சனி, 30 ஏப்ரல், 2011

புலன் விசாரணை-பாகம்-9


முந்தைய பாகங்கள் 



"அந்த கோபத்துலதான் அவங்கள கொலை பண்ணும் அளவுக்கு போனீங்க இல்லியா?"

"என்ன சார் இது புதுக்கதையா இருக்கு. நான் எதுக்கு ஸ்ரீமதிய கொலை பண்ணனும்?"

"நாங்க கேக்க வேண்டிய கேள்வியை நீங்க கேக்கறீங்க மிஸ்டர் தயாளன்.நீங்க அவங்கள மிரட்டியதா எங்களுக்கு தகவல் கிடைச்சிச்சு...."

"ஓ....நீங்க அதவச்சுத்தான் சொல்றீங்களா? நான் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா....ஸ்ரீமதி என்னை வேலைய விட்டு தூக்குன கடுப்புல அவங்களுக்கு போன் போட்டேன்....உங்களை ஒலிக்காம விடமாட்டேன்னு சொன்னேன்.அது உண்மை....அதுக்காக கொலை பண்ற அளவுக்கு நான் முட்டாளில்லை. "

"அப்புறம் எதுக்கு அப்படி சொன்னீங்க?"

"சொல்றேன் சார்...நான் உங்களை ஒழிக்காம விடமாட்டேன்னு சொன்னது கொலை பண்ணிடுவேங்கற அர்த்தத்தில இல்லை...நான் வேறொரு நடிகைக்கிட்ட வேலைக்கு சேர்ந்து ஸ்ரீமதிக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பையெல்லாம் தட்டி பறிச்சுக்கு அவங்கள படமே இல்லாம பண்ணி வீட்ல உட்கார வச்சிடனும்ங்கற அர்த்தத்துல சொன்னது"...

"இங்கே பாருங்க தயாளன் நீங்க எங்கிட்ட எந்த உண்மையும் மறைக்க முடியாது".....

"சார்....நான் சொல்றது நூறு சதவிகிதம் உண்மை. உங்களுக்கு இன்னும் என்மேல சந்தேகம் இருந்தா...உண்மை கண்டறியற சோதனை பண்ணுங்க...நான் உடன் படுறேன்."

"ஓகே..ஓகே...சரி நீங்க கிளம்புங்க....விசாரணைக்கு தேவைப்பட்டா அழைக்கிறோம்"...

"ரொம்ப நன்றி சார்." கிளம்பினான்.

அப்போது தில்லையம்பலம் போன் ஒலித்தது. இயக்குனர் ரெட்டி பேசினார்.

"வணக்கம் இன்ஸ்பெக்டர்".....

"வணக்கம் சார்"

"தயாளனை விசாரிச்சீங்களா?"

"விசாரிச்சுட்டேன்"

"ஏதாவது உருப்படியான தகவல் சொன்னானா?"

"இல்லை சார்..அவனிடம் தப்பு இருக்க மாதிரி தெரியல"....

"அப்படியா? வேறு என்ன செய்வதா உத்தேசம்? சார் அடுத்த கொலை நடக்கறதுக்குள்ள கொலையாளியை மடக்கிடுங்க.எல்லா நடிகைகளும் கொஞ்சம் பயந்து போயி இருக்காங்க"

"கவலை படாதீங்க...சீக்கிரம் பிடிச்சிடலாம்."

போனை கட் செய்தார்.

"கான்ஸ்டபிள் அந்த ஸ்ரீமதி கேஸ் பைலை எடுத்ததுக்கு வாங்க"....

கான்ஸ்டபிள் எடுத்து வந்தார்....

ஸ்ரீமதி கொலையான அன்று எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்வையிட்டார்....அதில் ஸ்ரீமதி இறந்து கிடந்தது பல கோணங்களில் புகைப்படமாக மாறியிருந்தது.

அத்தனை போட்டோக்களையும் பார்வையிட்டவர் ஒரு குறிப்பிட்ட போட்டோவை பார்த்ததும் மின்னல் வெட்டியது போல திடுக்கிட்டார்.
அதற்கு அடுத்த போட்டோவை பார்த்ததும் சந்தோசத்தில் கத்தினார்.

"கான்ஸ்டபிள் இங்க வாங்க...இந்த ரெண்டு போட்டோவையும் பாருங்க"....

கான்ஸ்டபிள் பார்த்தார்...

"சார் இது?"

"நல்லா பாருங்க முதல் போட்டோவுல இவன் கையில ஒரு லட்டர் வச்சிருக்கான்....அடுத்த போட்டோவுல அந்த லட்டர் கீழே கிடக்கு"...

"சார் இந்த லட்டர்?"

"இந்த லட்டர்தான் அது"
என்றவாறு பைலில், கலாச்சார சீரழிவிற்கு  கொண்டு சொல்லும் இப்படிப்பட்ட நடிகைகளை களையெடுக்கும் பணி தொடரும்' என்று எழுதி இருந்த லட்டரை எடுத்து காட்டினார்....

"அட..ஆமாம் சார்...நானும் அந்த மூலையில் இருந்துதான் இந்த லட்டரை எடுத்தேன்"..

"சே...ஆரம்பத்துல பார்த்திருந்தா இவ்வளவு அலைச்சல்  நமக்கு தேவை இருந்திருக்காது".

"அப்படினா....இவன்?"

"இன்னும் என்ன சந்தேகம்? நிச்சயமா இவன்தான் கொலைகாரன்...கிளம்புங்க அவனை மடக்கலாம்"....

எவன் என்று தெரிய ஞாயிறு வரை காத்திருங்கள் நண்பர்களே....


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

பதிவுலகில் ஒரு சுனாமி


சிராஜுதீன்.....எனக்கும் இவனுக்குமான நட்பு இன்று நேற்றல்ல....கடந்த இருபத்தைந்து வருடங்களை கடந்த நட்பு....எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்... அதில் இவனும் ஒருவன். நான் எல்லோரிடமும் நட்பாய் இருப்பேன். சிலரிடம் மட்டுமே நெருக்கமாய் இருப்பேன். அப்படி நெருக்கமாய் இருக்கும் சிலரில் இவனும் ஒருவன்.

MCA.,படித்துவிட்டு கடந்த ஐந்து வருடங்களாக  சென்னையில் சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறான். உரையாட  எல்லோருக்கும் தெரியும்...ஆனால் வாதாட ஒரு சிலருக்குத்தான் தெரியும். இவன் உரையாடவும் வாதாடவும் தெரிந்தவன்.

அரசியல், சினிமா,விளையாட்டு, தொழில்நுட்பம் என்று அனைத்து டாபிக்கிலும் பட்டையை கிளப்புவான்.நிறைய விஷயம் தெரிந்தவன். அப்படிப்பட்டவனை கடந்த ஆறு மாதங்களாக பதிவுலகத்திற்கு வருமாறு அழைத்தபடியே இருந்தேன். போடா, காலையிலிருந்து இரவுவரை கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மண்டை காயுது...இதில் பதிவுலகத்திற்கு வந்தால் இன்னும் மணிக்கணக்கில் கம்யூட்டர் முன் உக்கார வேண்டியதுதான்...அப்புறம் குடும்பத்தோடு ஸ்பென்ட் பண்ண முடியாது என்றான்.  இருந்தாலும் நான்  வாடா என்று அழைத்தபடியே இருந்தேன்.

கடந்த இரு வாரத்திற்கு முன்பு நான் சென்னைக்கு வந்து அவன் வீட்டில் தான் ஒருவாரம் தங்கினேன். அப்போது சில பிரபல பதிவர்களை சந்தித்தேன் (அது பற்றி தனியாக ஒரு பதிவு விரைவில் வரும்). இவனின் திறமையை பார்த்து சில பதிவர்கள் நீங்கள் ஏன் பதிவுலகத்திற்கு வரக்கூடாது என்று இவனிடம் கேட்டார்கள். விரைவில் வருகிறேன் என்று சொன்னவன் நேற்று வந்தே விட்டான்.

ஆம் டீக்கடை என்ற வலைப்பூவை ஆரம்பித்து எழுத ஆரம்பித்து விட்டான். ஆரம்பமே...அறிமுகமே கலக்கலாக எழுதியிருக்கான். போய் பார்த்துவிட்டு பின்னூட்டமிட்டு, வாக்குகளை போட்டு, follower-ஆக சேர்ந்து அவனை ஊக்கமும், உற்சாகமும் படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இனி தொடர்ந்து பதிவுலகில் ஒரு சுனாமியை ஏற்படுத்துவான் என்று நம்புவோம்.

சிராஜுதீனின் வலைப்பூ முகவரி:

டீக்கடை......

  http://vadaibajji.blogspot.com/

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு

வியாழன், 28 ஏப்ரல், 2011

பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமாரின் ஒருநாள்...


பதிவுலக மன்னன் அட்ராசக்க சி.பி.செந்தில்குமார் ஒருநாளை எப்படி செலவழிக்கிறார் என்று ஒரு பார்க்க நீண்டநாள் ஆசை...அதன் படி  வெள்ளிக்கிழமை அவரை கண்காணிக்க ஒருநபரை நியமித்தோம். இதற்கு ஆபரேசன் சி.பி.என்று பெயரிட்டோம். அவரை காலையிலிருந்து இரவுவரை கண்காணித்து நம் ஆள் கொடுத்த ரிப்போர்டை உங்கள் முன் சமர்பிக்கிறோம்.

காலை

 6 to 7 மணி - துயில் எழுதல், பல் துலக்குதல்,குளித்தல்  இன்னபிற....

7 to 9 மணி-  குளித்துவிட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து அவரின் வலைத்தளமான அட்ராசக்கையில் அன்றைய பதிவை வெளியிடுகிறார். பின்னர் பிற பதிவர்களின் பதிவை பார்வையிட்டு வாக்களித்து, முதன்முதலாக பரவசமாக என்று பின்னூட்டம் போடுகிறார்.

9 to 9:30 மணி-  காலை சிற்றுண்டியாக எட்டு தோசை, நாலு சப்பாத்தி, மூணு பூரி ஒரே மூச்சில் சாப்பிடுகிறார்.

9:30 to 10 மணி - சிறிது ஓய்வு

10 to 11 மணி - கையில் லேப்டப்புடன் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு சென்று, அன்று வெளியாகியுள்ள ஒரு புது படத்தை பார்க்க தியேட்டருக்குள் நுழைகிறார். லேப்டாப்பை ஆயத்த நிலையில் வைக்கிறார்.

11:15 மணி - படம் ஆரம்பம். இடையிடையே முக்கிய வசனங்களை லேப்டாப்பில் டைப் அடித்து சேமித்து வைக்கிறார்.


மதியம்

12:30 மணி- படம் இடைவேளை விடப்படுகிறது.அதுவரை பார்த்த காட்சிகளையும் வசனங்களையும் வரிசைபடுத்தி விமர்சனம் எழுத்து கிறார்...

12:45 மணி - மீண்டும் படம் ஆரம்பம்.
2:to 2:30 மணி - படம் முடிந்து வெளியேறி ஒரு ஓரமாக உட்கார்ந்து மீதி படத்தின் விமர்சனத்தையும் எழுதி கூகுள் இமேஜில் அந்த படத்திற்கு பொருத்தமான நடிகைகளின் கவர்ச்சி  படத்தை தேடி தன் விமர்சனத்தில் சேர்த்து தன்  பதிவை  வெளியிடுகிறார்......

பின்னர்  ஓட்டமும் நடையுமாக ஒரு சைவ ஹோட்டலில் நுழைந்து பரபரப்பாக சாப்பிட்டுவிட்டு அதே வேகத்தில் வெளியாகி இன்னொரு தியேட்டருக்குள் மேட்னி காட்சிக்காக நுழைகிறார்.


 2:30 மணி- படம் ஆரம்பம்.

மாலை

4:00 மணி-  இடைவேளை. முன்பு சொன்ன முறைப்படி முற்பாதிக்கான விமர்சனம் எழுதி சேமிக்கிறார்.

4:15 மணி-  மீண்டும் படம் ஆரம்பம்.

5:30 மணி-  படம் முடிகிறது...தியேட்டரை விட்டு வெளியேறி மேற்சொன்ன பாணியில் விமர்சனம் எழுதி தன் வலைப்பதிவில் வெளியிடுகிறார்.

6:00 மணி-  மீண்டும் ஒரு பிட்டு படம் ஓடும் தியேட்டருக்கு செல்கிறார்..வாசலில் இருக்கும் ஒரு டீக்கடையில் ஒரு டீயும், ஒரு வடையும் சாப்பிட்டுவிட்டு தியேட்டருக்குள் நுழைகிறார். பதிவில் குறிப்பிடுமளவிற்கு பிட்டுபடத்தில் வசனம் இடம்பெறாது, முழுக்க முழுக்க சீன்களே நிறைந்திருக்கும்.ஒரு சீனை மிஸ் பண்ணினாலும் காசுக்கு நட்டம்  என்பதால் தனது லேப்டாப்பை திறக்காமல் வெண்திரையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

6:30 மணி- படம் ஆரம்பம்...

இரவு

7:30 மணி-  இடைவேளை

7:45 மணி-மீண்டும் ஆரம்பம்

8:15 மணி-படம் முடிகிறது

8:30 மணி- பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து அடுத்த நாள் காலை வெளியிடுவதற்காக அந்த பிட்டு படத்தின் விமர்சனத்தை எழுதி சேமிக்கிறார்.

10:00 மணி- சாப்பிடுகிறார்

10:30 மணி- உறங்கப்போகிறார்.

இவ்வளவுதாங்க சிபி-யின் வெள்ளிக்கிழமை. நிறைவு பெறுகிறது.


டிஸ்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு...இதற்கும் சி.பி-யின் வெள்ளிக்கிழமைக்கும் சம்பந்தமில்லை. 
இது சிபி-யின் மனதை புண்படுத்தாது என்று நம்புகிறேன்
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

புதன், 27 ஏப்ரல், 2011

அப்படின்னா நம்ம பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நக்சலைட்டா?



எதுக்குப்பா சோகமா இருக்கே?

நான் பார்த்ததுக்கு இருந்த மளிகை கடை  வேலைய விட்டு தூக்கி விட்டுட்டாருப்பா என் முதலாளி

நீ நல்ல வேலைக்காரனாச்சே உன்னை எதுக்கு தூக்குனாறு?

அது ஒண்ணுமில்லை. இந்த மாசம் சம்பளம் கொஞ்சம் கூட்டிக்கேட்டேன் அதனால......

சம்பளம் அதிகமா  கேக்கும் அளவுக்கு என்னத்த சாதிச்சுட்டே நீ?

என்னப்பா இப்படி கேட்டுட்டே.... நாளு ஒண்ணுக்கு அம்பது கிலோ சீனி பொட்டலம் போட்டுருக்கேன்..மல்லி,மிளகாயின்னு வித்திருக்கேன். காலையில கரக்ட் டைமுக்கு கடைய திறந்துருக்கேன்...அப்புறம் கூட்டி பெருக்கியிருக்கேன்...

அடேங்கப்பா இவ்வளவு செஞ்சிருக்கியா? அதுசரி உன்னை மளிகை கடையில வேலைக்கு வச்சதே இந்த வேலையை செய்றதுக்குத்தானே?
அப்புறம் எதுக்கு உனக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சுக்கிட்டாங்கன்னு நினைக்கிறே?

என்னப்பா நீயும் எங்க முதலாளி மாதிரியே கேக்கறே?

வேறெப்படி கேக்கமுடியும்?

இப்படி கேட்டுத்தான் என் முதலாளி எங்கிட்ட மாட்டிக்கிட்டாரு?

மாட்டிக்கிட்டாரா எப்படி?

நான் சம்பளம் அதிகமா  கேட்டதுக்கு அவரு இதுக்குத்தான் உனக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கேன்..இதெல்லாம் உன் வேலைன்னாரு..அதுக்கு நான், ரோடு போட்டோம்,மேம்பாலம்   கட்டினோம், பஸ் வசதி செஞ்சு தந்தோம், குடிநீர் வசதி செஞ்சுதந்தோம்னு நம்ம முதலமச்சர்லே இருந்து மந்திரி, எம்.எல்.ஏ., வரைக்கும் வரைக்கும் சாதனை செஞ்சோம் ன்னு வோட்டுக்கேட்டாங்களே.நாமளும் அவங்க பெரிய சாதனை செஞ்சதா பல்ல இளிச்சுக்கு இவங்களுக்கு வோட்டு போட்டோமே... அதுக்குத்தானே நம்ம வோட்டு போட்டு இவங்கள பதவியில உட்கார வச்சோம்...அப்புறம் எதுக்கு சாதனை, புடலங்காயின்னு சொல்லணும்...அவங்க அப்படி செஞ்சது சாதனைன்னா நான் பொட்டலம் போட்டதும், சீனி வித்ததும் சாதனை தானே....அப்படின்னா அவங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமானு கேட்டேன்...உடனே அதுக்கு என் முதலாளி நீ ரொம்ப புத்திசாலியா இருக்கே...உனக்கு இங்கே வேலை இல்லேன்னு சொல்லி அனுப்பிட்டாரு...

நியாயமாத்தான் கேட்டுருக்கே..பரவாயில்லை விடு...நீ என்ன கலக்டர் வேலையா பார்த்தே....கவலைப்பட...

என்ன இருந்தாலும்..இப்ப எனக்கு வேலை இல்லையேப்பா?

ஒரு ஜன்னல மூடினா ஒரு ஜன்னல திறப்பான்னு சொல்லுவாங்க....கவலைய விடுப்பா...இப்படி மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்கத யாராவது பார்த்தா 49 ஓ போட்டவன்னு தப்பா நினைக்கப்போறாங்க...


ஏப்பா 49-O  போட்டவன் மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்கணும்...

இந்த தேர்தல்ல மொத்தம் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்குபோட்டிருக்காங்க... இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கிறார்களாம்.

எதுக்குப்பா?

இவர்களுக்கு நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதா சொல்றாங்க? இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும். இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகளே கொடுக்கறாங்களாம்.

அப்படி கொடுக்கறதுக்கு சட்டத்துல இடம் இருக்கா?

சட்டத்துல இடம் இருக்கிறதா தெரியல...இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற விவரங்களை தரணுமே  தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதுக்கு  விதிமுறையில் இடமில்லை. அதோடு  இந்த விவரங்களை தர்றதுக்கு  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குகூட  தேர்தல் கமிஷன் உத்தரவும் தரல.

அப்படி இருந்தும் வாங்குறாங்கன்னா இது ஆபத்தாச்சே?

ஆபத்துதான்...அடுத்த தேர்தல்ல 49 ஒ போடுறதுக்கு தைரியமா  யாரும் முன்வர மாட்டாங்க..அதுக்கு ஒரே வழி நாம முன்னாடியே பேசிகிட்டே மாதிரி வோட்டு போடற மிசின்ல 49-ஒ போடறதுக்குன்னு தனியா ஒரு பட்டன் வச்சாத்தான் உண்டு...நல்ல வேளையா,  கியூ பிராஞ்ச் போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49 ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை செய்வது போன்றதாகும்.எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின் விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் அப்படின்னு ஒருத்தர் கோர்டுக்கு போயி ஸ்டே வாங்கிட்டாரு.

அதுசரி  49-ஒ போட்டவங்க இப்ப அவருக்குத்தான் பெரிய ஓ போடணும். ஆமா எனக்கொரு சந்தேகம் ...49-ஒ போட்டதுக்கும் நக்சலைட்களுக்கும் என்ன சம்பந்தம்?

ம.க.இ.க-ன்னு ஒரு அமைப்பு தேர்தல புறக்கணிங்கன்னு  ஏற்கனவே சொல்லி துண்டு பிரசுரமெல்லாம் விட்டாங்க....அவங்க சொல்லித்தான் இவங்க தேர்தல புறக்கணிச்சாங்களா அல்லது 49-ஒ போட்டாங்களான்னு   சந்தேகப்படுறாங்கலாம்.

அப்படின்னா நம்ம பிரதமர் மன்மோகன்சிங் கூட யாருக்கும் வோட்டு போடாம தேர்தல புறக்கணிச்சாரே...அவரு  யாரு  சொல்லி வோட்டு போடாம இருந்தாரு... அப்படின்னா அவரும் நக்சலைட்டா?

அதை கியூ பிராஞ்ச்தான் சொல்லணும்.
சரிப்பா நான் கிளம்பறேன். மறுபடியும் சந்திப்போம்

டிஸ்கி: இன்று வரவேண்டிய புலன் விசாரணை தொடர்கதை வரும் ஞாயிறு வரும். மன்னிக்கவும்
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நடுநிலை(?) காப்பி பேஸ்ட் பதிவர்கள்


  இன்று தமிழில் வெளிவரும் ஜூனியர் விகடன்,குமுதம்  ரிப்போர்டர், நக்கீரன்  போன்ற பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை அப்படியே எடுத்து போட்டு தனது ஹிட்ஸ் ரேட்டை உயர்த்தி கொள்வதற்கென்றே சில பதிவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் முழுநேர வேலையே இந்த பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை ஈ அடிச்சான் காப்பி என்ற ரீதியில் ஒரு எழுத்து விடாமல் அப்படியே அடிப்பதுதான்....

அதற்காக அவர்கள் காப்பி ரைட் வாங்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.(நானும் சில நேரங்களில் அந்த செய்திகளின் முக்கியத்துவம் கருதி காப்பி செய்திருக்கிறேன்...அதே நேரம் அவர்கள் தளத்தில் படிக்க அனுமதித்த செய்திகளை மட்டுமே எடுத்திருக்கிறேன்.சந்தா கட்டி படிக்க சொல்லும்  செய்திகளை நகல் எடுத்ததில்லை).

அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் மேற்கண்ட இந்த பத்திரிகைகளை படிக்க முடியாது...சிலரே சந்தா கட்டியிருப்பார்கள்...அப்படி சந்தா கட்டி படிக்க முடியாத தமிழர்கள் இடம் இந்த செய்தியை கொண்டுபோகிறோம் என்பதுதான்... நல்லபணி....

அதேநேரம் பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க- எதிர்ப்பு செய்திகளை மட்டுமே இவர்கள் காப்பி பேஸ்ட் செய்து தனது தளத்தில் வெளியிடுகிறார்கள். மறந்தும் கூட அண்ணா.தி.மு.க-விற்கோ, அல்லது ஜெயலலிதாவிற்கோ எதிராக வெளிவரும் எந்த ஒரு செய்திகளையும் இவர்கள் காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவதில்லை. என்ன ஒரு நடு நிலைமை?....

வெளிநாடு வாழ் தமிழர்கள் தி.மு.க எதிர்ப்பு செய்திகளை மட்டும்தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்களா? ஏன் அண்ணா.தி.மு.க எதிர்ப்பு செய்திகளை வெளியிட்டால் படிக்க மாட்டார்களா? அப்படி அண்ணா.தி.மு.க எதிர்ப்பு செய்திகளை வெளியிட்டால் ஹிட்ஸ் ரேட் குறைந்து விடுமா? அல்லது தி.மு.க-எதிர்ப்பு செய்திகளை வெளியிட மட்டுமே அந்தந்த பத்திரிகைகளிடம் ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்களா? அல்லது ஜெயா & கோ-விடம் இருக்கும் பயமா என்று ஒரு எழவும் விளங்கவில்லை. நீங்களாவது சொல்லுங்களேன்...

நான் இப்படி கேட்பதால் என்னை தி.மு.க-வின் சொம்புதூக்கி என்று சொல்ல நினைப்பவர்களுக்கு.....என் தளத்தில் பாருங்கள் நான் யாருக்காவது சொம்பு தூக்கி இருக்கிறேனா என்று? இரண்டு கட்சிகளையும் சமமாகத்தான் என் பதிவில் சாடியிருக்கிறேன்...




படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

திங்கள், 25 ஏப்ரல், 2011

தேர்தலில் கலைஞர் வென்றால் அல்லது தோற்றால்.....


நடந்த சட்டசபை தேர்தலில் ஒருவேளை தி.மு.க-வே மீண்டும் வென்றால்.....கலைஞர் எப்படி அறிக்கை விடுவார் ஒரு கற்பனை....

உடன் பிறப்பே,
தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக்காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு ஆளுங்கட்சிக்கு பல திக்குகளிலிருந்தும் எதிர்ப்புக்கணைகள் தொடுக்கப்பட்டன.அவையனைத்தும் முனை முறிந்து போகும் வண்ணம் செய்த பெருமை மக்கள் சக்திக்குத்தான் உரியது.
தேர்தல் ஆணையத்தின் இத்தனை கெடுபிடிகளையும் மீறி கழகம் பெற்றிருப்பது சாதாரண வெற்றியல்ல..ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒரு ரூபாய் அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், 108 ஆம்புலன்ஸ், கேஸ் அடுப்பு என்று கழக அரசின் சாதனைகளை உணர்ந்தவர்களும், சலுகைகளை பெற்றவர்களும் நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதையே இந்த தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.
ஏழை எளிய மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்களுக்கு கிடைத்திருக்கும் இடத்தை அம்மையாரால் அகற்ற முடியவில்லை....அகற்ற முடியாது என்பதற்கு இதைவிட புகழ்பெற்ற சான்று வேறு இருக்க முடியாது.
கொடநாட்டு அம்மையாருக்கு மரண அடி கொடுத்து மீண்டும் கழக ஆட்சி தொடர வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி...இதற்காக அயராது பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி...மேலும் புயலென சுற்றி வந்த வைகைபுயல், கருப்பு நாகேஷ் தம்பி வடிவேலு, திராவிட திருவிளக்கு குஷ்பு ஆகியோருக்கும் நன்றி...இந்த வெற்றி மலர்களை எங்களை ஆளாக்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தலைவன் அறிஞர் அண்ணா அவர்களின் பாத மலர்களுக்கு  காணிக்கை ஆக்குகிறேன்.

**********************************

ஒரு வேளை தி.மு.க-தோற்றால்....

உடன் பிறப்பே,
தோல்வி கண்டு துவண்டு விடாதே, 1962-இல் காஞ்சியில் நமது அண்ணனின் தோல்வியை மனதில் வைத்து ஆறுதலடைந்து கொள்...ஊக்கம் பெறு....

நடந்து முடிந்த ஆரிய திராவிட யுத்தத்தில் நாம் தோற்கடிக்க பட்டிருக்கிறோம்....இல்லை.... இல்லை...வெற்றி வாய்ப்பை  தற்காலிகமாக  இழந்திருக்கிறோம். 
தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுக்கொண்டு கொடநாட்டு அம்மையார் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லாம்....ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அப்படி சொல்லவில்லை.
நமக்கான தோல்வி என்பது ஒரு செயற்கையான தோல்வி. தேர்தல் ஆணையமும், ஆரிய பத்திரிகைகளும் திராவிடர்களுக்கான நமது ஆட்சியை ஒழிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டினார்கள் என்பதை நான் அறியாதவனல்ல....

தோல்வியை கண்டு துவள்பவன் அல்ல...தோல்வியையும், வெற்றியையும் ஒன்றாக கருதுபவன் தான்  இந்த கருணாநிதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் ஈரோட்டு குருகுலத்திலும், காஞ்சி தலைவனிடத்திலும் நான் பயின்ற பால பாடம்.

பதவியில் இருந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. பதவியில் இல்லாவிட்டாலும் திரை படங்களுக்கு  வசனம் எழுதுவது, இலக்கியங்கள் படைப்பது என்று என் பணி தொடரும்.

பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல....மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல...நாம் இப்போது துண்டைத்தான் இழந்திருக்கிறோமே தவிர வேட்டியை அல்ல....

ஜெயித்தால் அண்ணா வழி...தோற்றால் பெரியார் வழி....இதுதான் காலங்காலமாக நான் கடை பிடித்து வரும் கொள்கை.  இனி பெரியார் வழியில் என் பயணம் தொடரும்....கலங்காதே....

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஏன்யா குழந்தைய கொடுக்க சொன்னா?...-18+ ஜோக்ஸ்


நம்ம ஹீரோவோட மகளுக்கு காலேஜ்ல நடக்குற ஒரு விழாவுக்கு அழைப்பு பத்திரிக்கை கிடைச்சது. அது ஒரு பிரமாண்டமான விழா.

எல்லா தரப்பு அறிஞர்களும் வர இருந்ததா அந்த அழைப்பு பத்திரிக்கையில இருந்தது. ஆனா அதுல விழாவுக்கு வரும் அனைத்து மாணவிகளும் கண்டிப்பாக பச்சை TIE மட்டும்’ ன்னு ஒரு முக்கியமான கண்டிஷன் போட்டு இருந்தாங்க.

அட இது என்னடா புது கண்டிஷனா இருக்குன்னு நெனைசிகிட்டா. சரி அதனால என்ன நாம எல்லா அறிஞர்களையும் பார்த்திடனுமுன்னு  ஆசையாவும் இருந்தா.

விழா நடக்குற அன்னைக்கு பச்சைக்கலர் tie மட்டும் அணிந்து வந்தா வேறு ட்ரெஸ் ஏதும் போடாமல்,காலேஜ் வந்த அவ எல்லாரும் அந்த பச்சை TIE கூட பேன்ட்  பிளஸ் ஷர்ட் போட்டு இருத்த பார்த்து மயக்கம் போட்டு தொப்புன்னு கீழே விழுந்தா.

///////////////

மூன்று நடுத்தர வயது ஆண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்:

முதலாமவன் சொன்னான்: “என் மகளின் அறையில், சிகரெட்டுகளைப் பார்த்தேன், என் மகள் சிகரெட் பிடிக்கிறாள் என்பதை நம்ப முடியலை.”

இரண்டாமவன் சொன்னான்: “என் மகளின் அறையில் ஒரு மது பாட்டிலைப் பார்த்தேன், என் மகள் குடிக்கிறாள் என்பதை நம்ப முடியலை”

மூன்றாமவன் சொன்னான்: “என் மகளின் கைப்பையில் ஆணுறைகளைப் பார்த்தேன். ஆணாக மாறிட்டால் என்பதை நம்ப முடியலை”
////////////////////

மகன்: அம்மா ,வேலைக்காரி உன் பெட்ரூம்ல  படுத்திருக்கா

அம்மா:அப்படியா அவள இப்பவே வேலையவிட்டு துரத்திடுறேன்   ….

மகன்: ஏப்ரல் பூல்……….அவகூட  அப்பாவும்  படுத்திருக்காரு ………….
.////

சஞ்சய்க்கும் சாந்திக்கும் ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்தது.

கொஞ்ச வருடங்களுக்கு அப்புறம் சாந்தியின் வயிறு உப்ப ஆரம்பிச்சு விட்டது.

மருத்துவரிடம் இருவரும் சென்றார்கள், டாக்டர் செக்கப் செய்து விட்டு

“ஒன்றுமில்ல வயிற்றில் இருப்பது வெறும் கேஸ் (gas) தான்” என்றார்.
சாந்தி கடுப்பாக சஞ்சயை பார்த்து கேட்டாள்: “ஏன்யா குழந்தைய கொடுக்க  சொன்னா...வெறும் காத்தை அடிச்சிருக்கே?” 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கேபிள் சங்கரை மேற்கோள் காட்டி பதிவர்களை பெருமைபடுத்திய அரசு

 
இந்த வாரம் வெளிவந்த குமுதம் அரசு பதில்களில் இடையார்பாளையம்  வி.பி.ஆலாலசுந்தரம் என்னும்  வாசகர் கேட்ட 'நண்பனுக்கும்,நெருங்கிய நண்பனுக்கும் என்ன வித்யாசம்?' என்ற கேள்விக்கு
அரசு கூறிய பதில்:
 
நாம் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிட்டல்ல இருந்தால் நண்பன் என்றால், 'உடம்பு எப்படி இருக்கு?' என்று கேட்பான். நெருங்கிய நண்பன் என்றால்...'டே  நர்ஸ் எப்படி இருக்கா?'என்று கேட்பான்.கேபிள்சங்கரின் கொத்துபரோட்டாவில் படித்தது என்று குறிப்பிட்டிருந்தார்.





கடந்த 60 வருடங்களை கடந்தும் இன்றும் இளமையாக தமிழில் நம்பர்-1 வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கும், வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாளை தன் வசப்படுத்தியிருக்கும் இதழான குமுதம், ஒரு வாசகரின் கேள்விக்கு பொருத்தமாக  கேபிளின் பதிவிலிருந்து ஒன்றை மேற்கோள் காட்டியிருப்பது பதிவர்களாகிய நமக்கெல்லாம் பெருமைதானே.... 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

வியாழன், 21 ஏப்ரல், 2011

சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளையும்-மாப்பிள்ளையின் மாப்பிள்ளையும் ஒரு ஒப்பீடு.....(18+அல்ல...)

நேற்று என் பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு தொலைபேசியிலும், பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் வாழ்த்து சொன்ன பதிவுலக நண்பர்களுக்கும், தனது வலைப்பதிவில் சிறப்பு பதிவு வெளியிட்ட நண்பர் ரசிகன்  ஷர்புதீன் அவர்களுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி....

மாப்பிள்ளையும் மாமனாரும் 






சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளை 


 


ஹீரோ: ரஜினிகாந்த்ஹீரோயின்: அமலா
வில்லி: ஸ்ரீவித்யா
இசை: இளையராஜா
தயாரிப்பு: அல்லு அரவிந்த்
இயக்கம்: ராஜசேகர்
வெளியான ஆண்டு: 1989



சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளையான தனுஷின் மாப்பிள்ளை



 
ஹீரோ: தனுஷ்
ஹீரோயின்: ஹன்ஷிகா  மோத்வாணி 
வில்லி: மனிஷா கொய்ராலா
இசை: மணிஷர்மா
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
இயக்கம்: சுராஜ்
வெளியான ஆண்டு: 2011




படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

புதன், 20 ஏப்ரல், 2011

பணம் படைத்த கே.ஆர்.பி.செந்தில்



"சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் எழுத வேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனது கஷ்டப்படும். மகாத்மா காந்தி சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அது எனக்கு வரும் போது எழுதுவேன்."-
சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க ஆண்டுவிழாவில். நீங்கள் சுயசரிதை எழுதுவீர்களா என்று நடிகர் ரஜினிகாந்திடம் இயக்குனர் பாலச்சந்தர் கேட்ட கேள்விக்கு, நடிகர் ரஜினி அளித்த பதில்தான் நீங்கள் மேலே கண்டது. 

அப்படி எதையுமே மறைக்காமல் தன் நண்பருக்கு நேர்ந்த விஷயங்களை (பாதுகாப்பு கருதி அவர்களின் உண்மை முகத்தை மறைத்துவிட்டு) தனக்கு நேர்ந்ததுபோல் எழுதப்பட்டதே இந்த பணம்.ஆம்....இந்த பணம் படைத்த ஆசிரியர் கே.ஆர்.பி.செந்தில் அவர்களுடைய நண்பருக்கு நேர்ந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புதான் இந்த  பணம்.


பொதுவாகவே நான் பத்திரிகையில் வரும் சினிமா விமர்சனங்களையும், புத்தக விமர்சனங்களையும் படிப்பதோடு சரி....விமர்சனம் எழுதும் அளவிற்கு என்னை ஒரு பெரிய அப்பாடக்கராக நினைத்து கொண்டதில்லை. ஆனால், இந்த பணம் புத்தகத்தை படிக்கும்போது...எனக்குள் ஏற்பட்ட உந்துதலே இந்த புத்தக விமர்சனம்.
 
இன்று மனிதனுக்கு மிக அத்தியாவசிய பொருளாக பணம் மாறிவிட்டது.
பணம் என்பது ஒரு விசித்திரமான மாய மான். அது, தன்னை துரத்துபவர்களுக்கு  குட்டி போட்டுவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது.குட்டிகளில் திருப்தியடையாத மனிதன் தாய் மானை பிடிக்கும் வேட்டையில் தவிக்க தவிக்க ஓடி செத்துப்போகிறான் என்று தண்ணீர் தேசம் நாவலில் கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டதாக  நினைவு.

தேவையான அளவு பணமிருந்தால் நாம் அதற்கு எஜமான், தேவைக்கு அதிகமாக இருந்தால் நமக்கு அதுஎஜமான்,
பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது....பணம் இருந்தால் உனக்கு யாரையும் தெரியாது என்பதெல்லாம் பண மொழிகள்.மன்னிக்கவும் பழமொழிகள். 


அப்படிப்பட்ட பணத்தை தேடிப்போகும் ஒருவன் படும் அவஸ்த்தைகளையும், அவமானங்களையும், சந்திக்கும் துரோகங்களையும் மிக அருமையாக எடுத்து வைக்கிறார் ஆசிரியர் கே.ஆர்.பி.செந்தில் அவர்கள்.

 (இவர்தான் பணம் படைத்த ஆசிரியர் கே.ஆர்.பி.செந்தில்)

மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக வழங்கப்படுவது பிரம்படிதான். பிரம்படி என்றதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுப்பது போன்று நினைக்கவேண்டாம்..இது வேறு வகை....

கொதிக்கும் எண்ணையில் நல்ல கனமான பிரம்பை அமிழ்த்தி அதை கொண்டு  குற்றவாளிகளை  நிர்வாணமாக நிற்க வைத்து பிட்டத்தில் அடிப்பார்கள். செய்த தண்டனைகளை பொறுத்து அடிகளின் எண்ணிக்கை கூடும் அல்லது குறையும். அதை நாம் மனக்கண்ணில் கொண்டு வந்து கற்பனை செய்தாலே  நம் பிட்டம் கொஞ்சம் உள்ளிழுத்துக்கொள்ளும். அப்படிப்பட்ட அடியை வாங்கி இருக்கிறார் கே.ஆர்.பி.செந்திலின் நண்பர். 


இந்த இடத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் ஆசிரியர்...அதன் பிறகு நடந்த அனைத்தையும் காதல் உடலுறவு என்று  ஒன்று விடாமல் மிக துணிச்சலாக எடுத்து வைக்கிறார்...


 காடு,கழனி, வீடு, நிலம் நீச்சு என்று அனைத்தையும் விற்றோ அல்லது அடகு வைத்தோ அல்லது  வட்டிக்கு வாங்கியோ பணத்தை ஈட்ட வெளிநாடு (மோகத்தில்) செல்பவர்கள், முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றால் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று தனது நண்பருக்கு நேர்ந்த அனுபவங்கள் மூலம் நமக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் கே.ஆர்.பி.செந்தில்.

வெளிநாடு செல்பவர்கள்..அப்படி செல்வதற்கு முன் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ஒரு கையேடுதான் இந்த பணம் என்ற புத்தகம்.


பணம் புத்தகத்தை வாங்க.....இங்கே கிளிக் பண்ணுங்க... 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இதையும் படிங்க பாஸ்
இன்று என் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர் ரசிகன் சர்புதீன் வெளியிட்டிருக்கும் பதிவு  

ரஹீம் கஸாலிக்கு பிறந்த நாள்!


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

புலன் விசாரணை-பாகம்-8


முந்தைய பாகங்கள் 



சென்னை.... டைரக்டர் ரெட்டி வீடு....இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் பேசிக்கொண்டு இருந்தார்.

"ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் போன் போட்டபோது நீங்க அரசர்குளத்துல இருந்ததா சொன்னீங்களே...."

"ஆமா சார்...ஏதாவது விசாரணைக்கு உதவுமான்னு ஸ்ரீமதி அண்ணன் முத்துக்குமார பார்க்க போயிருந்தேன்..."

"ஏதாவது உபயோகமான தகவல் கிடைச்சதா?"

"அந்த நடிகையோட அண்ணன்ட்ட பேசி பார்த்ததிலிருந்து ஒரு புண்ணாக்கும்  கிடைக்கலசார்......ஒரே சோதனையா இருக்கு....எதுக்குத்தான் இந்த சனியன் புடிச்ச வேலைக்கு வந்தோமோ...."

"கூல்...கூல்....நான் இப்ப உங்களுக்கு ஒரு தகவல் சொல்லப்போறேன். நான் வெளிநாட்டுக்கு போனா பெரும்பாலும் வழக்கமா யூஸ் பண்ற செல்போன  யூஸ் பண்ணுறதில்லை. இன்னொரு நம்பர்தான்.ஆனா அந்த நம்பர் என் பேமிலி மெம்பர்கிட்ட மட்டும்தான் தெரியும் .  அப்படித்தான் வெளிநாடு ஷூட்டிங் போற அன்னைக்கும் வழக்கமான செல்போன் யூஸ்பண்ணாம ஆஃப் பண்ணி வச்சிருந்தேன். இங்கே வந்தபோதுதான் ஆன் பண்ணினேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்களுக்கு போன் போட்டுட்டு எதார்த்தமா போன்ல வந்த எஸ்.எம்.எஸ். செக் பண்ணிட்டு இருக்கையில ஸ்ரீமதி அனுப்புன ஒரு சம்ஸ்.என் கண்ணுல மாட்டுச்சு.அதுல...அவளோட பி.ஏ. தயாளன் அவள மிரட்டுறதாகவும்,பயமா இருக்கதாகவும்  அனுப்பியிருந்தா"...என்றவாறு செல்போனை காட்டினார். 
அதை பார்த்த இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்...

"இது என்னைக்கு வந்துச்சுன்னு தெரியுமா? "

"அவ இறந்து போன ஒரு நாளைக்கு முன்னாடின்னு நினைக்கிறேன்..."

"இப்ப தயாளன் எங்கே இருப்பான்?..."

"சென்னையில்தான் இருக்கான்னு நினைக்கிறேன்."

"அவனோட போன் நம்பரை கொடுங்க...நான் போட்டு பேசிக்கிறேன் "

ரெட்டி சொல்ல..சொல்ல தில்லையம்பலம் தன் போனில் பதிவு செய்துகொண்டார்.

"ஓகே..சார்.ரொம்ப நன்றி....நான் கிளம்பறேன்..."
******************************

போலீஸ் ஸ்டேசன்....

தயாளனுக்கு போன்போட்டுவிட்டு காத்திருந்தார் தில்லையம்பலம்
சிறிது நேரத்தில் தயாளன் வந்தான்.
விசாரணையை ஆரம்பித்தார்.

"வாங்க...தயாளன்....ஸ்ரீமதி கொலை கேஸ் விசயமா  ஒரு சின்ன விசாரணை."

"நீங்க அதுக்குத்தான் வர சொல்லிருப்பீங்கன்னு தெரியும் சார்...."

"நீங்க அவங்கட்ட எவ்வளவு நாளா வேலைக்கு இருந்தீங்க?"

"அவங்க ரெண்டாவது படத்திலிருந்து நான்தான் சார் கால்சீட் விவகாரங்களைஎல்லாம் கவனிச்சுக்கு இருந்தேன்."

"அவங்க கேரக்டர் எப்படி?"

"ரொம்ப கறாரா இருப்பாங்க....."

"நான் அதை கேக்கல....வெளி தொடர்புகள்....அது இதுன்னு?"

"எனக்கு தெரிஞ்சவரையும் கொஞ்சம் சுத்தமான ஆளுதான்..."

"கொஞ்சம்னா?"

"என்னைக்காவது பார்ட்டி  கீர்ட்டின்னு  வெளியில போவாங்க....ஆனா அங்க போயி என்ன பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியாது"

"அப்படியா....சரி அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை....எதுக்காக உங்கள வேலையிலிருந்து தூக்கினாங்க?"

"ஒரு கால்சீட் பிரச்சினையில் கொஞ்சம் குளறுபடி பண்ணிட்டேன்...அதுல கோபமான அவங்க என்னை வேலைலேர்ந்து தூக்கிட்டாங்க..."

"அந்த கோபத்துலதான் அவங்கள கொலை பண்ணும் அளவுக்கு போனீங்க இல்லியா?"

விசாரணை தொடரும்

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நான் ரஹீம் கஸாலி ஆனது எப்படி?

தேர்தல் முடிந்து விட்டதால்...பரபரப்பாக(?) அரசியல் பதிவு எழுதிக்கொண்டிருந்த எனக்கு பெரிய குழப்பம்.இனி என்ன எழுதுவது என்று?.....
அப்படிப்பட்ட நேரத்தில் எனக்கு கை கொடுத்தது நண்பர் செங்கோவி.....ஆம் இன்று ,  பெயர்காரணம் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அப்போதுதான் எனக்கும் நினைவிற்கு வந்தது....சமீபத்தில் என்னை பெயர்காரணம் தொடர்பதிவிற்கு நண்பர் தம்பி கூர்மதியான் அழைத்த விஷயம்....
ஏற்கனவே ஒரு முறை இதை பற்றி எழுதிவிட்டாலும் அதனாலென்ன இன்னொரு முறையும் எழுதி விடுவோமே  என்று எனது பிறந்தநாளான நாளை எழுதலாம் என்று நினைத்தேன்...ஆனால் நாளை ஒரு தொடர்கதை போடவேண்டி இருப்பதால்(பெரிய ராஜேஷ்குமார்?) இன்றே  களத்தில் இறங்கிவிட்டேன்(பதிவு எழுத ஒரு விஷயமும் இல்லை என்று நேரடியாக கூறாமல் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது).

நான் பிறந்த போது எனக்கு ஒரு வித்தியாசமான, அதேநேரம் எங்கள் ஊரில் யாருக்கும் இல்லாத பெயரான ஒன்றை வைக்க வேண்டுமென்று எங்கள் அய்யா (அதாவது தாத்தா....நாங்கள் இஸ்லாமியர் என்பதால் தாத்தாவை அய்யா என்றும், தந்தையை அத்தா என்றும் அழைப்போம்...ஆனால் கடற்கரை பக்கமுள்ள இஸ்லாமியர்கள் தந்தையை வாப்பா என்பார்கள்) எனக்காக தேர்ந்தெடுத்த பெயர் முகம்மது கஸ்ஸாலி. (இந்த பெயர் இன்று வரை எங்கள் ஊரில் யாருக்கும் இல்லை....அதற்காக நான் காப்பிரைட் எல்லாம் வாங்கவில்லை....என்னவோ யாரும் வைக்கவில்லை).

கஸ்ஸாலி என்ற பெயரில் இருந்த அழுத்தம் காரணமாக சிலர் உச்சரிக்க வராமல் கஜ்ஜாலி, காசாளி என்றெல்லாம் அழைத்து கடித்து துப்பினார்கள். அதன்பிறகு நானே என் பெயரை லேசாக மாற்றினேன்...என் பெயரிலிருந்த "ஸ்"-ஐ நீக்கிவிட்டு முகமது கஸாலி என்று வைத்துக்கொண்டேன்....
என் ஊர் நண்பர்களுக்கும்,என் பள்ளி நண்பர்களுக்கும் என் பெயர் கஸாலி தான். அப்படித்தான் அழைப்பார்கள். அழைக்கிறார்கள். சரி....வலைப்பதிவு ஆரம்பிக்க நினைத்தபோது முகமது கஸாலி என்றுதான் ஆரம்பிக்க நினைத்தேன்..ஆனால் முகமது என்பது பொதுப்பெயர் என்பதால் வெறும் கஸாலி போதுமே என்று எண்ணினேன். ஆனால் அது ரொம்ப சிறிய பெயராக இருக்கிறதாக என் நண்பன் பிரபல  பதிவர் சிராஜுதீன் சொன்னதால் என் தந்தை பெயரான ரஹீம் என்ற பெயரை கஸாலிக்கு முன் சேர்த்து  ரஹீம் கஸாலி ஆகிவிட்டேன்.

எல்லோரும் தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக வைத்து கொள்வார்கள். ஆனால் நான் தந்தை பெயரையே இன்சியலாக வைத்துக்கொண்டேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் பதிவுலக நண்பர்கள் கஸாலி என்ற என் பெயரிலேயே அழைப்பதும் பின்னூட்டமிடுவதும் ரொம்ப கம்மி, என் தந்தை பெயரான ரஹீம் பெயரிலேயே அழைக்கிறார்கள். இதனால் என் பதிவுல சொந்தங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் எனக்கு பின்னூட்டம் போடும்போதும், என்னை தொலைபேசியில் அழைக்கும் போதும் இனி கஸாலி என்றே அழையுங்கள்....ரஹீம் என்று அழைப்பதால் எனக்கு சங்கடமாக இருக்கிறது என் தந்தை பெயரை இப்படி ஏலம் போட வைத்துவிட்டோமே என்று....
அவ்வளவுதாங்க......

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

திங்கள், 18 ஏப்ரல், 2011

தேர்தலில் ஜெயலலிதா வென்றால் ...அல்லது தோற்றால்....


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு வேளை  அண்ணா.தி.மு.க.ஜெயித்தால்.....

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கருணாநிதியின் பாசிச ஆட்சியை அகற்றி மீண்டும் அனைத்திந்திய அண்ணா.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க வாய்ப்பளித்துள்ளார்கள்.நான் பிரச்சாரத்திற்க்காக போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு அன்பு சகோதரியான எனக்கு ஆதரவு தெரிவித்த போதே எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம், மணல்கொள்ளை, கேபிள் டி.வி .ஆதிக்கம், அரிசி கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கருணாநிதியின் கொடுங்கோல்  ஆட்சியில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒரு விடிவு என் மூலம் ஏற்பட்டிருக்கிறது...இவ்வளவு பெரிய வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.மிரட்டலுக்கு அஞ்சாமல் மிகவும் நியாயமாக தேர்தல் நடக்க அவர்கள்தான் காரணம். எங்களுக்கு வாக்களித்த  மக்களுக்கு நன்றி.....கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி....
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...


ஒருவேளை தோற்றால்.....

ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செயற்கையான  ஒரு வெற்றியை பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள் கருணாநிதியும், அவர் கட்சியினரும். தமிழ்நாடு முழுவதும் ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி இறைத்திருக்கிறார்கள். எங்களுக்கு சாதகமாக நடப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு தி.மு.க-விற்கு சாதகமாக நடந்து கொண்ட தேர்தல் கமிசனுக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இருந்த ஒரு மாதத்தில், நிறைய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு மாத இடைவெளி இருந்த போதே சுதாரித்து இருக்கணும்.தேர்தல் ஆணையத்தை நம்பி மோசம் போயிட்டோம் முக்கியமாக  தேர்தல் முடிந்து சில நாட்களில் மு.க அழகிரிஅமெரிக்காவிற்கு ரகசியமாக சென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்களுக்கு விழுந்த ஓட்டுக்களை உதய சூரியன் சின்னத்தில் மாற்றும் வசதியுள்ள புதிய நவீன ரிமோட்டை அங்குள்ள வல்லுனர்கள் மூலம் தயாரித்து எடுத்து  வந்துள்ள தகவல் எனக்கு சுப்ரமணியம்சாமி மூலம் கிடைத்தது.அந்த நவீன ரிமோட் மூலம்  வீட்டிலிருந்த படியே எல்லா வாக்குகளையும் தி.மு.க சின்னத்தில் திருப்பி விட்டிருக்கிறார் அழகிரி .அதற்காக சுமார் ரெண்டாயிரம் கோடி ரூபாயை ஹவாலா மூலம் கை மாற்றியுள்ளார்.மேலும்,விஜயகாந்த் குடித்துவிட்டு செய்த பிரச்சாரமே எங்களுக்கு எதிராக மாறிவிட்டது.எதற்கும் கலங்காமல் களப்பணி ஆற்றுங்கள்...உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே... தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும். ஜெயிற்றால் கோட்டை..தோற்றால் கொடநாடு என்னும் எனது கொள்கையின் படி இப்போது கொடநாடு செல்கிறேன்.
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

காங்கிரசை கலைத்து விடுங்கள் சொக்கத்தங்கமே......


டந்த சிலநாட்களாக காங்கிரசில் அசிங்கங்களும்,அபத்தங்களும் அரங்கேறி வருகிறது. இத்தாலி தங்கம் சோனியா, கொலம்பியா நாட்டு(வருங்கால) மருமகன் ராகுல் அவர்களின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகளும், சித்து விளையாட்டும் செய்திருந்தார் தங்கபாலு.

இதோ இப்போது எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி அடுத்த காமெடிக்கு அடிபோட்டிருக்கிறார் அண்ணன் தங்கபாலு.

ஆனால், சேர்ந்தே இருப்பது எது? என்ற திருவிளையாடல் பாணி கேள்விக்கு எல்லோரும் பட்டென்று பதில் சொல்வது காங்கிரசும், கோஷ்டி பூசலும் என்றுதான். இது இன்றில்லை தொன்றுதொட்டு தொடர்கிறது.
காமராஜர் காலத்திலேயே....இல்லை இல்லை...அதற்க்கு முன்பு தீரர் சத்தியமூர்த்தி காலத்திலேயே சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று பல கோஷ்டிகள் இருந்து ஒருவருக்கொருவர் காலை வாரிக்கொண்டு இருந்தார்கள். இப்போது காமராஜர் உயிரோடு வந்தால் கூட சத்தியமூர்த்தி பவன் கோஷ்டி பூசலில் சிக்கி வேஷ்டி இழப்பது நிச்சயம்.
இப்போது விசயத்திற்கு வருவோம்....
ஒரு மாநிலதலைமை ஒரு வேட்பாளரை அறிவித்து விட்டால்.....அல்லது ஒருவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கொடும்பாவி கொளுத்துவது, எதிர்ப்பு தெரிவிப்பது என்று இருக்கிறார்கள்.  மாநில தலைமை சொல்லும் எதையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அன்னை சோனியா சொன்னால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று அடம்பிடித்தால் என்ன செய்வது?....சாப்பிடுவது,தூங்குவது, ஒன்னுக்கு,ரெண்டுக்கு போவது தவிர மற்ற எதையுமே சோனியா சொல்லாமல் செய்யக்கூடாது என்பது காங்கிரசின் எழுதப்படாத சட்டம், சுயமாக சிந்திக்கும் திறமையை இழந்தவர்கள் காங்கிரசார். சோனியாவின் ஒப்புதல் இல்லாமலா இதையெல்லாம்  தங்கபாலு செய்திருப்பார்? எல்லாவற்றையையுமே சோனியாதான் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் மாநில தலைமை எதுக்கு?மாநில தலைவர் எதற்கு?


கோஷ்டி தலைவர்களிலிருந்து சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேன் வரை யாருமே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மதிப்பதில்லை. அது தங்கபாலு என்றில்லை....வேறு யாராக இருந்தாலும்.....இப்படிப்பட்ட மண்குதிரைகளை நம்பி 1967-இல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிப்பது என்பது இன்னும் பல நூற்றாண்டு கடந்தாலும் கனவே....பேசாமல் காந்தி சொன்னது போல காங்கிரசை கலைக்கும் வேலையை இந்திய அளவில் செய்யாவிட்டால் கூட தமிழக அளவிலாவது செய்து விடவும். ஆம்...தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டியை கலைத்துவிட்டு உங்கள் நேரடி பார்வையில் வைத்து கொள்ளுங்கள் சொக்கத்தங்கமே...சத்திய மூர்த்தி பவனை ஏதாவது கல்யாண மண்டபமாகவோ, சினிமா தியேட்டராகவோ மாற்றினால் வாடகையாவது கிடைக்கும்.
வரும்தேர்தல்களில் தி.மு.க., அல்லது அண்ணா.தி.மு.க-விற்கு ஆதரவளிப்பதன் மூலம் காமராஜர் ஆட்சியை கழகங்கள் மூலம் கண்டு களியுங்கள்...இதைத்தவிர வேறு நிரந்தர வழியில்லை.
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

வியாழன், 14 ஏப்ரல், 2011

ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு....எதிர்கட்சிக்கு ஆப்பு

அடடே...வாப்பா...தேர்தல் முடிஞ்சிருச்சு....இனிமே எங்கே வரப்போறேன்னு நினைச்சேன்?
தேர்தல் முடிஞ்சா என்னப்பா? இன்னும் வாக்கு எண்ணிக்கை, ஆட்சியமைப்புன்னு எவ்வளவோ இருக்கே அதுவரை இது தொடரும்...

சரி யாரு ஆட்சியமைப்பாங்கன்னு நினைக்கிறே?....
எனக்கென்னவோ ஆளுங்கட்சிதான் மறுபடியும் வரும்ன்னு தோணுது.....

எப்படி சொல்றே?
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த  தடவை 78 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருக்கு.

அதனால?....
 ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு....எதிர்கட்சிக்கு ஆப்புன்னு நினைக்கிறேன்....

அதெப்படி சொல்லமுடியும்...தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு கொடுத்ததால நிறைய பேரு பயமில்லாம வாக்களிக்க வந்திருக்கலாம்ல?...
 இருக்கலாம்....அதேநேரம் இந்த தேர்தல்ல ஆளுங்கட்சி நிறையா பணம் கொடுத்திருக்கு ....ஏறக்குறைய ஒருதொகுதில இருக்க மொத்த வாக்களர்களில் பாதி பேருக்கு பணம் கொடுத்துருக்காங்க....பணம் வாங்குன எல்லோரும் ஒட்டு போட வந்திருக்கலாம் இல்லியா....அப்படி பணம் வாங்குன எல்லோரும் பயந்து போயி ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தாலே ஆளுங்கட்சி ஜெயிச்சிரும் இல்லியா?அதோடு அரிசி,பருப்பு,உளுந்து, இலவச டி.வி., ஆம்புலன்ஸ் என்று பயனடைந்தவங்க எல்லோரும் வாக்களித்தாலே போதுமே ஆளுங்கட்சி  ஜெயிக்க...

அப்படின்னாஇலவசங்களும்,பணமும்தான் முடிவு பண்ணுது அடுத்த ஆட்சிய.. ஜனநாயகத்துக்கு வேலை இல்லைன்னு சொல்லு....
மக்கள் பணம் வாங்குறத நிறுத்தறவரை ஜனநாயகத்தை பணநாயகம் வீழ்த்திட்டே இருக்கும்.இதுதான் நிதர்சனம்.

இந்த தேர்தல்ல நிறைய இடங்கள்ள 49 ஒ பதிவாயிருக்குன்னு சொல்றாங்களேப்பா....
ஆமாம்...நீலகிரி மாவட்டத்துல கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட மசினகுடியிலதான் இந்த தடவை 49 ஒ அதிகமா பதிவாகிருக்காம்...

அவங்களுக்கு நிறைய மிரட்டல் வந்திருக்குமே....
வரத்தான் செய்யும்....என் நண்பன் ஒருவன் எங்க ஊர்ல 49 ஒ போடணும்ன்னு சொல்லும்போது அங்கே பூத்ல இருந்த ஏஜெண்டுகள் எல்லோரும் வேணாம்பா...49 ஒ போடாதேப்பான்னு சொன்னாங்களாம்...ஆனா இவன் போட்டுட்டுத்தான் வந்தான்...

நிறைய பேருக்கு 49 ஒ போட  ஆசைதான் என்றாலும் நமக்கு ஏன் பிரச்சினைன்னு போடாம விட்டுருக்கலாம்தானே...
நிஜம்தான்....அதுக்கு காரணம் 49 ஒ-வை வெளிப்படையா வச்சதுதான்...இனி வரும் தேர்தல்ல வோட்டு போடற மிசின்லையே வேட்பாளர்கள், சின்னங்களுக்கு கீழே 49 -வுக்கும் ஒரு பட்டன் வச்சிட்டா யாரும் பார்க்காத அளவுக்கு 49  போடலாம். இன்னும் நிறைய பேரு தைரியமா வாக்களிப்பாங்க

என்னத்த....இப்பெல்லாம் யாருக்கு ஓட்டு போடறாங்கன்னே  வீடியோ எடுத்துடறாங்கலாம்ல....
நீ ரஜினி ஓட்டுப்போட்டத பத்தி சொல்றேன்னு நினைக்கிறேன்....பொதுவா ஒரு வி ஐ.பி வோட்டு போடவந்தா வீடியோ எடுக்கறது பத்திரிகை காரங்க வழக்கம்....ஆனா,யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு தெரியாத அளவுக்கு ஒரு குறிப்பிட்ட தூரத்துலேயே அவங்கள நிறுத்திடுவாங்க...ஆனா இந்தமுறை ரஜினி ஓட்டுப்போடும்போது பக்கத்துல போயி வீடியோ எடுத்திட்டாங்களாம்.அதுல ரஜினி யாருக்கு வோட்டு போட்டாருன்னும் பதிவாகிடுச்சாம்...

இது தப்பாச்சே இதை எப்படி பூத்ல இருந்த ஆபிசருங்க அலோ பண்ணாங்க?....
அதான் தெரியல.....வேறு ஏதும் பிரச்சினை வருமான்னு இனிமே தான் பார்க்கணும்?....

நடிகை திரிஷாவுக்கு கூட ஏதோ பிரச்சினையாமே?....
அது ஒண்ணுமில்லைப்பா...ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வாக்குசவடியில நடிகை திரிஷா,அவங்க அம்மா, பாட்டின்னு மூணுபேரும் வோட்டு போட போயிருக்காங்க....ஆனால் வரிசையில நிக்காம நேரா பூத்துக்குள்ள போயிட்டாங்களாம்..

அதெப்படி எல்லோரும் வரிசையில நிக்கும்போது இவங்களுக்கு மட்டும் என்னவாம்...நடிகையின்னா  நேரா போயிட இது என்ன ஷூட்டிங்க ஸ்பாட்டா?
அதைத்தான்பா ஒரு வாக்காளர் கேட்டிருக்காரு...ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் வந்திருச்சாம்.அவங்களுக்குள்ள ஆங்கில புலமையை திட்டுறதுல காட்டிருக்காங்க...அப்புறம் ஆபிசருங்க ஓடிவந்து சமாதான படுத்தி இருக்காங்க...திரிஷா பாட்டிக்கு வயசாகிட்டதால அவங்க வரிசையில ரொம்பநேரம் நிக்கமுடியாதுன்னு அவங்க மட்டும் நேரா போயி ஒட்டுப்போட்டுட்டு கிளம்பிட்டாங்களாம்...திரிஷாவும், அவங்க அம்மாவும் இருபது நிமிடம் வரிசையில நின்னுதான் ஓட்டு போட்டிருக்காங்க...

வோட்டுபோடறதுல பொதுமக்களுக்கு  இருக்கற அக்கறை கூட நம்ம பிரதமருக்கு இல்லையாமே...
வருத்தமாத்தான் இருக்கு என்ன பண்றது? அசாம் மாநிலத்துல திஸ்பூர் என்கிற சட்டமன்ற தொகுதியில தான் நம்ம பிரதமருக்கும் அவங்க மனைவிக்கும் வோட்டு இருக்காம்.கடந்த 11-ஆம் தேதி அங்கே நடந்த தேர்தல்ல இவங்க ரெண்டு பேருமே வாக்களிக்களியாம்.
ஒரு ஓட்டோட மதிப்பு அவருக்கு எங்கே தெரியப்போகுது...அவருதான் நோகாம நொங்கு திங்கறவராச்சே...

அதென்னப்பா நோகாம நொங்கு  திங்கறது?
வேறென்ன அவரு எங்கே தேர்தல்ல போட்டியிட்டாரு...ஒவ்வொரு தடவையும் ராஜ்யசபா எம்.பி.யாத்தானே இருக்காரு...மக்கள்ட்ட வோட்டு வாங்கியா ஜெயிக்கறாரு....அதான் அவருக்கு ஒரு வோட்டோட மதிப்பு தெரியல...

சரிவிடு....நம்ம நாட்டோட நிலைமை அப்படி....ஜெயலலிதா என்னவோ சொல்லிருக்காங்க போல...
ம்....தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால், தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்று சொல்லிருக்காங்க....
பார்க்கலாம்....ஒருவேளை தோற்றாலும் இதைதான் சொல்றங்களா? அல்லது தேர்தல் கமிசன் மேல குற்றசாட்டு வைக்கிறாங்களான்னு....

அப்புறம் காங்கிரசிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜனை தங்கபாலு நீக்கிட்டாராமே?
அதைவிடுப்பா...அவங்க கதை எப்போதுமே காமெடிதான்.தேர்தல் முடிஞ்சாலும் காமெடி தொடருது....சரிப்பா நான் கிளம்பறேன்..இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

புதன், 13 ஏப்ரல், 2011

புலன்விசாரணை பாகம்-7

முந்தைய பாகங்கள் 

அரசர்குளம்.

 நடிகை ஸ்ரீமதியின் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமமாக இருக்கவில்லை இன்ஸ்பெக்டர் தில்லையம்பலத்திற்கு....

வீட்டில் ஸ்ரீமதியின் அண்ணன்,அண்ணி மட்டுமே   வீட்டில் இருந்தனர்.

"வணக்கம் சார்.நான் இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்...உங்க தங்கை கொலை கேஸ் விஷயமா விசாரிக்கற பொறுப்பு எனக்குத்தான். "

"அப்படியா....சந்தோசம்...என் பேரு  முத்துக்குமார். இப்ப எந்த அளவுல சார் விசாரணை இருக்கு.... "

"ஒரு முன்னேற்றமும் இல்லை....அதுக்குத்தான்  உங்க உதவிய கேட்டு வந்திருக்கோம்."

"என் உதவியா? "

"ஆமாம்....உங்க சொந்த பந்தத்துல யாராவது உங்க தங்கை ஸ்ரீமதியோட பிரச்சினை பண்ணிருக்காங்களா? ஏதும் பகை இருந்ததா? "

"இன்ஸ்பெக்டர் அப்படி யாருக்கும் காயத்ரியோட பிரச்சினை இருந்ததா எனக்கு தெரியாது."..

"காயத்திரியா? "

"ஆமா....நீங்க சொல்ற ஸ்ரீமதியோட உண்மையான பெயருதான் காயத்ரி....எங்களுக்கு அவள காயத்ரியாதான் தெரியும். அவ என்னிக்கு சினிமாவுல நடிக்க   போனாளோ அன்னிக்கே எங்க எல்லோரோட உறவும் முறிஞ்சு போச்சு....ஆனாலும் அவளோட ரொம்ப கோபமா இருந்தது ஒரேஒரு ஆளுதான். "

"அப்படியா யாரு?..... "

"அவரு எங்கப்பா.....அவ சினிமாவுல நடிக்க போனது பிடிக்காம  கடுமையான கோபத்துல இருந்தாரு....அந்த அவமானம் தாங்காம தூக்கு போட்டுக்கு இறந்துட்டாரு.... "

"கொஞ்சம் புரியும் படியா சொல்றீங்களா முத்துக்குமார்? "
"சொல்றேன்....எங்க குடும்பத்துல எங்கப்பா,எங்கம்மா,நான், என் தங்கை காயத்ரி மொத்தம் நாலு பேருதான். எங்கப்பா ரொம்ப கட்டுப்பாடான ஆளு....சினிமா என்றாலே பிடிக்காது. எங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாளு வரை சினிமா, நாடகம் அது இதுன்னு பார்த்தது கிடையாது.ஆனா காயத்ரி அப்படியில்லை. படிக்க போறேன்னு சொல்லிட்டு அப்பப்ப சினிமா பார்க்க போவா.இது எங்கப்பாவுக்கு தெரியாது. இப்படித்தான் ஒரு  நாளு ரெட்டின்னு ஒரு டைரக்டரு எங்க ஊருக்கு ஷூட்டிங் எடுக்க வந்தாரு....ஷூட்டிங்க வேடிக்கை பார்க்க போன என் தங்கச்சியை அவருக்கு பிடிச்சுப்போயி நடிக்கறியான்னு கேட்டிருக்காரு....அவளும் சரின்னு சொல்லிட்டு எங்கப்பாட்ட வந்து கேட்டா....எங்கப்பா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு...இருந்தாலும் காயத்ரி பிடிவாதமா இருந்தா....அடுத்த நாள் டைரக்டர்கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சுக்கு ஒரு வாரத்துல யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு ஓடிட்டா.....அதுல எங்கப்பா ரொம்ப ஒடஞ்சு போயிட்டாரு....அவ நடிக்க ஆரம்பிச்ச  புதுசுல ஒருநாள் வீட்டுக்கு வந்தா....அவள பார்க்க பிடிக்காத எங்கப்பா...இனிமே எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லை....இனிமே நான் செத்தாலும் என் முகத்துல விழிக்க கூடாதுன்னு சொல்லி வீட்ட விட்டு துரத்திட்டார் ..... "

அப்போது தில்லையம்பலம் போன் அடித்தது.....
"முத்துக்குமார் ஒரு நிமிஷம்".....என்றபடி போனை எடுத்த தில்லையம்பலம்.

"ஹலோ தில்லையம்பலம் ஸ்பீக்கிங்....
ஆங்....சொல்லுங்க சார்.... "

"................................."

"அப்படியா...இன்னிக்கா....வரமுடியாது சார்....நாளைக்கு வாறேன்"
".............................."
"ஆமா நடிகை ஸ்ரீமதி  கேஸ் விசயமா அவங்க சொந்த ஊர்ல  இருக்கேன்...சரி சரி அட்ரஸ் சொல்லுங்க ..நான் சென்னை வந்ததும் போயி பார்க்கிறேன் "

போனை பொத்தியபடி.....

"முத்துக்குமார் சாரி.... நான் சொல்ற அட்ரச கொஞ்சம் குறிச்சுக்க முடியுமா....எங்கிட்ட பேனா இல்ல... "

"பரவாயில்லை சார் சொல்லுங்க.... "

இன்ஸ்பெக்டர் சொல்ல சொல்ல முத்துக்குமார் ஒரு பேப்பரில் குறித்து கொண்டிருந்தான்.

"ஓகே சார்.ரொம்ப நன்றி" ....போனை வைத்தார்.

"சாரி முத்துக்குமார் என்னிடம் பேனா இல்லாததால குறிக்க சொல்ல வேண்டியதாபோச்சு... "

"பரவாயில்லை சார்....ஒரு உதவிதானே"
என்றபடி அட்ரஸ் எழுதிய பேப்பரை கொடுத்தான் முத்துக்குமார்...
அதை வாங்கி பார்த்துவிட்டு மடித்து தன பாக்கெட்டில் வைத்தார் தில்லையம்பலம்.

"ரொம்ப தேங்க்ஸ்....சரி விசயத்துக்கு வருவோம்....மேலே சொல்லுங்க... "

வீட்டை விட்டு துரத்திட்டார் ....அவளோட எனக்கும்எந்த  தொடர்பும் இருக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாரு....அதுக்கப்புறம் அவளும் இங்கும் வரல....ஒரு மூணு மாசம்  கழிச்சு அவ நடிச்ச படம் வெளியாச்சு....அதுல ரொம்ப கவர்ச்சியா காயத்திரி நடிச்சிருந்தத பார்த்துட்டு எல்லோரும் எங்கப்பாவ கிண்டலும் கேலியுமா பார்த்தாங்க...அதை தாங்க முடியாத எங்கப்பா தூக்குல தொங்கிட்டார்."
கண்ணீர் விட்டான் முத்துக்குமார்.

"ஓ...ஐ யம் சாரி....அப்புறம்... "

"இருந்தாலும் எனக்கு மனசு கேக்காம எங்கப்பா மரணத்தை அவளுக்கு சொன்னேன்.ஆனா அவ அதுபத்தி லஜ்ஜையே இல்லாம கேட்டுக்கிட்டா....பணமும் புகழும் அவள மாத்திடுச்சு....எங்கப்பா இறந்த அதிர்ச்சியில எங்கம்மாவுக்கு புத்தி பேதலிச்சு போச்சு....எங்கம்மாவ கவனிச்சிக்க நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..கொஞ்ச நாள்ல அவங்களும் போயி சேர்ந்திட்டாங்க....எங்கம்மா இறந்த விஷயத்தை நான் அவகிட்ட சொல்லவே இல்லை. இப்ப அவ பண்ண பாவம் அவள கொன்னுடுச்சு.... "

"சாரி முத்துக்குமார்...இவ்வளவு விஷயம் நடந்திருக்கா....உங்க தங்கை இறந்ததுக்கு நீங்க வரலியா?" "

"நான் எதுக்கு வரணும்?,பணம், காசுதான் முக்கியம் சொந்தம் பந்தமெல்லாம் தேவையே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போனவ மரணம் என்னை பாதிக்கவே இல்லை...இன்னும் சொல்லப்போனா பெத்தவங்களுக்கு அவ பண்ணுன துரோகத்துக்கு இந்த தண்டனை தேவைதான். "

"ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல..... நான் விசாரிக்க வந்தது வேறு ஆனா உங்க சொந்தக்கதை சோககதை பேசி மனச கனக்க செஞ்சுட்டீங்க .....உங்க தங்கைக்கு உங்க சொந்தக்காரங்க லெவல்ல.... "

"ஏதும் இருக்கதுசார்...ஏன்னா....எனக்கு சொந்தம் பந்தம்ன்னு சொல்லிக்கற மாதிரி யாருமில்லை..அப்படியே இருந்தாலும் கொலை பண்ணுற அளவுக்கு பகையோ முன் விரோதமோ இல்லை.... "

"ரொம்ப நன்றி நான் கிளம்பறேன்....உங்க போன் நம்பர் கொடுங்க...ஏதாவது விசாரனைன்னா தேவைப்படும்... "

விசாரணை தொடரும்....
படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

திங்கள், 11 ஏப்ரல், 2011

மைக் பிடித்த எம்.எல்.ஏ- என்ன கொடுமை சார் இது?


ஒரு நன்றி.....

ஸ்...அப்பாடா.....ஒருவழியாக பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. மக்களை பார்த்து நீங்கள்தான் எஜமானர்கள் நல்லதீர்ப்பு தாருங்கள் என்று பிரச்சார வேன்களிலும், பொது மேடைகளிலும், காலில் விழுந்தும், ஹெலிகாப்டரில் பறந்தும் வாக்கு வேட்டையாடியாடிய தலைவர்கள் இதோ ஓய்வு வேண்டி தத்தம் வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தல் எவ்வளவோ தேவலை என்றுதான் சொல்லவேண்டும். சுவர் விளம்பரம், பிளக்ஸ் போர்டு, தோரணங்கள் என்று எல்லாமே மிக மிககம்மியாக இருந்தது.  அடிக்கும் வெயிலில் ஏற்கனவே காய்ந்து போயிருந்த நம்மை மூலைக்கு மூலை ஒலிபெருக்கியை கட்டி மேலும் காய வைத்திருப்பார்கள். அதற்காக தேர்தல் கமிசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
=================================

ஒரு வருத்தம்

நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சிவராஜ்(காங்கிரஸ்) அவர்களை ஆதரித்து நடிகர் வடிவேலுவின் பிரச்சாரத்தை ஏகப்பட்ட பில்டப்புடன் சிறிது நேரம் சன் நியூஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. கடந்த பதினைந்து வருடங்களாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்  சிவராஜ் வடிவேலுவிற்காக மைக் பிடித்துக்கொண்டு நின்றது பரிதாபமாக இருந்தது. ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு காமடி நடிகனுக்கு மைக் பிடித்த கேவலத்தை எங்கே போய் சொல்றது? வருத்தமாக இருக்கிறது.

==================================

ஒரு ஜோக்

ராத்திரி கரண்ட் கட்டானதும் எல்லோரும் சந்தோசமா வெளியே வந்து எட்டி பார்க்கறாங்களே ஏன்?

எந்த வேட்பாளராவது  பணம் கொடுக்க வாராங்களான்னு தான் பார்க்கறாங்க....

========================================

ஒரு வேண்டுகோள்....

தேர்தலன்று ஒரேயொரு நாள்  நீங்கள் கையில் வைக்கும் அந்த கருப்பு மை....அடுத்த 5 வருடங்களில் வளர்ந்து நம் முகத்திற்கு கரியாக மாறிவிடாத அளவிற்கு பார்த்து வாக்களியுங்கள் மக்களே.... 


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பொன்னர் சங்கரும் கலைஞரின் புத்திசாலித்தனமும்...

 எனக்கு விமர்சனம் எழுதி பழக்கமில்லை. அதற்கு காரணம் அதிகமாக சினிமா பார்க்கும் பழக்கம் எனக்கில்லை. அப்படியே பார்த்தாலும் முதல் வாரம் பார்ப்பதில்லை. ஒரு படத்திற்காவது விமர்சனம் எழுத வேண்டும், அப்படி எழுதும்போது.....  நல்ல கதை, அருமையான திரைக்கதை, மனதை பிழியும் வசனங்கள், நேர்த்தியான இயக்கம், மனதில் நிற்கும் பாடல்கள் இப்படியெல்லாம் எழுதலாம்ன்னு தான் ஆசை........ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
காரணம் நான் பார்த்தது பொன்னர் சங்கர்.

படத்தோட கதையை வெறும் நூற்றி அறுபது கேரக்டரில் எழுதும் SMS-இல் எழுதினால்கூட இன்னும் ஒரு இருபது எழுத்து மிச்சமிருக்கும். விஜயகுமாரின்   மகளான  குஷ்புவிற்கும், கேப்டன் ராஜின் மகன் பிரகாஷ்ராஜிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் வேளையில்,  தன் முறைப்பையன் ஜெயராமை சந்திக்கும் குஷ்பு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடைந்த குஷ்புவின் உடன் பிறப்பு பொன்வண்ணன் அவரை   வீட்டைவிட்டு துரத்துகிறார்.அப்போது குஷ்பு "தனக்கு பிறக்கும்  ரெட்டை குழந்தைகளான ஆண் பையன்களுக்கு  உனக்கு பிறக்கும் இரண்டு பெண்களை திருமணம் செய்து வைப்பேன்"(என்ன ஒரு தீர்க்க தரிசனம்....தனக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தைதான் பிறக்கும்...அவரது அண்ணன் பொன்வண்ணனுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தைகள் தான் என்று கல்யாணம் ஆன மறுநிமிடமே கண்டுபிடித்து விடுகிறாரே....)என்று சபதமேற்கிறார். பிரசாரத்திற்கு கிளம்பியிருக்கும் காமடி பீசுகளை போல நெப்போலியன், ராஜ்கிரண், நாசர், சினேகா, சீதா பொன்னம்பலம் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து அவரது சபதம்  நிறைவேற பாடுபடுகிறார்கள். அம்புட்டுதாங்க...

கலைஞர் தேர்தல் பிரசார அவசரத்தில் வசனம் எழுதியிருப்பாரோ அல்லது வயசான காலத்தில் எதுக்கு கலைஞரை கஷ்ட படுத்துவானேன்னு இயக்குனர் தியாகராஜன் நினைத்தாரோ என்னவோ......ரொம்பவும் கம்மியான வசனம் தான். (கலைஞரின் கதாநாயகி (தேர்தல் அறிக்கை)யில் கூட அதிக வசனங்கள்). அதிலும் இரு வேடங்களில் நடித்திருக்கும் பிரசாந்த்கள் அதிகமாக வசனத்தை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல...ஆளுக்கு ஒரு நாலு வார்த்தை பேசிவிட்டு மணிரத்னம் பட ஹீரோக்களுக்கு செமத்தியான போட்டியை கொடுக்கிறார்கள்.

இளையராஜா இருந்தும் பாடல்கள் இனிக்கவில்லை.
முன்பெல்லாம் கலைஞர் படம் பார்த்தால்...அந்த பாத்திரத்தோடு ஒன்றி  உணர்ச்சி பிழம்பாக இருப்பார்களாம்.
இப்போது சீரியசான காட்சிகளை கூட காமடியாக எடுத்துக்கொண்டு தியேட்டரில் ஆடியன்ஸ் சிரிக்கிறார்கள்.
இது கலைஞரின் தோல்வியா? இயக்குனரின் தோல்வியா? அல்லது காலம் மாறிவிட்டதா என்று  தெரியவில்லை.

படத்திற்கு பிளஸ் என்று பார்த்தால் கலை இயக்குனரின் கைவண்ணம் தான். செட் டிசைனை அருமையாக போட்டிருக்கிறார்.
இன்னொரு பிளஸ்....சரித்திர படங்களென்றால் மூணு மணிநேரம் ஓடுமோ என்று நினைத்து நெளிந்தவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக இரண்டுமணி நேரம் பத்து நிமிடத்தோடு படம் முடிந்தது.

கொங்கு மண்டலத்தில் கட்சி ரொம்ப வீக்காக இருக்கிறது என்பதை அறிந்த கலைஞர் அந்த பகுதி ஹீரோக்களான பொன்னர்  சங்கர் கதையை தூசி தட்டி, தியாகராஜன் பணத்தில்  புத்திசாலித்தனமாக பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆங்காங்கே 'பதவிக்காக யாரிடமும் அடிமையாக இருக்க மாட்டோம், வளைந்து கொடுக்க மாட்டோம்., மாநில சுய ஆட்சி' என்று காங்கிரசிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொத்தத்தில்  1950,60-ஆம் ஆண்டுகளில் அதாவது கடந்த  நூற்றாண்டில்   திரைக்கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாதித்த  பெயரை...இப்போது இந்த நூற்றாண்டில்  அவரே கெடுத்து கொள்கிறார் என்று அழுத்தமாக சொல்லும் கலைஞர் படங்களில் இதுவும் ஒன்று.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்= அதற்க்கு இந்தவார ஆனந்த விகடனை பார்த்துக்கங்க...

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க்: அவங்க என்ன போடுவாங்கன்னு எனக்கு என்ன தெரியும்?


புதன், 6 ஏப்ரல், 2011

என்னை மன்னித்து கொள்ளுங்கள் பிளீஸ்......


நான் வெளியூரில் இருப்பதால் இன்று வரவேண்டிய புலன் விசாரணை தொடர்கதை அடுத்த வாரம் வரும்.
அதற்கு பதிலாக  ஒரு ட்வீட் மட்டுமே ....என்னை மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

விஜயகாந்த் மட்டும்தான் குடிகாரராம்......ஊரெல்லாம் டாஸ்மாக் திறந்து வைத்திருக்கும் ஆளுங்கட்சி சொல்கிறது.

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

திங்கள், 4 ஏப்ரல், 2011

அடுத்து யார் ஆட்சி?- பலிக்குமா பன்னிக்குட்டியாரின் ஆரூடம்?



பன்னிக்குட்டி ராமசாமி, இவரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது....இவரை அறியாதவகள் பதிவராகவே இருக்க முடியாது....
இன்று அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டது இவரின் பதிவுகளும், அந்த பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு இவர் போடும் பதில் பின்னூட்டங்களும்.
அவரிடம் அவ்வப்போது சாட்டில் பேசிக்கொள்வது என் வழக்கம். நேற்று காலை அவரிடம் சாட்டில் உரையாடும் போது.....

"தல...உங்க கருத்து படி யாரு அடுத்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்க மன்னிக்கவும் ஆட்சியமைக்க போறாங்கன்னு நினைக்கறீங்க...மீண்டும் கலைஞரா  அல்லது ஜெயாவா?"

என்ற கேள்வியை முன் வைத்தேன். அதற்கு பண்ணிக்குடியார் அளித்த பதில்  கீழே.......
"ஜெயாவுக்குத்தான் சான்ஸ் இருக்குன்னு நெனைக்கிறேன், ஆனா, சீட் வித்தியாசம் ரொம்பக் கம்மியா இருக்கும்.
  கூட்டணி ஆட்சி வைப்பாங்கன்னு நெனைக்கிறேன்
ஜெயா இந்த தடவ மைனாரிட்டி அரசுதான் அமைப்பாங்க, 2 வருசத்துல விஜயகாந்த் ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்ப்பார்
 அப்போ மறுபடி திமுக வரும்.இது என் கணிப்பு"
 என்றார் .பார்க்கலாம் பண்ணிக்குட்டியின் ஆரூடத்தை.....


டிஸ்கி: பண்ணிக்குட்டியாரின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டது.  படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

கருத்து கணிப்பா? அது டுபாக்கூருங்க அதை நம்பாதீங்க பாஸ்


இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி இதழ்கள் அனைத்திலும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகள் வெளிவந்து விட்டது.

அதில்  இந்த கட்சி ஆட்சிக்கு வரும் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று ஆளாளுக்கு அடித்து விடுகிறார்கள். தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் அண்ணா. தி.மு.க. ஆட்சிக்கு வருமென்றும், அண்ணா.தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் தி.மு.க ஆட்சிக்கு வருமென்றும் எழுதி தங்கள் விசுவாசத்தை காட்டி கொள்கிறார்கள்.

சரி...இந்த கருத்துக்கணிப்பெல்லாம் எடுபடுமான்னு பார்த்தால்....
முந்தைய தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பொய்த்து போய் இருக்கிறது.
எப்படி எடுக்கப்படுகிறது இந்த கருத்துகணிப்புகள்?

ஒரு சட்டமன்றத்தொகுதியில் குறைந்த பட்சமாக ஒரு லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவ்வளவு பேரிடமும் எடுக்கப்படுவதில்லை. அது சாத்தியமும் இல்லை.

ஒரு தொகுதியில் அதிக பட்சம் ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுக்கப்படுகிறது. கருத்துக்கனிப்புகளுக்காக ஊடகங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் போகும்போது...வாக்காளர்கள் தி.மு.க அபிமானிஎன்றோ....அண்ணா தி.மு.க அபிமானிஎன்றோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க வின் ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அவர் தி.மு.க-தான் ஆட்சிக்கும் வருமென்றும், அண்ணா.தி.மு.க-ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அடுத்து அண்ணா.தி.மு.க  ஆட்சிதான் என்றும் சொல்வார்கள்.

அப்படி எடுக்கப்பட்ட கணிப்பை இவர்களும் தத்தம் பத்திரிகைகளில் வெளியிட்டு விடுவார்கள்.தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு சாதகமாக கூட ஊடங்கங்கள் கணிப்பை மாற்றி விடுவார்கள். 

இது சரிதானா?

ஒரு லட்சம் வாக்காளர்களின் மனநிலையை வெறும் ஆயிரம் பேர் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும்? அல்லது பிரதிபலிக்க முடியும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வார்த்தை பிரயோகத்தை நாம் இங்கே பயன்படுத்த முடியாது. சோறு என்பது ஒரே தண்ணீரில் ஒரே வெப்பத்தில், ஒரே கொதிநிலையில் சீராக வேகக்கூடியது.

ஆனால் மக்கள்?
ஒரே தெருவில் இருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையை கூட நம்மால் கணிக்க முடியாது.  வேட்பாளர், ஜாதி, இலவசங்கள், பணம், கடைசி நேர பிரச்சார வியூகங்கள் மூலம் கூட மக்களின் மன நிலை மாறிவிடும்.    முன்பு ஊடகங்களில்  இந்த கட்சிக்குத்தான் என் வாக்கு என்று சொன்னவர்கள் கூட மாற்றி வாக்களித்து விடுவார்கள். எனவே, இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது.

கருத்து கணிப்பினால் சாதக பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி என்று பார்த்தால்......

இந்த தொகுதியில் இந்த கட்சி ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வந்தால்....கருத்துக்கணிப்புபடி ஜெயிப்பதாக கூறப்பட்ட  கட்சியினர்  நாம்தானே ஜெயிக்கப்போகிறோம் என்று களப்பணியில் மெத்தனமாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.... தோற்க்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் சோர்ந்து போகவும் வாய்ப்புண்டு.

அல்லது தோற்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட்டு களப்பணியாற்றி ஜெயிக்கவும் வாய்ப்புண்டு...

அடுத்து மக்கள்.....கருத்து கணிப்பை உண்மையென நம்பி மக்களும் மனசு மாறும் சாத்தியமுண்டு....நம்ம தொகுதியில் இந்த கட்சிதானே ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு சொல்லியிருக்கிறது. நாமும் அந்த கட்சிக்கே வாக்களிப்போம்.எதற்காக தோற்கும் கட்சிக்கு வாக்களித்து நம் ஓட்டை வீணாக்குவானேன் என்று மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருத்து கணிப்பை நம்பாதீர்கள் என்று கட்சிகள் அலறுகிறது.

மக்களின் இந்த மனநிலையை கெட்டியாக பிடித்து கொண்ட ஊடகங்கள் தங்களுக்கு பிடித்த கட்சியினர் ஜெயிக்க கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செவ்வனே செய்து வருகிறார்கள். ஒருவேளை இவர்களின் கணிப்பு மாறிவிட்டால்....இலவசங்கள், பணம் அதிகமாக கொடுத்த கட்சி வென்று விட்டது. நாங்கள் வேட்பாளர், இலவசங்களை அறிவிக்கும்  முன்பே கருத்து கணிப்பு எடுத்து விட்டதால் எங்கள் கணிப்பு மாறிவிட்டது என்ற ரீதியில் ஒரு அறிக்கை விட்டு மீசையில் மண் ஒட்டாமல் பார்த்து கொள்வார்கள்...ஒருவேளை இவர்களின் கணிப்பு தப்பி தவறி சரியாக இருந்துவிட்டால்...சொல்லவே வேணாம் அடுத்த தேர்தல் வரை இந்த  விளம்பரத்தை வைத்தே ஓட்டிவிடுவார்கள்.

ஆகவே, கருத்து கணிப்பை நம்பாமல் நமக்கு நல்லது செய்பவர்கள் யாரென்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.அந்த வேட்பாளர் சுயேட்சையாக இருந்தாலும் கூட.....
கார்டூனை பாருங்க கலகலன்னு சிரிங்க.....
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உங்க முகத்துல எதை தெளிக்கணும் மிஸ்டர் விஜயகாந்த்



தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து அகற்ற மயங்கியிருக்கும்  தமிழன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பவேண்டும்...-விஜயகாந்த் 

அப்படின்னா உங்க முகத்துல என்னத்த தெளிக்கணும் சோடாவா?

============================================


கொள்கை இல்லாதவர் ஜெயலலிதா . -ராமதாஸ்

நீங்க ஒரு கொள்கை புலின்னு நாட்டுக்கே தெரியுமே....

=============================================


கலைஞர் கடுமையான உழைப்பாளி: ஈ.வி.கே.எஸ்.

பல்டியடிப்பதில் ராமதாசை மிஞ்சிட்டீங்க போங்க...

============================================


எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

சோனியா,ராகுல் ஆகியோர் எதிர்பாராத விதமாகத்தானே....ஆனால், நீங்கள் எதிர் பார்த்ததுதானே...

===========================================


ஒரு குடும்பம் வளம் பெற 6 கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா?
- ஜெயலலிதா


அங்கே மட்டும் என்னவாம்?...நீங்க ஆட்சிக்கு வந்தா மன்னார்குடி குடும்பம்தானே வளம் பெரும்..

=========================================



இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்-மாடல் அழகி பூனம் பாண்டே 

இதுக்காகவே இலங்கை இந்தியாவிடம் விட்டு கொடுத்திடப்போகுது 

============================================

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக என் முந்தைய பதிவு 

கேப்டன் பிளீஸ்......என்னையும் அடிங்க.....