ச பத்திரிகை நிருபர் கொலை வழக்குல கைதுபன்னி உள்ளே போட்டுட்டாங்க....அவங்களுக்கே இந்த கதினா....இவனெல்லாம் பிஸ்கோத்து பய..."


அப்போது நடிகர் தரன்

"சார்...எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருது "

"சொல்லுங்க தரன் "

"டைரக்டர் ரெட்டி சார் படத்துக்கு நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தா ஸ்ரீமதி...அதே நாள்ல....இன்னொரு படத்துக்கும் கால்சீட் கொடுத்துட்டா....
எங்கள அறிமுகப்படுத்துன டைரக்டர் அவருதான். அதனால நம்ம டைரக்டர் தான....அப்புறம் பேசிக்கலாம்ன்னு உரிமையில அவரு  படத்துல நடிக்க போகாம வேற படத்துக்கு நடிக்க போயிட்டா....அதுனால அவங்க ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் கூட போன்ல நடந்துச்சாம். "

"இதை யாரு சொன்னது?"

"ஸ்ரீமதிதான் சொன்னா...."

"எப்ப?"

"இருபது நாளுக்கு முன்னாடி...."

"சரி அதுக்கப்புறம்?"

"கடுமையா போன்ல மிரட்டினாருன்னுஅன்னிக்கு ராத்திரி  என்கிட்டே சொல்லி அழுதா "

"அப்படியா? என்ன சொல்லி மிரட்டினாராம் "

"நன்றி கெட்டவ நீ....நான் அறிமுகப்படுத்தினேன்....இன்னைக்கு எனக்கு எதிரா பேசுறியா?உன்னை ஒழிக்காம விடமாட்டேன்.  நீ எப்படி பீல்டுல இருக்கேன்னு பார்த்திடுறேன்னு மிரட்டினாராம் "

விசாரணை வரும் வியாழன் தொடரும்.....

செவ்வாய், 15 மார்ச், 2011

விஜயகாந்த் + அண்ணா தி.மு.க-கூட்டணி= பலமா? பலவீனமா? (நேற்றைய தொடர்ச்சி)

 கடந்த பதிவில் தே.மு.தி.க- வின் வளர்ச்சி பற்றி பார்த்தோம்.....இனி.....இந்த கூட்டணியால் யாருக்கு பலமென்று பார்ப்போம்....


தே.மு.தி.க கடந்த சட்டமன்றத்தேர்தலில் பெற்றிருந்த மொத்த வாக்குகளில் நான்கு வகையினருக்கு பங்குண்டு.


அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா.தி.மு.க-வின் அதிருப்தி வோட்டுகள் +  ரசிகர் மன்றத்தினர் வாக்குகள் + ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் வெறுத்து போயிருந்த எம்.ஜி.ஆர் விசுவாசிகள் வாக்குகள் + நடுநிலையாளர்களின் வாக்குகள் எல்லாம் சேர்த்துதான் அந்த 27,64,223 வாக்குகளும், 8.32%  சதவிகிதமும். அதே வாக்குகள் இப்போதும் விஜயகாந்திற்கு அப்படியே  கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே....ஒவ்வொன்றாக பார்த்துவிடுவோம்.

 கடந்த முறை ஆட்சியிலிருந்த அண்ணா தி.மு.க-வின் அதிருப்தி  வாக்குகளை தி.மு.க வும் விஜயகாந்தும் பங்கிட்டு கொண்டது போல...இந்த முறை ஆட்சியிலிருப்பது தி.மு.க என்பதால் இப்போதைய அதிருப்தி வாக்குகளை அண்ணா.தி.மு.க வும், விஜயகாந்தும் பங்கிட்டு கொள்ளலாம். விஜயகாந்த் கூட்டணியில் இல்லாவிட்டாலும் அந்த வாக்குகளில் கணிசமான வாக்குகள் அண்ணா.தி.மு.க-விற்குத்தான் போகும்.

அடுத்து, ரசிகர் மன்றத்தினர் வாக்குகள். தமிழகம் முழுவதும் விஜயகாந்திற்கு 30,000 ரசிகர் மன்றம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு ரசிகர் மன்றத்திற்கு நூறு வாக்குகள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் 30,000 X 100 = 30,00000 வாக்குகள் பெற்றிருக்கலாம். 

அதன் பிறகு அதிருப்தி வாக்குகள், நடுநிலையாளர் வாக்குகள் என்று மொத்தமாக ஏறக்குறைய  40 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கலாம். ஆனால், 27 லட்சம் வாக்குகள்தான் மொத்தமாக கிடைத்தது. ரசிகர்களின் வாக்குகளிலேயே ஏறக்குறைய 3 லட்சம் வாக்குகள் குறைகிறதே?

அப்படியானால் யார் வாக்களிக்கவில்லை? நிச்சயம் நடுநிலையாளர்களும், அதிருப்தியாளர்களும் வாக்களித்திருப்பார்கள். வாக்களிக்காமல் விட்டது ரசிகர் மன்றத்தினர்தான்.

ரசிகர்களில் பாதி  பேர்தான் வாக்களித்துள்ளார்கள். ரசிகர்கள் முழுமையாக விஜயகாந்திற்கு வாக்களிக்காமல் போனது ஏன்? காரணம் இருக்கிறது.


விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தி.மு.க- வின் அனுதாபியாகவே பார்க்கப்பட்டதால் தி.மு.க.வினரில் கணிசமான பேர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்திலும் இருந்தார்கள். அதெல்லாம் நடிகராக இருந்தவரைதான். கட்சி ஆரம்பித்த போது அவர்கள் விலகி கொண்டாகள்.  அதையும் மீறி ஒரு சிலர் வாக்களித்திருக்கலாம்.

இந்த முறை அண்ணா.தி.மு.க-வுடன் கூட்டணி என்றதும் அவர்கள் விலகலாம்.
(என் நண்பர்களில் சிலர் விஜயகாந்த் ரசிகர்களாக  இருக்கிறார்கள்.அவர்கள் தி.மு.க- அனுதாபிகளும் கூட...கடந்த முறை 4 பேரை தவிர அவர்கள் யாரும் விஜயகாந்திற்கு வாக்களிக்கவில்லை. இந்த முறை அந்த நான்கு பேரில் ஒருவர்  விஜயகாந்திற்கு வாக்களிக்க போவதில்லை என்கிறார். காரணம் கேட்டபோது நாங்கள் போனமுறை கேப்டன் தனியாக நின்றதால் தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் கேப்டனுக்கு வாக்களித்தோம். ஆனால் இந்த முறை கூட்டணி போட்டுவிட்டார். கேப்டன் முதலமைச்சராக வேண்டுமானால் போராடலாம். எதுக்கு ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.மற்ற மூவர் விஜயாகந்துக்குத்தான் எங்கள் ஓட்டு என்று சொல்கிறார்கள்.  இது சில ரசிகர்களின் மனநிலைதான்.அனைத்து ரசிகர்களுக்கும் இது பொருந்தாது.)   இப்போதும் அப்படி ஏதும் நடக்கலாம்.

அடுத்து, எம்.ஜி.ஆர்-பெயரை அவரின் பிறந்த நாள், இறந்தநாள்,தேர்தல்  நாளின் போது மட்டும் கறிவேப்பிலை போல பயன்படுத்தி, மற்ற நாட்களில் அவரை பற்றிய நினைவே இல்லாமல் இருந்த  ஜெயலலிதாவின் சர்வாதிகார போக்கினால் மனம் வெறுத்து போயிருந்த எம்.ஜி.ஆர். விசுவாசிகள்.
அவர்களை எம்.ஜி.ஆர். தான் என் தலைவர், அவர் வழியில் என் ஆட்சி என்று சொல்லி ஜானகி அம்மையார் கொடுத்த எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை பயன்படுத்தி  விஜயகாந்த் கவர்ந்ததால் நமக்கு நல்ல தலைவன் கிடைத்துவிட்டார் என்று நினைத்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவை பிடிக்காமல்தான் விஜயகாந்திற்கு வாக்களித்தார்கள். அவர்களை மீண்டும் ஜெயலலிதாவின் பக்கம் திருப்புவது சிரமம்.



அடுத்து தி.மு.க வினரின் ஆட்சியையும் - அண்ணா.தி.மு.க ஆட்சியையும்  மாறி மாறி பார்த்துவிட்டு வெறுத்து போயிருந்த நடுநிலையாளர்கள்.
இரு கழகத்திற்கும் மாற்றாக விஜயகாந்த் வருவார் என்று நம்பி வாக்களித்த இவர்களின் நம்பிக்கை பொய்த்து போனதால் இவர்கள் வேறு வேட்பாளர்களை நாடக்கூடும், அல்லது  49 ஓ-வை பயன்படுத்தக்கூடும்.

மொத்தத்தில் விஜயகாந்த் வருகையால் அண்ணா.தி.மு.க-கூட்டணிக்கு லாபமுமில்லை, பலனுமில்லை. மாறாக, விஜயகாந்திற்கே பலம்.


காரணம், கடந்த முறை ஒரு தொகுதியில் ஜெயித்ததால் அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எத்தனை ஜெயித்தாலும் அவர்களின் கணக்கில் அது வரவுதான்.

கடந்த முறை போலல்லாமல் இம்முறை அண்ணா.தி.மு.க-வாக்கு வங்கியின் உதவியுடன் சில தொகுதிகள் ஜெயிக்கலாம். அது லாபத்தின் கணக்கில் ஏறும். அதேநேரம் ஒரு முதல்வர் வேட்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவர் இப்போது இன்னொருவரை முதல்வராக்க பாடுபடுவது விஜயகாந்தை பொறுத்தவரை பின்னடைவே....

தன்னை முதல்வராக முன்னிறுத்தி,அதை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்  கூட்டணி அமைத்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். அல்லது வாழ்வா சாவா என்று ஜெயிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஜெயலலிதாவிடம் குறைந்த பட்சம் துணை முதல்வர் பதவி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலாவது கூட்டணி சேர்ந்திருக்கலாம்.

  மொத்தத்தில் இந்த முறை கணிசமான எம்.எல்.ஏ-க்களை பெற்று கட்சியை காப்பாற்றி விடுவார் விஜயகாந்த்.  அதேநேரம் எதிர்காலத்தில் இன்னொரு வைகோ வாகவும் தமிழக அரசியலில் நீடித்து இருப்பார்.    இனி முதலமைச்சர் நாற்காலி என்பது சினிமாவில் மட்டுமே  விஜயகாந்திற்கு  சாத்தியம்.

நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக 

திங்கள், 14 மார்ச், 2011

ஜெயலலிதாவிடம் கேப்டன் சோல்ஜரான சோர வரலாறு


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியின் புண்ணியத்தில் ஒரு சுபயோக சுப தினத்தில் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கும், அன்புமணிக்கும் என்ன சம்பந்தம் என்றால்?.....
சம்பந்தம் இருக்கிறது....


ஒரு எம்.பி.-யாக கூட இல்லாத நிலையில் 2004-ஆம் ஆண்டு ,மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சரவையில் சுகாதாரத்துறை கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார் அன்புமணி.
அதன் பிறகே அவசரம் அவசரமாக தி.மு.க. உதவியுடன் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டார்.


அப்படிப்பட்ட அன்புமணியை எதிர்த்து கொல்லைப்புறம் வழியாக அமைச்சரவையில்  நுழைந்தவர் என்று
விஜயகாந்த் கமண்ட் அடித்தார்.

இது போதாதா பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு?
சும்மாவே சினிமாக்காரர்களுக்கு எதிராக போராடும் பா.ம.க-வினர்களை அந்த பேச்சு உசுப்பேற்றியது. விஜயகாந்தை பழிவாங்க வசதியாக கொஞ்ச நாளில் விஜயகாந்த் நடித்த கஜேந்த்ரா படம் வெளியானது.

இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம். ஏற்கனவே ரஜினி நடித்த பாபா திரைப்பட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடி அனுபவம் பெற்றவர்களுக்கு கஜேந்த்ரா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுவது சிரமமாக இருக்கவில்லை.

அப்போது தி.மு.க கூட்டணியில் பா.ம.க -இருந்ததால், தி.மு.க-வும் இந்த விஷயத்தில் அலட்டிக்கொள்ளவில்லை.


இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்....இனிமேல் நம் படப்பெட்டி ஓடாமல் நம் படம் ஓடவேண்டுமானால் அரசியல் ரீதியாக
நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற உத்வேகத்தில் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், தான் பிறந்த மண்ணான மதுரையில்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கினார். இதுதான் விஜயகாந்தின்  அரசியல் பிரவேசத்திற்கான முன்கதை சுருக்கம்.


அதுவரை தி.மு.க-வின் அனுதாபியாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது தி.மு.க-தலைமையையும் அதிர வைத்தது.
எம்.ஜி.ஆர் பாதையை தனக்கான பாதையாக வகுத்துக்கொண்ட விஜயகாந்த், கருப்பு எம்.ஜி.ஆர் என்ற பெயரோடு எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் இரத்தங்களையும் கவர ஆரம்பித்தார்.
அது  அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த  ஜெயலலிதாவையும் கடுப்பேற்றியது.


விஜயகாந்தின் கட்சியை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி, பாக்யராஜின் எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்ற கழகம், விஜய டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம் போன்றவற்றோடு ஒப்பிட்டு நகைத்தனர் அரசியல் பார்வையாளர்களும், மற்ற கட்சியினரும். ஆனால், நடந்ததோ வேறு....


கட்சி ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் 234- தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணியில்லாமல் சுயேட்சையாகவே   அதிரடியாக வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் விலை போய் விட்டதால் மீதமுள்ள 232- தொகுதிகளில் கேப்டனின் படை வீரர்கள் களம் கண்டனர்.

ஆஹா....இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒருவர் வந்துவிட்டார் என்று தமிழகமே நினைத்தது.  இப்போது பேசுவது போல் அதிரடியாகவெல்லாம் அந்த தேர்தலில் தி.மு.க-வை தாக்கவில்லை. இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க.,அண்ணா.தி.மு.க என்று மாறிமாறி ஆட்சியிலமர்த்தி வஞ்சிக்கப்பட்டிருந்த மக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும்
அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதா மீது வெறுப்பு கொண்டிருந்த மக்களுக்கும் விஜயகாந்தின் வருகை மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.

 இரு கழகங்களுக்கும்   மாற்று சக்தியாக விஜயகாந்தை நினைத்து அவரின் பின்னால் அணி திரண்டனர்...

அவர் காட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.தேர்தல் முடிவு வந்தது போட்டியிட்ட 232 தொகுதிகளில் விஜயகாந்த் தவிர மீதமுள்ள 231 தொகுதிகளிலும்   தோல்வியை தழுவினார்கள்.

அதேநேரம் 27,64,223 வாக்குகளுடன்   8.32%  சதவிகிதம் பெற்று தனிப்பெரும் சக்தியாக விளங்கி கிண்டலடித்த அரசியல் நோக்கர்களையும்,மற்ற  கட்சிகளையும் வாயடைக்க வைத்தது.


அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும்   கணிசமான வாக்குகள் வாங்கினார் விஜயகாந்த்.

அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளு மன்றதேர்தலில் 30,73,479  வாக்குகள் வாங்கி காட்டி தமிழக அரசியலில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.

ஆனால், தொடர் தோல்விகளாலும், பண விரயத்தினாலும்  சோர்ந்து போயிருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கூட்டணி முடிவை நோக்கி நகர்ந்தார்கள். விஜயகாந்த் மனதையும் கரைத்தார்கள்.

2011-நம் லட்சியம், அதை வெல்வது நிச்சயம் என்ற ஸ்லோகத்துடன்  வலம்  வந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளர்,  வெறும் 41-சீட்டுக்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி  வைத்து விட்டார். 

நாளைய முதல்வர் என்ற கனவில் திரிந்த விஜயகாந்த் இனி ஜெயலலிதா முதல்வராக காவடி தூக்கி காமடி பீஸ் ஆவார்.

விஜயகாந்த் அ.தி.மு.க-கூட்டணியில் இணைந்ததால் யாருக்கு லாபம்?
விஜயகாந்த் வருகையால் யாருமே வெல்ல முடியாத பலம் வாய்ந்த கூட்டணியாக அ.தி.மு.க-கூட்டணி திகழ்கிறதா? என்று நாளை அலசுவோம்.


டிஸ்கி: பதிவின் நீளம் படிப்பவர்களை சோர்வடைய செய்யும் என்பதால் இந்த பதிவை இரண்டு பகுதிகளாக்கி இருக்கிறேன்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

பதிவர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு? -பரபரப்பு சர்வே முடிவுகள்.


கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக என் வலைத்தளத்தில் வலது பக்கம்,
நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்?
என்ற தலைப்பிட்டு ஒரு விட்கேட் வைத்திருந்தேன்.
அதில் இதுவரை பதிவான வாக்குகள்: 1038
அதில்



அண்ணா.தி.மு.க கூட்டணி=  651 வாக்குகள் பெற்று,  62% சதவீதமும் 

தி.மு.க.கூட்டணி= 342  வாக்குகள்பெற்று , 32% சதவீதமும்

மூன்றாவது அணி= 45 வாக்குகள் பெற்று, 4% சதவீதமும்

பெற்றுள்ளது.

எனவே  அண்ணா தி.மு.க கூட்டணி:  651 (62%)வாக்குகள் பெற்று பதிவர்களிடையே   முன்னணியில் இருக்கிறது.


டிஸ்கி: இதை நாங்கள் ஒத்துக்கொள்ள முடியாது....இந்த வாக்குப்பதிவில் கலந்து கொண்ட பதிவர்கள் எல்லோரும் வாக்குப்பதிவு நடக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது....பலர் வெளிநாட்டில் இருக்கலாம். அவர்களா வந்து வாக்களிக்க போகிறார்கள் என்று சொல்லும் நண்பர்களுக்கு என் பதில் ஹி...ஹி.....




 நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக...........

சனி, 12 மார்ச், 2011

தமிழ்நாட்டுக்கு இன்னொரு டாக்டரும் ரெடி





பெரிய டாக்டர் விஜயகாந்த், சின்ன டாக்டர் விஜய் வரிசையில் நடிகர் விக்ரமும் சேர்ந்திருக்கிறார். 


ஆம் விக்ரமுக்கு இத்தாலியிலுள்ள மிலன் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. 


இந்தியாவிலேயே அதிக அளவு கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றிருப்பது தமிழ் சினிமா நடிகர்கள்தான். 



நடிகர்கள் கமல்ஹாஸன், மனோரமா,விஜயகாந்த்,  விஜய், இயக்குநர் ஷங்கர் உள்பட பலருக்கு பல்வேறு தனியார் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. 



ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகம் முதன் முதலாக ஒரு தமிழ் நடிகருக்கு வழங்கும் டாக்டர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சவாலான கதாபத்திரங்களை ஏற்று நடித்ததற்காக விக்ரமை கௌரவப் படுத்தும் வகையில் இவ்விருதினை அளிப்பதாக அந்த பல்கலைகழகம் அறிவித்துள்ளது. 



போகிறப்போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் கலைமாமணி பட்டம் பெற்றவர்களை விட,கவுரவ  டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பார்கள் போல....



கஷ்டப்பட்டு மருத்துவம் படிப்பவர்களும் டாக்டர்கள் தான் , ஒரு ஆராய்ச்சி பண்ணுவதற்காக ஆய்வுக்கட்டுரை சமர்பிப்பவர்களும் டாக்டர்தான், நோகாமல் இருக்கும் நடிகைகளும் டாக்டர்தானாம் என்ன கொடுமை இது?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

வெள்ளி, 11 மார்ச், 2011

மைக் இல்லாமலே நாங்க கேட்போம்ல...


 அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட் ஆலோசனை: மதிமுக, இ.கம்யூ. அதிர்ச்சி 

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி அதிர்ச்சி ஆகிட்டே இருப்பீங்க  ...தேர்தல் முடியறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு ஒரு முடிவு எடுங்க....

==================================


ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

செல்வப்பெருந்தகை மாதிரி இடையில் ஓடிப்போகாத ஆளுங்களை போடுங்க

==============================

தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கசப்புணர்வுடன் முடிவாகியுள்ளது: பி.ஜே.பி. கட்சியை சேர்ந்த எச்.ராஜா


அதான் யாரோடும் எந்த கசப்புணர்வும் வேண்டாமென்று தனியா நிற்க றீங் களோ?

=======================================

திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும்: தங்கபாலு

சி.பி.ஐ .- ரைடை சொல்லி மிரட்டிடுங்க...

=======================================


டெபாசிட் இழந்த விஜயகாந்த் கட்சிக்கு தனி சின்னம் வழங்க முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்


ஆபத்துக்கு பாவமில்லை. இரட்டை  இலை  சின்னத்திலேயே நில்லுங்களேன்

==========================================


அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி


மதிமுக, கம்யூனிஸ்ட் தவிர எல்லோருக்கும் கொடுங்க...

==========================================


40 தொகுதியில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் : ஜெகன் மூர்த்தி


சார்...அப்படியே பி.ஜே.பி-யோட கூட்டணி போட்டுக்கங்களே...அவங்களுக்கும் துணை கிடைச்ச மாதிரி இருக்கும் 

வியாழன், 10 மார்ச், 2011

சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..- பிரபல பதிவர் குற்றசாட்டு

இவர் வலைப்பதிவில் கலைஞரையும் தி.மு.க.,வையும் கடுமையாக சாடி வருபவர். 

மனதில் பட்டதை எந்த வித சமரசமுமின்றி பட்டென்று சொல்லும் சொற்ப பதிவர்களில் இவரும் ஒருவர்...

இவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே தமிழ்மணம் சூடான இடுகைகளில் இவரின் பதிவு கட்டாயம் இடம் பிடித்துவிடும்.

சமீபத்தில் ஜாக்கி சேகருடன் முரண்பட்டவர் 

அப்படிப்பட்ட பதிவர்  வேறுயாருமல்ல....நல்லநேரம் சதீஷ்குமார்தான் அவர். அவரிடம் நேற்று  என் மனதில் பட்ட விஷயங்களை கேள்விகளாக்கி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். அனுப்பிய சில மணிநேரங்களில் பதிலை எனக்கு அனுப்பியிருந்தார்.....இதோ எனது கேள்விகளும் அவரின் பதில்களும் 


1)  பதிவர்களுடன் மோதும் சர்ச்சை பதிவுகளை வெளியிடுகிறீர்களே....உண்மையான கோபமா..?ஹிட்ஸ்காகவா..?

ம்...முதல் கேள்வியே இடி மாதிரி இறங்குது....என்னமோ வாரம் மூணு பேர்கிட்ட வம்பிழுக்குற மாதிரி சொல்றீங்க...
 அந்தநேர கோபம் தான் அதெல்லாம்..அப்புறம் யோசிச்சு பார்த்தா இப்படி எழுதி இருக்க வேண்டாம்னு தோணும்....
ஜாக்கி விசயத்தில் அவர் கவுதம் மேனனுக்கு இப்பவும் சப்போர்ட் பன்றார்...அது சரியே என்கிறார்...எனக்கு சரியா படலை...நீங்க எழுதினது தப்புன்னு என் பிளாக்ல எழுதிட்டேன் அவ்வளவுதான்...திரட்டியில் நம் பதிவை இணைத்து பல ஆயிரம் பேர் படிக்க செய்யும் போதே நாம் தெருவிற்கு வந்துவிடுகிறோம்..தெருவில் நடக்கும்போது நீ மூடிக்கொண்டு நடந்தால் பிரச்சனை இல்லை..அம்மணமாக நடந்தால் உதை விழத்தானே செய்யும்..?நீ என்னை ஏண்டா பார்க்குற எனக்கேட்டால் என்ன அர்த்தம்..?
மற்றபடி...ஜாக்கியின் வாசகர்களில் நானும் ஒருவன்...

##############################################

2)பதிவுலகம் ரொம்ப மோசமானதா..?


சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..அவர்கள் சாதாரணமாக உப்புமா பதிவு,ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகள் போட்டு கட்டுரை எழுதி கவிதை என எழுதி சாதாரணமாக 20 ஓட்டு வாங்கி விடுவார்கள்..அப்போதான் அதே குழுவில் இருக்கும் இன்னொருவர் போடும் உப்புமா கவிதைக்கு இவர் ஓட்டு போடுவார்....சில பதிவர்கள் சாட்டில் வந்து தங்கள் இடுகை முகவரி கொடுத்து படிக்க சொல்வது வழக்கம்..அதுபோலத்தான் நானும் செய்தேன்..உடனே கமெண்ட் போடு ...ஓட்டு போடு..என வற்புறுத்துகிறார் என்னை சித்ரவதை செய்கிறார் என ஒரு பதிவர் புரளியை கிளப்பி விட்டுவிட்டார்...அட போ..நீயும் என்னை சாட்டில் வந்து ஓட்டு கேட்டவன் தானே...இப்படி பொய் பேசுகிறானே என நினைத்துக்கொண்டு இனி திரட்டியில் இணைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்....இது மோசமான அரசியலாக இருக்கிறது..

#####################################################


3) உங்களின் அரசியல் பதிவுகளெல்லாம் தி.மு.க.-வை சாடியும், அண்ணா.தி.மு.க-வை ஆதரித்தும் இருக்கிறதே? நீங்கள் அம்மா பிள்ளையா?


தேர்தல் சமயம் என்பதால் அதிகமான அரசியல் பதிவு எழுதுகிறேன்....4 லட்சம் ஈழமக்கள் கொல்லப்பட்டபோது,அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு,3 சீட் பிரச்சனைக்காக காங்கிரஸ்க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குகிறோம் ,மந்திரி சபையிலிருந்து விலகுகிறோம்என அறிவித்து ,நாடகமாடி.....மண்ணைக்கவ்வி,அசிங்கபட்டு...தான் ஒரு பக்கா அயோக்கிய சுயநலவாதி என நிரூபித்த....கருணாநிதியை எதிர்க்கும் எதிரிக்கு நான் ஆதரவாளன்..


மற்றபடி எப்போதும் நான் அம்மா பிள்ளைதான்(வீட்டில்) 

#############################################################


    .
3) தேர்தல் முடிவுகள் வருவது  இருக்கட்டும்....அடுத்து யார் ஆட்சி என்று உங்களின் ஜோதிடம் என்ன சொல்லுது?


ம்..இனிமேல்தான் கணிக்கனும்...பார்க்கலாம்...(எங்க ஒருத்தனும் நம்ப மாட்டான்...எப்படியும் ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டாத்தான் சொல்லுவ..?)

######################################################################

4) உங்களின் வலைப்பதிவில் எப்போது பார்த்தாலும் முப்பது நாப்பது பேர் ஆன் லைனில் இருக்கிறார்களே? அது உண்மையான வருகைதானா? அல்லது மீட்டரை சூடு வைத்துள்ளீர்கள?


போச்சு.....வலைப்பதிவு நண்பர்கள்.., இப்பவே ஃபோன் அடிச்சி...எனக்கு அந்த ரகசியத்தை சொல்லவே இல்லையே சொல்லு சொல்லுன்னு நச்சரிக்க போறாங்க..(டெய்லி 4 பதிவு போட்டா பதிவுக்கு 10 பேர் வரத்தான் செய்வாங்க...)

#####################################################

 5) பதிவுலக சர்ச்சைபற்றி? இது ஆரோக்கிய மானதுதானா?



இதுல என்னங்க ஆரோக்கியம் வேண்டி இருக்கு...உன் பிளாக்குல என்னை திட்டினா உடனே அடுத்த பத்தாவது நிமிசம் நான் திட்டப்போறேன்..நஜீபா...தொப்பி தொப்பி சர்ச்சை ரொம்ப கொடுமை....தொப்பி.. ஜெயலலிதாவை திட்ட ஒரு பதிவு தேவைப்பட்டது...சரியாக அன்று மகளிர் தினம் என்பதால் ,வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்...இது புரியாத நஜீபா பெண்களை மட்டம் தட்டும் தொப்பி தொப்பி தலையில் இடிவிழ என போஸ்ட் போட்டுவிட்டார்...அதுவும் சரியான இலக்கில்லாத, தெளிவான பார்வையில்லாததால்...இது சரியா வராதுக்கா போஸ்டை எடுத்துடுங்க..என சேட்டைக்காரன் கமெண்டில் எச்சரித்தார்...நானும் வழிமொழிந்தேன்..ஆனால் நிலமை கைமீறிவிட்டது...இன்று நஜீபாவை செமயாக வெளுத்து வாங்கியிருக்கிறார் தொப்பி தொப்பி....

ஒரு லூஸு...என்னை திட்டி இருக்கு என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போகிறது..தொப்பி தொப்பி...பதிவு...

செருப்படி வேணுமாம் இவனுகளுக்கு... என பெயரை போட்டே ஆரத்தி எடுத்தார் ஒரு பெண் பதிவர் போனவாரம்...

1000 பதிவர்கள் இருக்குமிடத்தில் சண்டைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்யும்...


##############################################################

6) தமிழ்மணம் டாப்-20-யில் எடுத்த எடுப்பிலேயே முதல் மூன்றில் ஒருவராக  இடம்  பிடித்துவிட்டீர்களே? அவர்களுக்கும்,உங்களுக்கும் இடையிலான பிரச்சினையை எப்படி தீர்த்தீர்கள்?

பிரச்சனையெல்லாம் ஒண்ணும் இல்ல...என்னோட பதிவை இணைச்சா...கட்டண சேவையில் உள்ள வலைப்பூ என வந்தது...இதை நண்பர் நீச்சல்காரன் உதவியால் ,தமிழ்மணத்திடம் சொல்லி ..,சரி செய்தபின் என் பிளாக் 4 மாதத்திற்கு பின் தமிழ்மணத்தில் தெரிய ஆரம்பித்தது....அவ்வளவுதான்..

தினசரி இரண்டு பதிவு போட்டா யாராக இருந்தாலும் தமிழ்மணம் டாப் 20 யில் முதல் ஐந்து இடத்திற்க்குள் வந்து விடலாம் ...நீங்க காப்பி பேஸ்ட் செஞ்சி போட்டாலும் சரி...


###########################################################

7.புது பதிவர்களுக்கு உங்க டிப்ஸ்..?


நல்ல பதிவுகளை ஃபாலோ செய்ங்க....உங்க எழுத்து திறமையை வளர்த்துக்குங்க..பிளாக் கிடைத்த சந்தோசத்தில் கண்டதையும் கிறுக்காதீங்க...சினிமா பதிவுகளை குறைச்சுக்குங்க...கமெண்ட் போட யோசிக்காதீங்க...தினசரி பத்து பிளாக்குகளில் கமெண்ட் போட வேண்டும்..கமெண்ட் போட பழகினால்தான் பதிவு எழுதி பழக முடியும்..கிண்டலும் கேலியுமாக கமெண்ட் போட பழகுங்கள்..பிரபல பதிவர்கள் பலர் கமெண்ட் போடுவதில் வல்லவர்களாக இருந்துதால் பதிவுலகில் வல்லவர்களானார்கள்

 ##########################################################    

டிஸ்கி: இதில் இடம்பெற்றிருக்கும் கேள்விவிகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு.....பதில்களுக்கு சதீஷ்குமார்தான் பொறுப்பு..(எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் ஹி...ஹி..)