சனி, 30 அக்டோபர், 2010
ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை இதோ.....
ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. திருட்டு சர்ச்சை பற்றிய முடிவு உங்கள் கையில்....
வெள்ளி, 29 அக்டோபர், 2010
முத்தத்தின் விலை
வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் தன் மனைவிக்கு ஒரு மெயில் அனுப்பினான்.
அதற்க்கு மனைவி இப்படி பதில் அனுப்பினாள்.
குறிப்பு: இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.அதை தமிழ் படுத்தி இடையில் கொஞ்சம் நம் சரக்கை சேர்த்துள்ளேன்.
என் அன்பு மனைவிக்கு, இந்த மாதம் என்னால் பணம் அனுப்ப இயலாது. அதற்க்கு பதிலாக நூறு முத்தங்களை அனுப்புகிறேன், எனக்கு தெரியும் என் முத்தங்களை விட உனக்கு பணம் முக்கியமாக இருக்காது என்று.
அன்புடன் உன் கணவன்.
அதற்க்கு மனைவி இப்படி பதில் அனுப்பினாள்.
அன்பு கணவருக்கு,எனக்கு தெரியும், உங்கள் முத்தங்களை விட பணம் முக்கியமல்ல என்று. அந்த முத்தங்களி எப்படி சிலவு செய்தேன் என்று விபரம் சொல்கிறேன்.
இந்த மாசம் பால் வாங்கிய பாக்கிக்காக பால் காரனுக்கு ஐந்து முத்தமும்,
மின்சார கட்டணமாக அவனுக்கு பத்து முத்தமும்
நான் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளரிடம் வாடகைக்கு பதிலாக முப்பது முத்தங்களையும்
மளிகை சாமான்களுக்காக மளிகை கடைக்காரனுக்கு இருபது முத்தங்களையும் கொடுத்துவிட்டேன். என்ன ஆச்சர்யம் இவர்கள் அனைவரும் நான் கொடுத்த முத்தங்களை ஏற்றுக்கொண்டார்கள். மீதி இருக்கும் முப்பத்தைந்து முத்தங்களை வங்கியில் சேமிக்கலாம் என்று போனேன். வங்கியின் மேனேஜர் முத்தத்தோடு வேறு எதையோ எதிர்பார்க்கிறார் போல....இப்போது நான் என்ன செய்ய.....உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் குறிப்பு: இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.அதை தமிழ் படுத்தி இடையில் கொஞ்சம் நம் சரக்கை சேர்த்துள்ளேன்.
செவ்வாய், 26 அக்டோபர், 2010
நடிகர்கள் எல்லாம் உண்மையான ஹீரோக்கள் கிடையாது
சினிமாக்காரர்கள் உண்மையான ஹீரோக்களா என்று பார்த்தோமேயானால் நம்மை விட முட்டாள்கள் இந்துலகத்தில் யாருமில்லை. வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு பத்து பேருக்கு தையல்மிசின், நாலு பேருக்கு சைக்கிள் கொடுத்ததோடு தன் சமூக சேவையை முடித்துவிடுவார்கள். அதில்கூட சுயநலம் இருக்கும். இந்த பப்ளிசிட்டி ஸ்டண்ட் எல்லாம் எதிர்காலத்தில் அரசியலுக்கு உதவும், மக்கள் நம்மை ஹீரோவாக பார்க்கணும், அடுத்து வரும் நம் படம் ஓடனும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி என்றால் உண்மையிலேயே ஹீரோ என்பவர் யார்? சுயநலம் கருதாமல் பொதுநலம் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டிருக்கும் நம் மண்ணின் மைந்தன் திரு.கிருஷ்ணனை போன்றவர்கள். அவரை பற்றி எல்லோருமே எழுதிவிட்டார்கள். கிருஷ்ணன் செய்கின்ற தொண்டுக்கு மனிதம்,புனிதம்,என்று எந்த வார்த்தைகளாலும் அடைத்து விட முடியாது எல்லாத்துக்கும் மேல் என்று சொல்லலாம்.அதனால்தான் CNN கூட அவரை ஹீரோ என்று சொல்கிறது. நாமும் சொல்வதில் என்ன தப்பு? இப்போது நான் செய்யவேண்டியதெல்லாம் இந்த சுட்டியை தட்டி அவருக்கு வாக்களிக்க வேண்டியதுதான். அதற்காக நாம் எங்கும் போகத்தேவையில்லை.உட்கார்ந்த இடத்திலேயே இந்த சுட்டியை தட்டி வாக்களிக்கலாம். எத்தனையோ போலி ஹீரோக்களுக்கு கட் அவுட், பால்குடம் அது இதுன்னு நாம் செய்த பாவங்களுக்கு இதன் மூலம் பரிகாரம் தேடுவோம். எவ்வளவோ பண்ணிட்டோம்.இதை பண்ணமாட்டோமான்னு நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அப்புறம் என்ன யோசனை? நான் வாக்களித்து விட்டேன்.அப்ப நீங்க?
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
கவிதை எழுதுவது எப்படி?
(வாலி வைரமுத்து வகையறாக்கள் என்னை மன்னிப்பார்களாக....).
இந்த உலகத்தில் என் பார்வையில் கவிதை எழுதுவது ரொம்ப சுலபம். எப்படின்னா?........ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கங்க.....ஏதாவது ரெண்டு வரி இருபது வார்த்தைக்கு மிகாமல் எழுதுங்க....எழுதிட்டீங்களா?
இப்ப மறுபடியும் மூன்று வார்த்தைக்கு ஒரு வரி என்று ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதவும். ஆறு அல்லது ஏழு வரி வந்திருக்கும். அப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதும்போது
வார்த்தைகளை அதன் அர்த்தம் மாறாமல் லேசாக கலைத்து போடுவது ரொம்ப முக்கியம்.கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பத்து ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போது நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அட அதுதாங்க கவிதை. மூன்று வரிக்குள் ஏழெட்டு வார்த்தைகளை உங்களுக்கு அடக்க தெரிந்தால்.... சந்தேகமே வேண்டாம் அதற்க்கு பெயர் ஹைக்கூ. உதாரணத்திற்கு இந்த சுட்டியை கிளிக்கவும்
(அட எல்லோரும் ரெடியாகிட்டீங்க போல கவிதை எழுத....என்னது என்னை அடிக்க ரெடியாகிட்டீங்களா....அய்யய்யோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல....விடு ஜூட்..... )
நடிகர் ரஜினிகாந்திடம் இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பு பேட்டி
இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர்கள்-இயக்குநர்கள் தங்களுக்கு பிடித்த மானவர்களிடம் பேட்டி எடுக்கும் வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இயக்குநர் பாலசந்தர், நடிகர் ரஜினிகாந்திடம் பேட்டி எடுத்தார்.
பெரிய நடிகரான நீங்கள் எதை இழந்ததாக உணருகிறீர்கள்?
சாதாரண மனி தர்களைப் போன்று ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை பறிகொடுத்து இருக்கிறேன். நிம்மதியை இழந்து இருக்கிறேன். சூழ்நிலை கைதியாக உள்ளேன். இவைகளை தியாகம் செய்து தான் புகழ் அடைந்து இருக்கிறேன்.
உங்கள் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதுவீர்களா?
சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனது கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. இது எனக்கும் வரும் போதுஎழுதுவேன்.
உங்களை உயரத்தில் தூக்கி வைத்த சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஏதாவது செய்வேன்.
டைரக்டர் ஆவீர்களா?
படங்களை டைரக்டு செய்யும் ஐடியா இல்லை. அது எனக்குத் தெரியாது.
இதுவரை நடித்த படங்கள் எத்தனை?
154 படங்களில் நடித்துள்ளேன்.
வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உங்கள் படங்கள் எது என கருதுகிறீர்கள்?
ராகவேந்திரா, பாட்சா, எந்திரன்.
தேசிய விருது எப் போது வாங்குவீர்கள்?
அது டைரக்டர் கையில் இருக்கிறது.
நாடகங்கள் போட்டால் நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன்.
மேஜர் சந்திர காந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போகிறேன். நடிப்பீர்களா?
நீங்கள் செய்தால் நானும் செய்கிறேன்.
சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் சிகரெட்டை தூக்கி போட்டு புகை பிடிப்பீர்கள். தற்போது அதை குறைத்து விட்டீர்களா?
சிகரெட் பிடிப்பதை இப்போது நிறைய குறைத்து விட்டேன்.
நான் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்தது எவை?
2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒன்று “அவள் ஒரு தொடர்கதை, அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்று அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.
அரசியலில் பிடித்த தலைவர் யார்?
லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர்.
யாரையேனும் பார்த்து பொறாமைப் பட்டதுண்டா?
இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.
பிடித்த இயக்குனர் யார்?
மகேந்திரன்.
பிடித்த உணவு எது?
சிக்கன்.
நெருங்கிய நண்பர் யார்?
ராவ்பகதூர்.
என்னிடம் பிடிக்காத விஷயம் எது?
நீங்கள் கோபப்படு வதை குறைக்க வேண்டும்.
அரசியலுக்கு வருவீர்களா? மாட்டீர்களா?
அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

வெள்ளி, 22 அக்டோபர், 2010
மலையூர் மம்பட்டியான் -ஒரு பிளாஷ் பேக்
மலையூர் மம்பட்டியான் -ஒரு பிளாஷ் பேக் (இந்த தலைமுறையினருக்காக....)
சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன் மம்பட்டியான்.
இந்த மம்பட்டியானை கதாபாத்திரமாக வைத்து, "மலைïர் மம்பட்டியான்" என்ற பெயரில் சினிமாப்படம் வெளிவந்தது. தியாகராஜன் _ சரிதா நடித்த இந்தப்படம் ஓகோ என்று ஓடி வசூலை வாரிக் குவித்தது நினைவிருக்கலாம்.
மம்பட்டியான் சாதாரண ஆள் அல்ல. 27 கொள்ளை, 9 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். போலீஸ் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு காடுகளில் 5 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்தவன். ஆனால் காதல் மோக உருவில் எமன் அவனுடைய உயிரை பறித்துக்கொண்டான்.
சுருக்கமாக சொன்னால் மம்பட்டியானின் வாழ்க்கை, மர்ம கதைகளில் வரும் சம்பவங்கள் போல இருக்கும். மம்பட்டியானின் உண்மை பெயர் அய்யாத்துரை. சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் சரகம் கொல்காரனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தை பெயர் மொட்டையன்.
மம்பட்டியானுக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் பெயர் சின்னப்பிள்ளை என்கிற நல்லம்மாள். இவளுக்கு நல்லப்பன் என்ற மகனும், பாப்பா என்ற மகளும் இருந்தனர்.
2_வது மனைவி மாந்தியம்மாள். இவளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தார்கள். அவனுக்கு சகோதரனும் இருந்தான். அவனுடைய பெயர் ஊமையன்.
மம்பட்டியான் நெடுஞ்சாலைத்துறையில் கூலி வேலை செய்து வந்தவன். எப்போதும் தோளில் மண்வெட்டியை சுமந்தபடியே திரிவான். அவனது முகத்தில் கீழ் தாடை பகுதியும், மண்வெட்டி போல குவிந்திருக்கும். இவற்றையெல்லாம் வைத்து அவனுக்கு நெருக்கமானவர்கள் "மம்பட்டியான்" என்று அழைத்தார்கள்.
நாளடைவில் அய்யாத்துரை என்பது மாறி மம்பட்டியான் என்ற பெயரே நிலைத்தது. போலீஸ் ரிக்கார்டுகளிலும் மம்பட்டியான் என்றே பதிவானது. மம்பட்டியானை சுற்றி எப்போதுமே இளைஞர் பட்டாளம் இருந்து கொண்டே இருந்தது. இதுவே அவனை கோஷ்டி தலைவனாக உயர்த்தியது.
தொடக்கத்தில் மனைவி, குழந்தை, குடும்பம் என்றிருந்த மம்பட்டியான் வாழ்க்கை, திடீரென்று தடம் புரண்டது. அடிதடி _ மோதல், போலீஸ் வழக்கு என்று சிக்குண்டான். போகப்போக அவை கொலைகாரன், வழிப்பறி கொள்ளைக்காரன் என்ற நிலைக்கு கொண்டு போய்விட்டது.
மம்பட்டியான் வாழ்ந்த அதே ஊரில் மாரிமுத்துசாமி, முத்து சாமி என்ற மிராசுதாரர்கள் வாழ்ந்தார்கள். இருவரும் நெருங்கிய உறவினர்கள். இந்த இருவருக்கும் அடுத்தடுத்து நிலம் இருந்தன. அந்த பண்ணை நிலத்தில் வீடு கட்டி குடியிருந்தும் வந்தார்கள்.
அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேச்சேரி என்ற ஊர் இருக்கிறது. ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவில் "வண்டி வேஷம்" என்ற நிகழ்ச்சி விசேஷமாக இடம் பெறும். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், "ராமாயணம்", "மகாபாரதம்" போன்றவைகளில் வரும் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு செல்வார்கள்.
இதற்கு மாரிமுத்துசாமி, முத்துசாமி இருவருமே ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்வார்கள். திருவிழாவுக்கு சேர்ந்தே சென்று திரும்புவார்கள். கொஞ்ச நாளில் இருவருமே தனித்தனி ஏற்பாடு செய்தார்கள். ஆனாலும் ஒன்றாகவே மாட்டு வண்டி கட்டி திருவிழாவுக்கு செல்வார்கள்.
இந்த நிலையில் திருவிழா நடைபெறும்போது முத்துசாமி பெட்டிக்கடை போடுவார். அதில் நல்ல வியாபாரம் ஆகி பணம் குவிந்தது. இதனால் அவருடைய கை ஓங்கியது. இது இருவருக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.
தனித்தனி கோஷ்டியாக செயல்படத் தொடங்கினார்கள். அப்போது மம்பட்டியானும், அவனது அண்ணன் ஊமையன், தந்தை மொட்டையன் ஆகியோர் மாரிமுத்துசாமிக்கு ஆதரவாக இருந்தனர்.
1956_ம் ஆண்டு திருவிழாவுக்கு முத்துசாமியும் ஆதரவாளர்களும் புறப்பட்டு சென்றபோது மாரிமுத்துசாமியின் கோஷ்டி வழி மறித்து கற்களை வீசி தாக்கியது. இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டார்கள்.
திருவிழாவில் பெரிய மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேடம் போட்டு ஆடுவதற்கும் இரு தரப்பினருக்கும் தடை போடப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்றது. ஆனாலும் பகை புகைந்து கொண்டே இருந்தது.
முத்துசாமியின் மூத்த மகன் பழனி கவுண்டர் தென்னந் தோப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். மம்பட்டியான் உள்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் அனைவரும் விடுதலையானார்கள்.
30_5_1957 அன்று கோர்ட்டில் இருந்து திரும்பும்போது மம்பட்டியானின் தந்தை மொட்டையன் மற்றும் உறவினர் பொன்னு கவுண்டர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முத்துசாமி கோஷ்டியைச் சேர்ந்த 9 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தந்தை கொலையுண்டதால் மம்பட்டியான் ஆத்திரத்துடன் திரிந்தான்.
இந்த நிலையில் 2_8_1959 அன்று முத்துசாமியும், அவனது மகன்களும் மேச்சேரியில் கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு திரளாக கூட்டம் இருந்தது.
காலை சுமார் 11 மணி இருக்கும். மம்பட்டியானும், அவனது கோஷ்டியும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். கடையில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினார்கள். இதில் முத்துசாமி, அவரது மகன்கள் வேலாயுதம், சின்னக்குட்டி, வைத்தி ஆகிய 4 பேரும் அதே இடத்தில் துடிதுடித்து செத்தனர்.
இன்னொரு மகன் பரமசிவம் வெட்டுக்காயங்களுடன் ஓடி அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவரை மம்பட்டியான் கோஷ்டி விரட்டிச்சென்று தேடியது. அந்த வீடு முழுவதும் சோதனை போட்டது.
அந்த வீட்டுக்காரப்பெண் தந்திரமாக பரமசிவத்தை ஒரு பெரிய பாத்திரத்தை போட்டு மூடி வைத்துவிட்டாள். இதனால் பரம சிவம் கொலைகாரக் கும்பலிடம் இருந்து உயிர் தப்பினார். (இவர் பிற்காலத்தில் தாரமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.)
பிறகு மம்பட்டியான், அவனுடைய அண்ணன் ஊமையன் உள்பட 7 பேர் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்று முத்துசாமியின் உறவினர்களை வீடு வீடாக புகுந்து தாக்கினார்கள். சுப்பிரமணியம் என்பவரை தாக்கி கொன்றனர்.
அவர் இருந்த தறி கொட்டகையையும் தீ வைத்து கொளுத்தினர். பிணம் தீயில் எரிந்து கரிக்கட்டையானது. அயுண்டன், பச்சான் மேலும் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்தில் 9 பேரை கொன்று மம்பட்டியான் பழிக்குப்பழி தீர்த்தான். கொலை படலத்தை முடித்ததும் மம்பட்டியான் கோஷ்டி காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது.
இந்த படுகொலை சேலம் மாவட்டத்தையே உலுக்கியது. சம்பவ இடத்தை கலெக்டர் அம்புரோஸ், போலீஸ் அதிகாரி ஏ.சி.ஆதித்த நாடார் ஆகியோர் சென்று பார்வையிட்டார்கள். மம்பட்டியான் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடினார்கள்.
காட்டில் மறைந்து வாழ்ந்த அந்த சமயத்தில் மம்பட்டியான் கொள்ளைக்காரனாக மாறினான். மேச்சேரி, பெண்ணாகரம், கொல்லேகால் ஆகிய பகுதிகளில் ஊருக்கு வெளியே இருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தான். தனியாக வரும் ஆட்களை மிரட்டி வழிப்பறி கொள்ளை நடத்தினான்.
இப்படி 2 ஆண்டுகள் வரை மம்பட்டியானும், அவனது அண்ணன் ஊமையனும் ஒன்றாக காட்டில் திரிந்தனர். திடீரென்று அண்ணன் _ தம்பிக்குள் மோதல் ஏற்பட்டது. மம்பட்டியானை விட்டு ஊமையன் பிரிந்தான்.
இந்த தகவலை அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 6_3_1961 அன்று சப்_இன்ஸ் பெக்டர்கள் தவுலத் அலி, நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மேச்சேரி அருகில் காட்டுக்குள் நுழைந்து தேடினர். அங்கு பதுங்கி இருந்து ஊமையனைச் சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் ஊமையன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மேட்டூர் பகுதியில் மம்பட்டியான் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 8_7_1963 அன்று சப்_இன்ஸ்பெக்டர் மயில் சாமி தலைமையில் போலீஸ் படை மேட்டூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தண்டைக்காய் மலைக்கு சென்றனர்.
அங்கு மம்பட்டியான் கோஷ்டி சமையல் செய்து கொண்டிருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மம்பட்டியானின் கோஷ்டியைச் சேர்ந்த கண்ணு போயன், கோவிந்தன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சப்_இன்ஸ் பெக்டர் மயில்சாமி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.
மம்பட்டியானும், வேறு சிலரும் ஓடினார்கள். போலீசார் விரட்டிச்சென்று 2 பேரை பிடித்தார்கள். ஆனால் மம்பட்டியான் போலீசிடம் சிக்காமல் தப்பி விட்டான்.
மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், "தேடுதல் வேட்டை" முடுக்கிவிடப்பட்டது.
காடுகளில் சென்று தேடும் விசேஷ பயிற்சியைப்பெற்ற மலபார் சிறப்பு போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ஆயுதப்படை போலீசார் விரைந்தனர்.
மைசூர் போலீஸ் உதவியும் கேட்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் இந்த அதிரடிப்படை செயல் பட தொடங்கியது. மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்குள் மம்பட்டியான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அப்போது சிக்கல்ராம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவன் மம்பட் டியானின் நண்பன் ஆனான். அவன் கள்ளச்சாராயம் விற்பவன். சில சமயம் அவனைத்தேடி அவன் வீட்டிற்கே மம்பட்டியான் சென்றான்.
கருப்பண்ணனுக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை, கணவனை இழந்த விதவை. அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பில் மம்பட்டியானுக்கும், அவளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் கருப்பண்ணனின் 2_வது தங்கை நல்லம்மாள் ஒரு நாள் மம்பட்டியானின் கண்ணில் பட்டுவிட்டாள். அவள் நல்ல அழகி. அவளையும் அடைந்துவிட வேண்டும் என்று மம்பட்டியான் ஆசைப்பட்டான்.
போலீசாரின் வேட்டை தீவிரம் அடைந்ததை உணர்ந்த மம்பட்டி யான், தன்னுடைய இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டான். நல்லம்மாளையும் தன்னுடன் அழைத்துச்சென்று விடவேண்டும் என்று நினைத்தான். தன்னுடைய இந்த விருப்பத்தை கருப்பண்ணனிடமும், அவரது தந்தை பொன்னப்ப கவுண்டரிடமும் கூறினான். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.
"ஏற்கனவே விதவைத் தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறாயே! அவளையே கல்யாணம் செய்து அழைத்துக்கொண்டு போ! 2_வது தங்கையை தரமாட்டேன்" என்று கருப்பண்ணன் அடித்துச் சொல்லிவிட்டான். இதனால் மம்பட்டியானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
"நல்லம்மாளைதான் திருமணம் செய்வேன். அவளை என்னுடன் அனுப்பு. ரூ.1,000 தருகிறேன். நீ சம்மதிக்காவிட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன்" என்று கூறிவிட்டு மம்பட்டியான் காட்டுக்குள் சென்று விட்டான்.
தங்கைகளின் பிரச்சினையால் மனக்குழப்பம் அடைந்த கருப்பண்ணன், போலீஸ் உதவியை நாடினான். பெண் ணாகரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சப்_ இன்ஸ்பெக்டரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தான். அவர் மூத்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உதவி செய்வதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு கருப்பண்ணனை சந்தித்த ஒரு அதிகாரி, "மம்பட்டியானுடன் மோதி உன்னால் ஜெயிக்க முடியாது. விஷத்தைக் கொடுத்து அவனைக் கொல்ல முயற்சி செய்" என்று ஆலோசனை கூறினார்.
27_3_1964 அன்று கருப்பண்ணன் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மம்பட்டியான் அவன் முன் வந்து நின்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
"நீ என்னை போலீசில் காட்டிக் கொடுக்கப்போவதாக சொன்னாயாமே! எங்கே காட்டிக்கொடு பார்ப்போம்" என்று கூறிக்கொண்டே, மம்பட்டியான் கருப்பண்ணனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால், குறி தவறியது.
உடனே கருப்பண்ணன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மம்பட்டியானை நோக்கி 2 முறை சுட்டான். மம்பட்டியான் வயிற்றில் ஒரு குண்டும் இடுப்பில் ஒரு குண்டும் பாய்ந்தன.
மம்பட்டியான் கீழே விழுந்தான். கருப்பண்ணன் ஓடிப்போய் மம்பட்டியான் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை சுட்டான். மம்பட்டியான் அதே இடத்தில் செத்தான். இதுவே அதிகாரபூர்வ தகவலாகும்.
இது தவிர அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றொரு தகவல் உலவியது. நல்லம்மாளை கூப்பிடுவதற்காக மம்பட்டியான் சம்பவ தினத்தன்று கருப்பண்ணன் வீட்டிற்கு சென்றான். மம்பட்டியானுக்கு வீட்டில் விருந்து கொடுத்தான்.
அந்த சமயத்தில் தர்பூசணியில் விஷத்தை ஏற்றி கொடுத்தான். அதை சாப்பிட்ட மம்பட்டியான் சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தான். உடனே மம்பட்டியானை கருப்பண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். இவ்வாறு பரவலாக பேசப்பட்டது.
எது எப்படியோ, மம்பட்டியானை கருப்பண்ணன் தீர்த்து கட்டிவிட்டான்.
தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் அதிகாரி கிருஷ்ணராஜ், உதவி சூப்பிரண்டு வி.பொன்னையா, பெண்ணாகரம் சப்_ இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
மம்பட்டியானுக்கு வயது சுமார் 30 இருக்கும். 5 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான். முறுக்கு மீசை வைத்திருந்தான். ராணுவ வீரரை போல உடை அணிந்திருந்தான். இடுப்பில் பெரிய `பெல்டு' கட்டியிருந்தான். அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
அவன் கையில் 2 அடி நீள பெரிய கத்தி இருந்தது. கையில் கெடிகாரம் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். அதில் புலி நகம் கோர்க்கப்பட்டிருந்தது.
ஒரு கட்டுச்சோறு மூட்டையும் வைத்திருந்தான். அதில் மான் கறி குழம்பும், சோறும் கலந்த சாப்பாடு இருந்தது. மம்பட்டியானின் உடல் பரி சோதனைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.
பிரேத பரிசோதனைக்குப்பிறகு மம்பட்டியான் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலை வாங்க உறவினர்கள் யாராவது வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.
இதனால் உடலை போலீஸ் லாரியில் ஏற்றி தர்மபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் தகனம் செய்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தார்கள். மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி மம்பட்டியானை கொன்ற கருப்பண்ணனுக்கு பரிசு வழங்க போலீஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதனை தொடர்ந்து கருப்பண்ணனுக்கு ரொக்கப்பணம் 2 ஆயிரமும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அதோடு தற்காப்பிற்காக அவனுக்கு லைசென்சு (அனுமதி) பெற்ற துப்பாக்கியும் கொடுக்கப்பட்டது.
மம்பட்டியான் கோஷ்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர், கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த 5 பேர்களில், சுப்பிர மணி, சாமியண்ணன், சின்னண்ணன், நல்லப்ப கவுண்டர் என்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஒருவன் சிறுவனாக இருந்ததால், சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

(நன்றி: மாலை மலர்)
வியாழன், 21 அக்டோபர், 2010
பிரபல பதிவரிடம் ஒரு பேட்டி
கலைஞர் பாணியில் அதாங்க....(கேள்வியும் நானே பதிலும் நானே ) யோசித்ததில் வந்த விளைவு
நான்: உங்க பேரு?
ரஹீம் கஸாலி: முகம்மது கஸாலி, அழைப்பது கஸாலி
நான் :அப்படின்னா ரஹீம் கஸாலி என்பது?
ரஹீம் கஸாலி: என் தந்தையின் பெயர் ரஹீம். எல்லோரும் தந்தையின் பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக வைத்திருப்பார்கள். நான் தந்தையின் பெயரையே இன்ஷியலாக்கி கொண்டேன்.
நான்: வலைப்பதிவிற்கு RAGARIZ- என்று ஹிந்தியில் பெயர் வைத்திருக்கிறீர்களே?
ரஹீம் கஸாலி: அது ஹிந்தி இல்லேங்க....என் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்தையும் (RA) என் பெயரின் முதல் இரண்டு எழுத்தையும்(GA) என் பையனின் பெயரில் முதல் மூன்று எழுத்தையும் ( RIZ) சேர்த்து வைத்துக்கொண்டேன்.
நான் : நீங்கள் வலைப்பதிவிற்கு வந்தது ஏன்?
ரஹீம் கஸாலி: கடந்த வருடம் அவ்வப்போது கிறுக்கியவைகள் யூத்புல் விகடனில் வெளிவந்தது. அதையெல்லாம் தேடி படிப்பது சிரமமாக இருக்கிறது. ஒரே பதிவாக வெளியிட்டால் தேவலை என்று என் நண்பர்கள் சொன்னதால் இங்கே வந்துட்டேன். ஆனால் எனக்கு வலைப்பதிவு பற்றி ஒன்றுமே தெரியாது. காதை கொண்டாங்க ஒரு ரகசியம் சொல்லணும் நான் பத்தாவது பாதிதான் முடிச்சேன். அதுக்குமேலே படிக்கல...
அதனால இந்த கம்ப்யூட்டர் இன்டர்நெட்டுன்னு ஒண்ணுமே விளங்கல...அப்பத்தான் சென்னையில சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க என் நண்பன் சிராஜ்(பெயரையும் சொல்லியாகனும்ல....இல்லேன்னா நன்றி மறந்தவன் ஆகிடுவேன்)எனக்கு உதவினான். கொஞ்சம் சொல்லிகொடுத்தான். அதுக்கப்புறம் வலைப்பதிவு பற்றி நண்பர்களின் தளங்களை படித்து பிக்கப் ஆகியாச்சு.ஆர்வக்கோளாருல ஆரம்பிச்சதால தப்பும் தவறுமா போச்சு. அதையெல்லா மூடிட்டு இந்த வலைப்பதிவு ஆரம்பிச்சு மூணு மாசந்தான் ஆகுது.
நான்: நீங்க எந்த கட்சி?
ரஹீம் கஸாலி: மக்களுக்கு யார் நல்லது செய்றாங்களோ அவங்க கட்சி.
நான்: அப்படின்னா நீங்க எந்த கட்சியிலும் இல்லைன்னு சொல்லுங்க....
ரஹீம் கஸாலி: அப்படின்னா....நான் எப்படி எம்.பி-யா ஜெயிச்சிருக்க முடியும்?
நான்: என்னது நீங்க எம்.பி-யா ஜெயிச்சீங்களா? விளையாடாதீங்க
ரஹீம் கஸாலி: நிஜம்தான். எல்லோரும் பண்றாங்களேன்னு நானும் ஒரு வேட்புமனுதாக்கல் பண்ணினேன். என் அதிர்ஷ்டமோ மக்களின் துரதிர்ஷ்டமோ தெரியல...பதினாறு வோட்டு வித்தியாசத்திலே ஜெயிச்சுட்டேன்.
நான்: நம்பவே முடியலியே?எப்ப?
ரஹீம் கஸாலி; என்னாலையும் தான் நான் ஜெயிச்சத நம்பமுடியல. எப்பன்னா....2001-ல
நான்: என்னது 2001-லா அப்ப நாடாளுமன்ற தேர்தலே நடக்கலியே. அப்புறம் எப்படி எம்.பி-யானீங்க?
ரஹீம் கஸாலி: நல்ல கதையா இருக்கு. நீங்க நாடாளுமன்ற தேர்தல்ன்னு நினைச்சீங்கள? நான் சொன்னது ஊராட்சி மன்ற தேர்தல்.
நான்: ஊராட்சி மன்றத்தேர்தலில் எம்.பி-யா என்னங்க குழப்பறீங்க?
ரஹீம் கஸாலி: நிஜம்தான். எம்.பி.ன்னா மெம்பர் ஆப் பஞ்சாயத்து போர்டு. ஒரு படத்துல கவுண்டர் சொல்லுவாரே?
நான்: ஸ்ஸ்ஸ்...அப்பா....இப்பவே கண்ணா கட்டுதே? அப்புறம்?
ரஹீம் கஸாலி: ரெண்டு வருஷம் தாங்க இருந்தேன். அதோடு ராஜினாமா பண்ணிட்டு மலேசியாவுக்கு கிளம்பிட்டேன்.
நான்: ஏன்?
ரஹீம் கஸாலி: பெரிய வருமானம் இல்லைங்க...ஒரு கூட்டத்துல கலந்துக்கிட்டா ஒரு டீ, ரெண்டு வடை கொடுத்து இருபத்து அஞ்சுரூபா சம்பளம் கொடுப்பாங்க...அதிலும் அஞ்சு ரூபா ஊராட்சிமன்ற உதவியாளருக்கு கொடுத்துட்டு மீதி இருபது ரூபாயை எடுத்துட்டு வந்து சிலவு பண்ணுவேன். தினமும் கூட்டம் போட்டாலும் பரவாயில்லை. மாசம் ஏதாவது கிடைக்கும். அங்கே என்னன்னா மாசத்துக்கு ஒரு கூட்டம்தான். அப்புறம் என்ன பண்ணுறது?

இந்த விறுவிறுப்பான பெட்டி தொடரும் (நீங்கள் விரும்பினால்.....)
புதன், 20 அக்டோபர், 2010
செவ்வாய், 19 அக்டோபர், 2010
ஆட்டோ சங்கர்- ஒரு ப்ளாஷ் பேக்

ஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான். சங்கரின் வாக்குமூலம் வருமாறு:-
"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான் இளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
படித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.
திருவான்மியூரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச்சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். எனக்கு அதிகப்பணம் கிடைத்தது.
இதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.
ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். "நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான்.
சுடலையின் தைரியத்தில் நான் திருவான்மியூரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன். கோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.
நான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன். அதன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன்.
என் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும். சுடலைதான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான்.
போதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன். எனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.
அப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். "ஏன் தயக்கம்? காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்" என்று கூறினார்கள்.
அவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்.
ஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம். ரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, "ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்" என்று சொன்னார்கள்.
உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.
இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து "ஓசி"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் 3 பேர்களை "சிவப்பு ரோஜா" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்."
இவ்வாறு சங்கர் போலீசாரிடம் கூறியிருந்தான்.
சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.
இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான். ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:-
சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான். சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.
விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.
ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.
அதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981_ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான்.
கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீதசுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982_ம் வருடம் அக்டோபர் மாதம் 31_ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள்.
கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு "கீதசுந்தரி" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான். அடுத்து சுமதி 3_வது மனைவியும், பெங்களூர் லலிதா 4_வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.
சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.
இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம். 1987_ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.
இதைத்தொடர்ந்து ஜனவரி (1988_ம் வருடம்) மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று 11 மணிக்கு இரவு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள். "நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.
சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர்_சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.
திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்."
இவ்வாறு மோகன் கூறினான்.
ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.
ஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது?
டோண்டு ராகவன் அவர்கள் நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சாய்பாபா பற்றி குறிப்பிட்டிருந்தார்.அதற்க்கு வந்த பின்னூட்டங்களும் கொஞ்சம் காரசாரமாக இருந்தது. சரி நம்மளும் சாய்பாபா பற்றி ஒரு பதிவிடலாமே என்று எண்ணி யூ டியூபில் தேடியபோது கிடைத்த வீடியோ. பாருங்கள். பின்னூட்டமிடுங்கள். திட்டுவதாக இருந்தால் பெயரைபோட்டு நேரடியாக திட்டுங்கள். சும்மா அனானி பெயரில் ஒளிந்து கொண்டு திட்டவேண்டாம்.
சனி, 16 அக்டோபர், 2010
பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஏன் தெரியுமா?
பெண்களை பெரும்பாலான கவிஞர்கள் நிலவோடு ஒப்பிட்டு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அது ஏன் என்று நம்ம மரமண்டை யோசித்ததில் வந்த விடை இது.
பெண்களை நிலவோடு ஒப்பிடுவது ஒரு ஆணாத்திக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். எப்படி....நிலவுக்கென்று தனியாக ஒளி கிடையாது.சூரியனை சார்ந்து தான் நிலவு இருக்கிறது. சூரியனிடமிருந்து ஒளியை கிரகித்து ஒளிவீசுகிறது. சூரியன் இல்லையேல் நிலவும் இல்லை. அதேபோல்தான் பெண்களும் அவர்களுக்கென்று தனியாக ஒன்றுமில்லை. ஆண்களை சார்ந்துதான் அவர்கள் இருக்க வேண்டும். ஆண்களை விட்டு நீங்கிவிட்டால் பெண்கள் பூஜ்யம்தான். அப்படியானால் இது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடல்லாமல் வேறென்னவாம்?.....................

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)