திங்கள், 31 ஜனவரி, 2011

அரசியல் பக்கங்கள்- ரஹீம் கஸாலி


இனி அடிக்கடி வாசுவும் ராசுவும் அரசியல் நிகழ்வுகளை இங்கே பகிர்ந்து கொள்வார்கள்.


அடடே....வா வாசு எங்கே இந்த பக்கம் கொஞ்ச நாளா ஆளைக்காணோம்?
டெல்லில படிப்பு சம்பந்தமா கொஞ்சம் வேலை இருந்துச்சு ராசு .அதான் அங்கே  போயிட்டு இன்னைக்கு காலைலேதான் வந்தேன்.
அப்படியா? டெல்லில  என்ன விசேசம்? நம்ம சி.எம் கூட டெல்லிக்கு வந்திருந்தாரு  போல?
ஆமாமாம், நேற்று வந்திருக்காருன்னு சொன்னாங்க ....

எதுக்குப்பா அங்கே போயிருப்பாரு ?இலங்கை தமிழனை காப்பாத்துறத பத்தி பேசவா?
அவரு எதுக்குப்பா இலங்கை தமிழர்களை பத்தி பேசணும். அவங்க வந்து தமிழ்நாட்டுல ஓட்டு போடப்போறாங்களா என்ன? அவங்களை காப்பாத்த?

அப்புறம் எதுக்கு போயிருப்பாரு    ஒருவேளை மீனவர் பிரச்சினையை பத்தி போயிருப்பாரோ?
அட நீ வேற விளங்காதவனா இருக்கியே....அதுக்குத்தான் தந்தி அடிச்சுருவாறே?

அப்படின்னா...அதுக்கும்  இல்லையா? வேறெதுக்குதான்  போயிருப்பாரு?
நான் என்னவோ மன்மோகன்,சோனியா மாதிரி கேக்குறே...எனக்கு என்ன தெரியும்? எல்லாம் கூட்டனிய பத்தி பேசத்தான் போயிருப்பாரு.
ஓ...அதுக்குத்தானா? அதையும் போன்ல பேசி முடிச்சிட  வேண்டியதுதானே?
அது சரிவராதே? அப்புறம் அங்கே நடந்த  இன்னொரு கூத்து தெரியுமா?
சொல்லுப்பா...சொல்லுப்பா....

அங்கே போயி வாய வச்சுக்கு சும்மா இருக்காம....பாட்டாளி மக்கள் கட்சி எங்க கூட்டணியில்தான் இருக்குன்னு இவரு பாட்டுக்கு சொல்லிட்டாரு...
இதுல என்னப்பா கூத்திருக்கு?
அவசரப்படாதே....சொல்றேன்.....அவரு அப்படி சொன்னவுடனேயே   ராமதாசு ரொம்ப பிகு செஞ்சுக்கிட்டு  கூட்டணி பத்தி இன்னும் முடிவாகல...எல்லா கட்சியும் எங்கட்ட பேசிக்கு இருக்காங்கன்னு சொல்லிட்டாரு

அதானே....ராமதாசுதான் பெரிய வியாபாரி ஆச்சே? எங்கே பேரம் அதிகமா படியுதோ அங்கேதானே இருப்பாரு....அப்புறம் ராமதாசு இப்படி சொன்னதுல கலைஞர் மூக்கு உடைஞ்சுருக்குமே?
கலைஞர் இதைவிட கேவலத்தை எல்லாம் ராமதாசுட்ட சந்திச்சவரு இதுக்கா அசருவாரு பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
அதுக்குத்தான் எதையுமே பிளான் பண்ணி செய்யனும்ன்னு சொல்றது.
எப்படி ஜெயலலிதா மாதிரியா?
ஜெயலலிதா அப்படி என்னப்பா பிளான்பண்ணி செஞ்சாங்க?
சமீபத்துல வேதாராண்யம் மீனவரு விஜயக்குமார இலங்கை கடற்படை நாயுங்க சுட்டு கொன்னுருச்சு தெரியமா?
ஆமாம் அதுக்கென்ன? இதுல ஜெயலலிதா  பிளான் எங்கேப்பா இருக்கு. அவங்கதான் சுடசொன்னாங்களா?

அய்யய்யோ...நீ என்னப்பா எனக்கு ஆப்பு அடிச்சுருவே போல....அதுல அவங்க பிளான் என்னன்னா....தேர்தல் வருது தெரியும்ல....அதான் வேதாரன்யத்துக்கே நேராப்போயி ஆறுதல் சொன்னாங்க....அதாவது மக்கள்ட்ட நல்ல பேரு எடுத்து ஆட்சிய பிடிச்சிடலாம்ன்னு பிளான்...

இருக்காதுப்பா...அதான் செத்துப்போன மீனவரு விஜயகுமாரு அவங்க கட்சி காரருன்னு சொல்லிட்டாங்களே?
அது உண்மைதான். அப்படி பார்த்தா,  நடிகர் ராமராஜன் கட்சிக்காக ஊரு ஊரா போயி கூட்டம் போட்டவாறு. தீவிர ஆதரவாளரு, அவரு அடிபட்டு மதுரையில அவரு அண்ணன் வீட்டுல  இருக்காரு...வேதாரண்யத்துக்கு போயிட்டு அப்படியே இந்தம்மா அவர பாக்க வரும்ன்னு அவரு குடும்பத்துக்காரங்க  எதிர்பார்த்தாங்கலாம். போகலியே இந்தம்மா....
சரி அத விடு....இந்தம்மா ஆட்சியில ஒருநாள் முதல்வர் மாதிரி  ஒரு வாரம் மந்திரியா இருந்தவரு ஆலங்குடி வெங்கடாச்சலம். இவர  மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு வெட்டி கொன்னுடுச்சு அவரு குடும்பத்துக்கு ஆறுதலு சொல்ல போகலியே இந்தம்மா...
இப்பவும் தேர்தல் வரலேன்னா இந்தம்மா வேதாரண்யம் எந்த திசையில இருக்குன்னு  கேட்டுருப்பாங்க .

அடேங்கப்பா...இவ்வளவு இருக்கா....நீ சரியான மூளைக்காரன்ப்பா...உனக்கு இருக்க மூளைக்கு நீ இங்கே படிக்க  வேண்டிய ஆளே இல்லப்பா.அமெரிக்காவுல படிக்க  வேண்டிய ஆளு?
எதுக்கு நானும் காலுல ஜி.பி.எஸ். மாட்டிக்கு அலையவா?
அது  என்னப்பா ஜி.பி.எஸ்.
ஜி.பி.எஸ் ன்னா  ஒரு ஆளு இருக்க இடத்தை கண்டிபிக்க உதவும் கருவி.விலங்குக  நடவடிக்கைய கவனிக்க அதுக காலில இதைத்தான் மாட்டிவிடுவாங்க.அதுக்கு எலக்ட்ரானிக் டேக்குன்னு பேரு
அப்படியா அதுக்கும் மனுசனுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு இந்த படத்த பாரு புரியும்.

என்னப்பா இது மனுஷங்க காலில மாட்டியிருக்கு எதுக்குஇப்படி மாட்டிக்கு அலையுறாங்க இது இப்ப வந்துருக்க ஒரு ஸ்டெயிலா?
நல்லா கேட்ட போ.....இது அவங்களா மாட்டிக்கலப்பா....மாட்டிவிட்டுட்டாங்க...

மாட்டிவிட்டுட்டான்களா? யாருப்பா இத பண்ணினது?
இப்ப அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில் கட்டி அவங்க நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருது

அடக்கொடுமையே அவன் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தா அவன் காலு தரையில படக்கூடாதுன்னு நம்மாளுங்க சிவப்பு கம்பளம் போடுறாங்க.... அவங்க என்னடான்னா இப்படி பண்றாங்களா? கொடுமையா இருக்கே?
அட இது நமக்கு ஒன்னும் புதுசில்லப்பா. இதுக்கு முன்னாடி வாஜ்பாயி ஆட்சியில மந்திரியா இருந்த ஜார்ஜ் பெர்ணண்டாசுன்னு ஒருத்தர அமெரிக்கா ஏர்போர்ட்டுல அவுத்து பாத்தானுங்க...அப்புறம் அத்வானி, ஷாருக் கானுக்கெல்லாம் இந்த மாதிரி கேவலம் நடந்துருக்குப்பா?

இத நம்ம அரசாங்கம் தட்டி கேக்காதா?
அவங்க சும்மா கொரலு கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு ஒபாமாவுக்கு கால் கழுவி விடற வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவாங்க...
சரி நீதான் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேல....அதுலயாவது இத பத்தி எழுதுப்பா...
எழுதிட்டா போச்சு

வலைப்பதிவுன்னதும் ஞாபகத்துக்கு இப்போ மீனவருக்காக என்னவோ பண்ணிட்டு இருக்காங்களாமே?

ஆமாப்பா... மீனவருக்காக டிவிட்டர்ல பெரிய புரட்சி ஒன்னு உருவாகி தினமும் ஆயிரக்கணக்குல ட்வீட் வந்துக்கு  இருக்கு.அரசாங்கம் காதுக்கு அது எட்டி   இனிமேலாவது இதுக்கு ஓட்டுப்பொறுக்கி ஆட்சியாளர்கள் எதாவது ஆக்சன் எடுக்கறாங்கலான்னு பாப்போம்

நல்லதுப்பா...உன்கிட்ட பேசுனதுல நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.அடிக்கடி வாப்பா.
இத படிக்கறவங்க என்ன எப்படி வரவேற்கறாங்கன்னு தெரிஞ்சுக்குத்தான் நான் அடிக்கடி வர்றதும், வராததும் இருக்கு...
அப்படியா, அவங்க உன்னை வரவேற்க்கிற விஷயத்த நீ எப்படி தெரிஞ்சுக்குவே?
எல்லாம் இந்த பதிவுக்கு விழற ஓட்டையும் பின்னூட்டத்தையும் வச்சுத்தான். சரி கிளம்பறேன்.





ஞாயிறு, 30 ஜனவரி, 2011

இதை கவிதைன்னா சொல்லப்போறீங்க.....


ரங்கசாமியின் ஆடு
எதிர் வீட்டு முத்துசாமியின்
ஆட்டை முட்டியதில்
இரு வீட்டினருக்கும்
 நடந்த தகராறில்
ரங்கசாமியின் வீடும்
முத்துசாமியின் கடையும்
 அடித்து நொறுக்கப்பட்டது.
இருதரப்பும்  இப்போது
காவல் நிலையத்தில்
பஞ்சாயத்துக்காக....ஆனால்,
ரங்கசாமியின் ஆடும்
முத்துசாமியின் ஆடும்
இன்று  கந்தசாமியின்
 வயலில்
ஒன்றாக.....

சனி, 29 ஜனவரி, 2011

மீனவர்களுக்கு என் கவிதாஞ்சலி......


இலங்கை கடற்படை என்னும் கொடூர அரக்க நாய்களால் தினம் தினம் செத்து மடியும் எம் மீனவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

முன்பெல்லாம்
வலை வீசினார்கள்
மீன்கள் மாட்டியது.
இப்போதும் வலை
வீசுகிறார்கள்
மீனவர்களின்
பிணமல்லவா மாட்டுகிறது.

-------------------------------------------

என்ன அநியாயம்?
நாம் மீன்களை மட்டும்
தான் உண்ணுவோம்.
ஆனால்,
இலங்கை கடற்படையினர்
மீனவர்களையும்
உண்ணுகிறார்களே....?
------------------------------------------

வாலி அவர்கள் படகோட்டி படத்தில் எழுதிய எந்த காலத்துக்கும் பொருந்தும் ஒரு அருமையான பாடல்.




நம் ஆதரவை தெரிவிக்க...
இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form



இந்தப்பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து பின்னூட்டமிட்டு இந்த கவிதையை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே.....

வெள்ளி, 28 ஜனவரி, 2011

வெங்காயம்னா சும்மாவா என்ன?

 அந்த வயல்ல போலீஸ்காரங்க காவலுக்கு நிக்கறாங்களே? ஏன் பெட்ரோல் கண்டுபிடிச்சிருக்காங்களா?
இல்லை. வெங்காயம் பயிரிட்டு இருக்காங்க.....

--------------------------

அந்த கட்சி எப்படி ஜெயிச்சு ஆட்சி பிடிச்சுச்சு. ஆச்சர்யமா இருக்கே?
அவங்க தேர்தல் அறிக்கையிலே நாங்க ஜெயிச்சா
வீட்டுக்கு ஒரு மூட்டை வெங்காயம் இலவசமா வழங்கப்படும்ன்னு சொல்லியிருந்தார்களே....அதான்.
-------------------------------

அந்த ஹோட்டல்ல மட்டும் கூட்டம் அதிகமா  இருக்கே....
பின்னே...இட்லிக்கு தொட்டுக்க வெங்காய சட்னி வைக்கிறாங்களே....

-----------------------------

போலீஸ் பந்தோபஸ்தோட போறாரே அவரு யாரு மந்திரியா?
அட நீவேற....அவரு பெரிய வெங்காய வியாபாரி. சந்தைக்கு யாவாரத்துக்கு போறாரு....
---------------------------------

டிஸ்கி:இந்த ஆளு வெங்காயத்தை விடவே மாட்டாரு போலன்னு என்னை பற்றி யாரும் கமென்ட் போட முடியாது....ஏன்னா......பின்னூட்டத்துல பாருங்க....

வியாழன், 27 ஜனவரி, 2011

அதிகமா சிரிச்சு வயிறு வலிச்சா அதற்கு நான் பொறுப்பில்லை....சொல்லிட்டேன்

 சமீபத்தில் யூடியூப் விடியோவில் எதையோ தேடப்போய்  நம்ம லட்சிய தி.மு.க- தலைவர், துணை தலைவர், பொருளாளர், செயலாளர், தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், ஒன்றியங்களின்  செயலாளர்  (ஸ்....யப்பா மூச்சு வாங்குது.....சினிமாவில்தான் எல்லா வேலையும் இவரே இழுத்து போட்டு செய்யுறாருன்னா இந்த அரசியல்லயும் எல்லா பதவியையும் இவரே வச்சுருக்காரே....)  நம்ம விஜய(இப்ப பேருக்கு முன்னாடி இந்த பெயர் இருக்கான்னு வேற தெரியல.....யாராவது அவருட்ட கேட்டு சொல்லுங்களேன்....) டி. ராஜேந்தரின் வீராசாமி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டின்  ஒரு அருமையான வீடியோ மாட்டியது.

நம்ம பிளாக்தான் கொஞ்ச நாளா யாரோ சூனியம் வச்ச மாதிரி காத்து வாங்குதா? அதான்  இந்த வீடியோவ போட்டா நிறையா ஹிட்ஸ் கிடைக்குமேன்னு பேராசையில அங்கேருந்து சத்தமே போடாம லாவட்டிக்கு வந்துட்டேன்.(வி.டி.ஆர் ,அதாங்க விஜய டி.ராஜேந்தரின் சுருக்கம்தான் இந்த வி.டி.ஆர். வீராசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை விட  நூத்தி அம்பது சதவீதம் நம்பிக்கை இந்த வீடியோவின் மீது எனக்கிருக்கிறது )

எப்போதும் பதிவர்களை கைவிடாதவர் நம்ம வி.டி.ஆர்.   அவரு படம் போல இல்லாம இந்த வீடியோவாவது அவரு புண்ணியத்துல ஹிட்டாகட்டும். (பாவம்....அவருக்கு ஏதோ நம்மால ஆனா ஒரு சிறிய உதவி.)

ஹலோ பாஸ் எங்கே போறீங்க.....வீராசாமின்னதும் தெறிச்சு ஓடறீங்க பார்த்தீங்களா.....இந்த வீடியோவ பாருங்க பாசு....சிரிப்புக்கு நான் ....இல்லை இல்லை நம்ம வி.டி.ஆர் கியாரண்டி....அப்புறமும் சிரிப்பு வரலேன்னா கவலைய விடுங்க வரலாற்று பக்கங்களில் நம்ம முன்னாள் பிரதமர்  நரசிம்ம ராவுக்கு அடுத்த இடம் கண்டிப்பா உங்களுக்கு உண்டு...

பார்த்துட்டு சும்மா போகக்கூடாது. எதாவது கருத்த சொல்லிட்டு போகணும். முக்கியமா எல்லாத்திலும் வோட்டு போட்டு போகணும்(வி.டி.ஆருக்கு இதிலாவது வோட்டு விழட்டுமே) இல்லாட்டி தலைவரு கோவுச்சுக்குவார்....சரியா?

ஒரு வீடியோவ போடுவதற்கு எதுப்பா பத்தி பத்தியா வி.டி.ஆர் கொடுக்கறதை விட அதிக பில்டப்பு கொடுக்கறேன்னு  கேட்கறவங்களுக்கு.......
நான் போன முறை வி.டி.ஆர் பத்தி ஒரு பதிவு மட்டும் போட்ட போது, நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் சி.பி.செந்தில் குமார் அவர்கள், உங்கள் கமெண்டையும் சேர்த்திருக்கலாம் என்று பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்காகத்தான் இந்த பில்டப்பு....(கொஞ்சம் ஓவராத்தான் போயிருச்சோ).......




டிஸ்கி: டிஸ்கி என்று தனியாக போடுவதற்கு ஒன்றுமில்லாததால் மேலே இருக்கும் ஏதேனும் ஒரு பத்தியை டிஸ்கியாக நினைத்துக்கொள்ளவும்

புதன், 26 ஜனவரி, 2011

ஒரு நகைச்சுவை-ஒரு தத்துவம்-ஒரு டவுட்டு-ஒரு விளக்கம் (வானவில் பக்கங்கள்)

ஒரு நகைச்சுவை
ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி இந்தியா வந்து ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு போகிறான். அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட....அழகா இருக்கே....இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்க, அதற்க்கு டிரைவர்" இது எங்க நாட்டு பாராளு மன்றம்" என்றான். "இது எவ்வளவு நாளில் கட்டியது?" என்று பயணி கேட்க "தெரியல....ஒரு அஞ்சாறு வருஷம்  கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" ன்னு பதிலளித்தான் டிரைவர். "அஞ்சாறு வருஷமா? எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்" ன்னு பீத்திக்கிட்டான.
அடுத்து இந்தியா கேட்....
"இது என்ன?"
இது இந்தியா கேட்."
"இதை கட்டி முடிக்க எத்தனை  நாளாச்சு?"
"தெரியல....ஒரு வருஷம் இருக்கலாம்"
"ஒரு வருஷமா? எங்க நாடா இருந்தா...ஒரு மாசத்துல கட்டியிருப்போம்" மறுபடியும் பீத்திக்கிட்டான் வெளிநாட்டான்.
டாக்சி டிரைவர் கடுப்பாகிட்டன் இருந்தாலும் காட்டிக்கல....
அடுத்து தாஜ் மஹால்
"ஓ.....இதான் தாஜ்மஹாலா? அருமையா இருக்கே....இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு?"
இதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னா....உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான் ன்னு மனசுல நினைச்சுக்கு.....கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.
"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதுக்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சயமா இருக்கு"ன்னு போட்டான் பாருங்க ஒரு போடு....அதோடு வெளிநாட்டான் வாயே திறக்கல.....
----------------------------------------------------------

ஒரு தத்துவம்

கல்யாணம் என்பது பரமபத விளையாட்டு மாதிரி....
சிலருக்கு ஏணியாக ....சிலருக்கு பாம்பாக ....
-----------------------------------------------------------------
ஒரு டவுட்டு.
மன்னிக்க வேண்டுகிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பகுதியில் இடம் பெற்றிருந்த கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டது.
-----------------------------------------------------------
ஒரு விளக்கம் 

குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு

டிஸ்கி: என் மனதில் தோன்றுவதை அவ்வப்போது வானவில் பக்கங்கள் என்ற பெயரில் பகிர்ந்து கொள்வேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா சந்தித்த குடியரசுத்தலைவர்கள்

1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962

 
 



2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967

 
 


3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969

 
 




4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)


 





5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை 
தற்காலிகமாக)
 






 
6)வி.வி.கிரி - 1969-1974







 
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
 






 
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)







9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982







 
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987









 
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992








 
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997










 
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002







 
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007







 
15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)


செவ்வாய், 25 ஜனவரி, 2011

குடியரசும் முதல்ஜனாதிபதியும்

 சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு 1948 ஜுன் 21_ந்தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக அப்போது மேற்கு வங்காள கவர்னராக இருந்த ராஜாஜி புதிய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பர் 26_ந்தேதி அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26_ந்தேதி இந்தியா குடியரசு நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942_ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.
1942_ல் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ் எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன் முடிவடைந்தது.

திங்கள், 24 ஜனவரி, 2011

வலைப்பதிவில் உங்களைப்பற்றிய பயோடேட்டா வெளியாக வேண்டுமா?

ஒரு புதிய வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  வலைபதிவிடும் வலைஞர்களை பற்றிய தகவல்களை அதில் வெளியிடுகிறார்கள். உங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அவர்களுக்கு அனுப்பினால் அதை அவர்கள அந்த தளத்தில்  வெளியிடுகிறார்கள்.
என்னை பற்றிய பயோடேட்டா பார்க்க......
அந்த தளத்திற்கு செல்வதற்கான சுட்டி
விண்ணப்ப படிவ சுட்டி 


 

தகவல் பிடித்திருந்தால் வாக்களித்து பின்னூட்டமிட்டு செல்லவும்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தேர்தல் நேரம்

 
கு ண்டும் குழியுமாய் சாலைகள்
அதில் நாளுக்கு மூன்று தடவை வரும்
ஒரேயொரு லொட லொடா பேருந்து

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கண்சிமிட்டும் தெருவிளக்குகள்
ஒரு நாளுக்கு பத்து மணிநேரம் விடுமுறை
எடுத்துக்கொள்ளும் மின்சாரம்

வாரத்திற்கு இருதடவை முறைவைத்து வரும்
அழுக்கு தண்ணீர்
மழை பெய்தால் தற்காலிக குளமாகிவிடும்
பள்ளி மைதானம்

இந்த குறைகளையெல்லாம் தீர்க்கக்கோரி
எங்க தொகுதி எம்.எல்.ஏ.,எம்.பி.-யிடம்
கால்கடுக்க செருப்புதேய நடையாய்
நடந்ததுதான் மிச்சம்
ஒன்றுமே நடக்கவில்லை.

என்ன ஆச்சர்யம்?
திடீரென ஒருநாள் நாங்கள்
கேட்டதெல்லாம் நடந்தது
அட... இப்போதாவது
இந்த அரசியல்வாதிகளுக்கு
புத்திவந்ததே என நினைத்து
திரும்பிப்பார்த்தால்...
ஆம்... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்.

சனி, 22 ஜனவரி, 2011

சைக்கிள்

கல்லூரி முதல் நாள்.புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் ராக்கிங் செய்து கொண்டு இருந்தார்கள். புதிதாய் சேர்ந்த மாணவர்களான கணேசும், சிவாவும் உள்ளே நுழைந்தார்கள். சீனியர்  மாணவரான தன் சகாக்களுடன் இருந்த விக்னேஷ்  அவர்களை அழைத்தான்.
"ரெண்டு பெரும் இங்கே வாங்க...."
கணேசை பார்த்து கேட்டான்.
உன் பேரு என்ன?"
"கணேஷ்"
"தசாவதாரம் டைரக்டர் யாருன்னு தெரியுமா?"
"கே.எஸ்.ரவிக்குமார்ண்ணே"
"குஸ்பு ஹஸ்பன்ட் பேரு என்ன?"
"சுந்தர்.சி"
"தமிழ்நாட்டோட துணை முதலமைச்சர் பேரு  என்னன்னுதேரியுமா?"
"மு.க.ஸ்டாலின்"
"ஏண்டா...இவ்வளவு பேரையும் இன்ஷியலோட சொல்றே....உன் பேர மொட்டையா சொல்றே....உங்கப்பா பேரு என்ன?"
"கந்தசாமி"
"ஆங்.....இனிமே உன் பேரை யாரு கேட்டாலும் இன்ஷியலோடதான் சொல்லணும் சரியா"
இப்போது சிவா....
"உன் பேரு என்ன"
"ஆர்.சிவா"
"யாரு உன் இன்சியலை கேட்டது. உங்கப்பா பெரிய கலக்டரு.....எந்த ஊரு உனக்கு"
"அரசர்குளம்."
"பெரிய அமெரிக்கா மேப்புல இருக்கதுக்கு....அது எங்கே இருக்குன்னு சொல்லு?"
"புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கிக்கு  பக்கம்"
"அவனுக்கு....."
""அவனும் எங்க ஊருதான்"
"நீங்க நல்லா சைக்கிள் ஓட்டுவீங்களா?"
"ஓட்டுவோம்..."என்றார்கள் கோரசாக....
"முதல்ல சிவா...நீ ஓட்டு பார்ப்போம்"
"சைக்கிள் எங்கேன்னே...."
"ஆங்...இப்பத்தான் ஆர்டர் போட்டிருக்கு....சைக்கிள்லாம்   தரமாட்டோம். சும்மா சைக்கிள் இருக்கிறதா நெனைச்சுக்கு ஓட்டிக்காட்டு"
சிவாவும் கையையும் காலையும் ஆட்டிக்கு சைக்கிள் ஓட்டுவது போல சுத்தி வந்தான்.
"போதும் நிறுத்து...சைக்கிள கனேஷ்ட்ட கொடு....அவன் ஓட்டட்டும். நீ என்ன பண்றேன்னா....நேர அந்த கிளாஸ் ரூம் வாசல் வரை போயி திரும்பி வரணும்"
"சரிண்ணே...." என்றவாறு சைக்கிள் ஒட்டிக்கொண்டு போனவன் திரும்பி வரவேயில்லை.
"எங்கேடா சிவா. உன் பிரண்டு ஆளை காணாம்?"
"தெரியலேன்னே...."
"எங்களையே ஏமாத்திட்டு போயிட்டானா....நாளைக்கு வரட்டும் வச்சுக்கிறேன்"
-----------------------------------------------------
ஹாஸ்டல்....
"டே கணேஷ்....நீ இப்படி பண்ணிருக்க கூடாது....அவங்க உன் மேல கடுப்பா இருக்காங்க...நாளைக்கு என்ன பண்ண போறாங்களோ...."
"ஒன்னும் பண்ண முடியாது. நான் எப்படி சமாளிக்கிறேன்னு பாரு"
"எப்படிடா...."
"நாளைக்கு பாரு...."
-------------------------------------------------

அடுத்த நாள்....
இருவரும் கல்லூரிக்குள் நுழையும் போது விக்னேஷ் மறித்தான்.
"வாடா....கணேஷு....நேத்து எங்களுக்கே டிமிக்கி கொடுத்துட்டே...."
"அண்ணே...நான் உங்களப்போயி ஏமாத்த முடியுமான்னே."
"அப்பறம் ஏண்டா..போனவன் திரும்பி வரல..."
"போங்கண்ணே....நீங்க ரொம்ப மோசம். கொடுத்ததுதான் கொடுத்தீங்க ஒரு நல்ல சைக்கிளா கொடுக்க கூடாதா"
"என்னடா சொல்றே? நாங்க எப்ப சைக்கிள் கொடுத்தோம்?"
"சைக்கிள் கொடுத்ததா நெனைச்சுக்கு ஓட்டிட்டு போக சொன்னீங்களா...அந்த சைக்கிள் பழைய சைக்கிள்ன்னே....நானும் ஓட்டிக்கு போயி திரும்பலாம்ன்னு நெனைச்சு பிரேக் பிடிக்கிறேன். சைக்கிள்ள பிரேக்கே இல்லை.நிப்பாட்டவும் முடியல...நேரா போயி அந்த சுவத்துல மோதிட்டேன். இங்கே பாருங்க நல்ல காயம்"
"பரவாயில்லையே சமாளிச்சுட்டியே....அரசர்குளத்து காரங்க  புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்." என்றான் விக்னேஷ். சிவா வாயடைத்து போய் நின்றான்...

டிஸ்கி: எப்படியோ எங்க ஊர் காரங்களை புத்திசாலியா காட்ட ஒரு சிறுகதை எழுதிட்டேன். 

நன்றி டிஸ்கி: கடந்த வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவின்  பக்கங்கள் பாலா அவர்களுக்கு நன்றி


வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது சார்

டி.ராஜேந்தர் ஆனந்த விகடனுக்கு எதிராக பேசிய பேச்சு இது.

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

இன்று நடந்த நடிகர் ராஜேஷ் அவர்களின் மகளின் திருமண வரவேற்பில் நடிகர் கவுண்டமணி கலந்து கொண்டபோது எடுத்த படம். நம்ம பன்னிகுட்டி ராமசாமி பிளாக்கில் இருப்பது  போல் கம்பீரமாக  இருந்த கவுண்டமணியா இது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீங்களும் பார்த்துட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.



 

வியாழன், 20 ஜனவரி, 2011

ஒப்பீடு

பக்கத்துவீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
வாராவாரம்
சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....
எதிர் வீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
மாசாமாசம்
வெளியூரு கூட்டிப்போறாரு....
எனக்குன்னு வந்து
வாச்சிருக்கீங்களே.....
என்று அவ்வப்போது
என்னை திட்டும்
என் மனைவி 

அவர்களைப்பற்றி
இப்போதெல்லாம்
வாயை திறப்பதேயில்லை....
எதிர்வீட்டுக்காரரும்
பக்கத்து வீட்டுக்காரரும்
கூட்டணி போட்டு
வேலைக்காரியிடம் 
சில்மிஷம் செய்து
மாட்டிக்கொண்டதிலிருந்து.....

புதன், 19 ஜனவரி, 2011

நாங்களும் 18+ போடுவோம்ல....

எப்படின்னு கேட்கறீங்களா












இது எப்படி இருக்கு........ஹா...ஹா....ஹா....


ரிஸ்கி: எல்லோரும் டிஸ்கின்னுதானே சொல்லுவாங்க....இவன் என்ன புதுசா ரிஸ்கின்னு போட்டிருக்கானேன்னு  யோசிக்கறீங்களா...உங்கட்டேர்ந்து திட்டு வருமோ, குட்டு வருமோ....அடி உதை கிடைக்குமோன்னு பயப்படாம ரிஸ்க் எடுத்து போட்டுருக்கேன்ல.....அதான் இதுக்கு ரிஸ்கின்னு பேரு வச்சேன்.  

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

M.G.R.- அறிந்ததும் அறியாததும்

எம்.ஜி. ஆரின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளைசுருக்கமாக பார்ப்போமா?

.



ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார்

பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா

முதல் படம்: சதிலீலாவதி (1935)

கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978

முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி

இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன்

 இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.





இவர் இயக்கிய படங்கள்

நாடோடி மன்னன் 1958

உலகம் சுற்றும் வாலிபன் 1973

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1977



அரசியல் வாழ்க்கை



காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது  அரசியல் வாழ்வை துவங்கிய இவர் கலைஞரின் உதவியுடன் தி.மு.க-வில் இணைந்தார்.அண்ணாவின் மறைவிற்கு பின் கலைஞர் முதல்வராக பெரிதும் உதவியாக இருந்தார். பின்னர் கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 1973- ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க-வை துவக்கினார். இவர் சந்தித்த முதல் இடைத்தேர்தல் திண்டுக்கல் நாடாளு மன்ற தேர்தல். அந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை அண்ணா.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் தோற்கடித்தார்.




போட்டியிட்ட இடங்கள்

தி.மு.க-சார்பில் 1967,1971-ஆம் ஆண்டு பரங்கிமலை தொகுதியிலிருந்தும்,

அண்ணா.தி.மு.க- சார்பில் 1977- ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்தும்,

1980-ஆம் ஆண்டு மதுரை மேற்கிலிருந்தும்,

1984-ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்தும் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்க பட்டார்.

1977-ஆண்டிலிருந்து 1987-ஆம் ஆண்டு வரை மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.



இவரின் மனைவியர் பெயர்கள்
தங்கமணி

சதானந்தவதி,

ஜானகி அம்மாள்




இவருக்கு புரட்சி நடிகர் பட்டத்தை வழங்கியவர் கலைஞர்
புரட்சித்தலைவர் பட்டத்தை வழங்கியவர் கே.ஏ. கிருஷ்ணசாமி
 எம்.ஜி.யாரின் அபூர்வ புகைப்படங்கள் கீழே....
 பேரறிஞர் அண்ணா,பேராசிரியர் க.அன்பழகனுடன்










 சில அபூர்வமானபுகைப்படங்களின் தொகுப்பு







 எம்.ஆர்-ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருக்கும் எம்.ஜி.ஆரிடம் பரங்கிமலை தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்து வாங்கப்படுகிறது.









கே.எ.மதியழகன், பேரறிஞர்  அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் கருணாநிதியுடன்







 தன் நண்பர் கலைஞருடன் ஒரு இனிய தருணத்தில்


 தன் மனைவி வி.என். ஜானகியுடன்






 சிவாஜி, கலைஞர், ஜெயலலிதாவுடன்



எம்.ஜி.யாருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது

சனி, 15 ஜனவரி, 2011

இப்படியும் பொங்கல் கொண்டாடலாம்....

குளித்து முடித்து
புத்தாடை அணிந்து
கடவுளை பிரார்த்தித்து
தொலைக்காட்சி முன்
அமர்ந்தான்
பொங்கல் சிறப்பு
நிகழ்சிகளை பார்க்க....

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கல் ஸ்பெசல்

உழவர் திருநாளாம் தமிழர் திருநாள்,தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் ஸ்பெசலாக இதோ உங்களுக்காக இரண்டு அருமையான பாடல்கள்







இந்த பாடலில் முதல் ஒரு வரிமட்டுமே பொங்கல் சம்பந்தப்பட்ட வரியாக இருப்பினும் எனக்கு பிடித்த அருமையான பாடல்

புதன், 12 ஜனவரி, 2011

பதிவுலகில் என் கொசுவர்த்தி

வாங்க....என்னடா இவன் கொசுவர்த்தி...ஆல் அவுட்டுன்னு என்னவோ எழுதியிருக்கானே...என்னன்னு பார்ப்போம்ன்னுதானே வந்துருக்கீங்க....அது ஒன்னுமில்லேங்க....உள்ளே வெளியே பார்த்திபன் ஸ்டயில்ல ஃப்ளாஷ்  பேக்கைத்தான் கொசுவர்த்தின்னு சொல்லிருக்கேன்.

ரெண்டுநாளைக்கு முன்னாடி நம்ம நல்ல நேரம் சதீஷ் குமார் 
திரும்பி  பார்க்கிறேன்னு எழுத சொல்லி கூப்பிட்டு இருந்தாப்ல...
நான் பதிவுலகத்துக்கு வந்து அஞ்சு மாசந்தான் ஆகுது.
அதுக்குள்ளே என்னத்த திரும்பி பாக்கறது?
ஒரு அஞ்சு வருஷம் ஆகிருந்தாக்கூட பரவாயில்ல....
திரும்பிபாக்க ஏதாவது விஷயம் இருக்கும்.
அதான் எழுதாம விட்டுறலாம்ன்னு நம்ம சதீஷ் கிட்டயே
ஏதாவது பரிகாரம் கேக்கலாம்ன்னு
இருந்தேன்.(ஏன்னா....அவருதான் ஜாதகம், ஜோசியம்ன்னு இருக்காரு...நல்லா பரிகாரம் சொல்லுவாருன்னு நினைச்சேன்).

ஆனா அவரு கடுப்பாகி சூன்யம், கீன்யம்ன்னு வச்சுட்டாருன்னா என்ன பண்றது நமக்கெதுக்கு வம்புன்னு  பயந்து எதையாவது எழுதி வைப்போம்ன்னு எழுதிட்டேன்.

தென்றலை தீண்டியதில்லை , நெருப்பை தாண்டியிருக்கிறேன்னு
பராசக்தி சிவாஜி ரேஞ்சுக்கெல்லாம் நம்ம திரும்பி பார்க்கப்போவதில்லை. அதுக்கு நமக்கு வயசுமில்லை, அனுபவமுமில்லை.
வேறெப்படி திரும்பி பார்ப்பது?.

சரி நிஜமாகவே திரும்பி பாக்கலாம்ன்னு நினைச்சு திரும்பினா நம்ம தோள் பட்டைவிட்டு கழுத்து திரும்ப மாட்டேன்னு அடம் பிடிக்குது.
அய்யய்யோ ரொம்ப திரும்பி சிலுக்கு சீ.. சீ...சுளுக்கு,  பிடிச்சுக்குமோன்னு பயந்து அந்த முயற்சிய  அதோடு விட்டுட்டேன்.
எப்படியாவது திரும்பி பார்த்திடனும், இல்லாட்டி ஒரு பிரபல பதிவர அவமதிச்சதா பதிவுலகம் நம்மள குற்றம் சாட்டிருமே என்ன பன்றதுன்னு ராத்திரி எல்லா விளக்கையும் அணைச்சுட்டு லைம் லைட் வெளிச்சத்துல (ஜீரோ வாட்ஸ் பல்பு...அதுதாங்க நமக்கு லைம் லைட்டு ) மல்லாக்க படுத்துக்கு யோசிச்சேன் யோசிச்சேன் என்னைய மறந்து யோசிச்சேன்.
அப்பவும் ஒரு ஐடியாவும் வரல...சரி இதோடு விட்டுடுவோம்...மீதிய காலைல பார்த்துக்கலாம்ன்னு படுத்தேன்.
பளிச்சுன்னு லைட்டு எரிஞ்சுச்சு. நம்ம மூளையில இல்லங்க...ரூம்ல...
"இன்னும் தூங்காம என்ன பண்றீங்க"...ன்னு என் பொண்டாட்டிதான் கேட்டா....
"இல்லையே தூங்கிட்டேனேன். தூங்குனவனை எழுப்பி இப்ப எதுக்கு தூங்கலையா கேள்வி கேக்குறே"னு பதில் சொல்லி சமாளிச்சேன்.
"நீங்க தூங்கற லட்ச்சனந்தான்  உங்க மொகரகட்டையில தெரியுதே,நானும் அப்பவுலேர்ந்து  பாத்துக்கு இருக்கேன். லூசு மாதிரி கைய கைய ஆட்டிக்கு இருக்கீங்க..அப்படி என்னத்த யோசிக்கிறீங்க...ராத்திரி ஒரு மணி வரை"ன்னு கேட்டா...
அப்போதான் மணிய பார்த்தேன் ஒன்னு ஆகி பத்து நிமிஷம் ஆகிருச்சு.
"அய்யோ...மணி ஒன்னாச்சா...காலைல வெள்ளன எந்திருக்கனுமே என்ன பண்றதுன்னு" பொலம்பினேன்.
"வெள்ளன  எந்திருச்சு எங்க போகப்போறீங்க...ஆபீசுக்கா"ன்னு எதிர் கேள்வி கேட்டா...
"இல்லே...காலையில சீக்கிரமே ஒரு பதிவு போடணும் அப்பத்தான் எல்லா நாட்டையும் கவர் பண்ணி ஹிட்ஸ் வாங்கலாம்"ன்னு சொன்னேன்.
"நீங்கல்லாம் எங்கே உருப்பட போறீங்க"...ன்னு அந்த அர்த்த ராத்திரில சாபம் கொடுக்குறா...
"சரி அதவிடு எனக்கு ஏதாவது ஐடியா கொடு"ன்னு கேட்டு விபரத்தை சொன்னேன்.
"அட இதுக்குத்தான் இவ்வளவு தூரம் யோசிச்சீங்களா. இப்படி பண்ணுங்க"....ன்னு கொடுத்தா பாருங்க ஒரு ஐடியா. எந்த ஒரு பதிவரும் யோசிக்க முடியாத ஐடியா...நல்லவேளை அவ பதிவுலகத்துக்கு வரல...வந்திருந்தா நமக்கெல்லாம் சங்குதான்னு நினைச்சுக்கு தூங்கப்போனேன்.இல்லை...இல்லை..தூங்கிப்போனேன்...அப்படி என்ன ஐடியான்னு தானே கேக்குறீங்க....
நான் அவட்ட கேட்டது  திரும்பி பார்க்கிறேன்னு எழுத ஏதாவது ஐடியா கொடுன்னு....
இப்படி எழுதிடுங்கன்னு அவ சொன்ன ஐடியா கீழே....



கீழே 



கீழே 




 இன்னும் கீழே 



அவ்வளவுதாங்க வந்துட்டீங்க....


இதுதாங்க அது....






எப்படி இருக்கு நான் திரும்பி பார்த்தது?.

டிஸ்கி-1:இது நூறு சதவீதமும் கற்பனை அல்ல...

டிஸ்கி-2: என்னை போன்ற பதிவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத டாக்டர் பட்டத்தை எனக்கும் சக பதிவர்களுக்கும் வழங்கிய டுபாக்கூர் யுனிவர்சிடியின் முதல்வர் கல்வித்தந்தை அண்ணன் கக்கு மாணிக்கம் அவர்களுக்கு நன்றி....

திங்கள், 10 ஜனவரி, 2011

ஆஹா.... நமக்கும் விருது கொடுத்திருக்காங்கப்பா

நான் பதிவுலகிற்கு வந்து 5 மாதங்களே ஆகிய நிலையில், நம்மளையும் பதிவராக மதித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.....கடந்த மாதத்தில்(வருடத்தில்) எனக்கும் சில நண்பர்கள் விரு(ந்)து அளித்து கவுரவித்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு....



ஆஹா பக்கங்கள் அப்துகாதர் அவர்கள் எனக்கு அளித்த விருது இது. பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருதும் கூட.நன்றி நண்பரே...




கருப்பன் ஃ பார்ஹான் அவர்கள் நமக்களித்த  விருது இது. நன்றி நண்பரே....







அடுத்து பாண்டிச்சேரி வலைப்பூ புதிதாக அறிமுகத்தவம் என்ற புதிய வலைப்பூவை ஆரம்பித்து பதிவர்களை அடையாளம் காட்டிவருகிறார்கள். அப்படி ஆரம்பித்த முதல்பதிவிலேயே எனது ஒரு நடிகை தத்தெடுத்த கதை என்றசிறுகதையை தேர்வு செய்து வெளிட்டிருந்தார்கள். அதற்காக பங்களிப்பாளர்கள் விருது கொடுத்திருந்தார்கள். அவர்களுக்கும் நன்றி.... இந்த விருதுகளுக்கு நம்ம வொர்த்தான ஆள்தானா என்று விளங்கவில்லை. எதுக்கும் பின்னூட்டத்தில்  நீங்க ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்களேன்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

திருட்டு - சிறுகதை

தான் நடத்தும் மளிகை கடையை திறக்க தன் மகனுடன் வந்த  மாரிமுத்து ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டான். காரணம், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. பதட்டத்துடன் உள்ளே நுழைய  முயன்றவனை அவனது மகன் தடுத்தான்.
"அப்பா...இப்ப உள்ளே போக வேணாம். திருடங்க ஏதாவது தடயத்த விட்டுட்டு போனாலும் போயிருப்பாங்க...எதுக்கும் போலீசுக்கு போன் பண்ணலாம்".
சரியென்று தலையாட்டினார் மாரிமுத்து.
சிறிது நேரத்தில் போலீஸ் வந்தார்கள்.
" என்ன திருட்டு போயிருக்குன்னு பாத்தீங்களா?"
"நீங்க வந்த  உடனே போகலான்னு பையன் சொன்னான்"
"நல்லது. சரி வாங்க போகலாம்"
உள்ளே போய் பார்த்தார்கள். எல்லாம் அப்படியே இருந்தது. திருட்டு போன அடையாளமே இல்லை.
"என்னங்க...எல்லாம் அப்படியே இருக்கு. திருடு போனது போல தெரியலியே?"
"அதான் சார் எனக்கும் புரியல"
"எதுக்கும் கல்லாவப்பாருங்க"
"கல்லாவுல காசேதும் வைக்கிறது இல்லை சார். அன்னன்னிக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போயிருவேன்"
"என்னங்க இது....மர்மமா இருக்கு...பூட்டை உடைச்சு கதவ திறந்திருக்காணுக...ஆனா, உள்ளே இருக்க சாமான்லாம் பத்திரமா இருக்கு. அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வந்திருப்பாங்க?"
"சார் ஒரு நிமிஷம் இருங்க" என்ற மாரிமுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கத்தினார்
"சார் ரெண்டு மூட்டை வெங்காயத்தை காணோம். அதத்தான் திருடிட்டு போயிருக்கானுங்க..."

சனி, 8 ஜனவரி, 2011

என் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......

 என்  வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......இப்போதுதான் ஜோக் எழுதுகிறேன். என் கன்னி முயற்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 
திருட்டு வீ.சி.டி.-வியாபாரிகல்லாம் சேர்ந்து அந்த நடிகர் வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்காங்களே...எதுக்கு?
அதுவா அந்த நடிகர் நடிச்ச படத்த திருட்டு வீ.சி.டி-யா நிறைய காப்பி போட்டிருந்தாங்களாம். விக்காம நட்டம் வந்துடுச்சாம்..அதான் நடிகர்ட்ட நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரதம் இருக்காங்க...


தலைவரே நம்ம ஊழல் பண்ணி கோடிகோடியா சேர்த்தது மக்களுக்கு தெரிஞ்சு போச்சு?
எப்படிய்யா சொல்றே?
வெளில எட்டிப்பாருங்க இந்த தடவை ஒரு ஓட்டுக்கு இருபதாயிரம் ரூபாயா உயர்த்தி கொடுக்கணும்ன்னு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க....


நம்ம தலைவருக்கு உள்ள திறமை யாருக்கும் வராது
அப்படி என்னப்பா பண்ணினாரு?
என் சுயசரிதை முதல்பாகம்ன்னு சொல்லி போன வருஷத்து டைரிய ஒரு லட்சம் காப்பி போட்டு வித்துட்டாருன்னா பார்த்துக்கோயேன்....





அந்தாளு கஞ்சி  குடிக்கறாரு....அவரப்போயி பணக்காரன்னு சொல்றே?
நல்லாப்பாரு தொட்டுக்க வெங்காயம் வச்சிருக்காரு....


அந்தாளப்போட்டு ஏன் நம்ம டாக்டரு அடிக்கறாரு
பாலி கிளினிக்குன்னு எழுதச்சொன்னா போலி கிளினிக்குன்னு எழுதிட்டாராம்.

எப்படி இருக்குன்னு பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்களேன் 

வெள்ளி, 7 ஜனவரி, 2011

வாங்க குறும்படம் பார்க்கலாம்

 மீபத்தில் யூடியூப் வழியாக ஒரு அருமையான குறும்படம் பார்த்தேன். நமக்கு விமர்சனம் பண்ணுவதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது என்பதால் நேராக குறும்படத்தை பார்வையிட்டு விடுங்கள். பொறுமையாக பாருங்கள். இறுதியில் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட் இருக்கிறது. ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படம் பார்த்த திருப்திஉங்களுக்கு  கிடைக்கும். அப்படியே உங்கள் கருத்தையும் சொல்லிட்டு போங்க எனக்கு திருப்தி கிடைக்கும்.

வியாழன், 6 ஜனவரி, 2011

நாங்களும் பல்பு வாங்கியிருக்கோம்ல....

பல்பு வாங்காத பதிவர் பதிவரே இல்லை என்ற புதுமொழி உருவாகிவிடுமோ என்னுமளவிற்கு இப்போது எல்லா பதிவர்களும் பல்பு வாங்கிய கதையை சிலாகித்து எழுதிவருகிறார்கள். சரி நம்மட்டையும்தான் இது மாதிரி பல்பு வாங்கிய கதை நூற்றுக்கணக்கில் இருக்கே...அதுல ஒன்ன எடுத்து விட்டுட்டு பல்பு வாங்கிய பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி களத்துல குதிச்சுட்டேன்.
சமீபத்துல நடந்த கதைய சொல்லுறேன். நான் வாங்கிய பல்பு எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க....
கடந்த வாரம் நானும் என் நண்பனும் ,என் நண்பனின் குழந்தை பிறப்பு சான்றிதல் வாங்க புதுக்கோட்டை நகராட்ச்சிக்கு போனோம். முதலில் பைக்கில் போவதாகத்தான் முடிவு. திடீரென்று மழை பேஞ்சதால கார்ல போனோம். இதுல இன்னொரு விஷயத்தை சொல்லி ஆகணும்.
நான் இப்ப உபயோக படுத்துவது பி.எஸ்.என்.எல்.- என் நண்பன் பிரிபெய்டு   கார்டு. இதுல இருக்க பலன் என்னன்னா ஏதாவது ஒரு லேன்ட்லைன் நம்பருக்கு நம்ம செல்லுல சார்ஜ் இருக்க வரைக்கும் காச பத்தி கவலைப்படாம மணிக்கணக்குல இலவசமா அரட்டை யடிக்கலாம். அதுனால, நானும் ஒரு கார்டு வாங்கிப்போட்டு அதுல எங்க வீட்டு நம்பர இலவசமா பேச பதிஞ்சு வச்சுருக்கேன். என்னைக்காவது அத்தி பூத்தமாதிரி வீட்டைவிட்டு வெளிய போனா...அந்த நம்பரைத்தான் எடுத்துட்டு போவேன். அன்னைக்கும் புதுக்கோட்டைக்கு அந்த நம்பராத்தான் எடுத்துட்டு போனேன். போகும் வழியெல்லாம் ஒரே ரன்னிங் கமெண்டரிதான்.
இப்ப மழை பெய்யுது, புதுக்கோட்டையில போயி இறங்கிட்டோம், இப்ப டீ குடிக்கிறோம், மறுபடி  கார்ல ஏறி நகராட்சிக்கு போறோம்ன்னு விடாம பேசிட்டு வாரேன். என் நண்பன்(இது பிரி பெய்டு கார்டு இல்லை. என் நிஜமான ஃபிரண்டு ) கடுப்பாகி
"டே...வைடா..நாயே ...இலவசமா கொடுத்தாலும் கொடுத்தாங்க...இப்படி போட்டு தாளிக்கிறே, உன்னாலதாண்டா கவர்மெண்டுக்கு நட்டம்" ன்னு கத்தினான்.
"ஆமா, டெலிபோன்ல ராசாவால வராத நட்டம், நான் ஒரு மணிநேரம் பேசறதுலதான் வரப்போகுது வேலைய பாரு" ன்னு  அந்த நேரத்திலும் அசராம பாலிடிக்ஸ் பேசினேன்.
அதுக்கப்புறம் அவன் ஒண்ணுமே பேசல..ஒருவேளை என் போனுக்கும் வாயிருந்தா அவன் சொன்னதத்தான் சொல்லிருக்குமோ என்னவோ...
சரி விசயத்துக்கு வருவோம்....ஒரு வழியா நகராட்சியில் எல்லா வேலையும் முடிஞ்சு கிளம்பும் நேரத்தில் மறுபடியும் வீட்டுக்கு போன் போட்டு புதுக்கோட்டையில ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேட்டு தொலைஞ்சுட்டேன். அப்பத்தாங்க நமக்கு ஏழரை ஆரம்பிச்சுச்சு.
உடனே என் மனைவி "நம்ம வீட்டு டாய்லட்டுல ரெண்டு நாளா லைட் எரியல....வரும்போது ஒரு இருபது வாட்ஸ் CFL பல்பு ஒன்னு வாங்கிட்டு வாங்க...நல்ல நயம் பல்பா வாங்குங்க....லோக்கல்ல வாங்கி சும்மா சும்மா அடிபட்டு போயிடுது" ன்னு சொன்னாள்.
அப்புறம் என்ன,  நல்ல எலக்ட்ரிக் கடையில கார நிப்பாட்டி 120-ரூபாய்க்கு ஒரு CFL பல்பு வாங்கிட்டு போனேன்.
இதுதாங்க நான் பல்பு வாங்கிய கதை. எப்படிங்க இருக்கு?

டிஸ்கி: CFL பல்பின் படம் அவசரத்துக்கு கிடைக்கல...அதான் சாதா பல்பு படம் போட்டு சமாளிச்சிருக்கேன். மன்னிச்சுக்கங்க....

புதன், 5 ஜனவரி, 2011

இசைப்புயலுக்கு ஒரு இசை தாலாட்டு


ன்று இசைப்புயல், ஆஸ்கார் தமிழன் A.R.ரஹ்மானுக்கு 45-வது பிறந்தநாள். அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அவர் இசையமைத்த ஆரம்பகால அருமையான மெலடி பாடல்கள் பத்தை உங்கள் பார்வைக்கு சமர்பித்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.


ஆத்தங்கரை மரமே-கிழக்கு சீமையிலே



நீ கட்டும் சேலை -புதிய மன்னர்கள்



தென்மேற்கு பருவ காற்று- கருத்தம்மா



கண்ணாளனே- பம்பாய்




மனசுக்குள் ஒரு -ஸ்டார்



தங்கத்தாமரை-மின்சாரக்கனவு



காற்றே- ரிதம்  



புது வெள்ளை- ரோஜா



சித்திரை நிலவு- வண்டிச்சோலை சின்னராசு



சொல்லாயோ- அல்லி அர்ஜுனா

செவ்வாய், 4 ஜனவரி, 2011

முதலமைச்சர் தேவை( கண்டிப்பாக 18+ மட்டும்)

இதோ கூப்பிடும் தூரத்தில் தேர்தல் வந்துவிட்டது.நான் முதல்வர், அவன் முதல்வர் என்று அவரவர் வரிந்து கட்டிக்கொண்டு இனிமேல் வருவார்கள். ஆனால்,  நேர்மையான முதலமைச்சர் வேட்பாளர் கிடைப்பது அரிது . முதல்வர் பதவிக்கான தகுதிகளை நான் இப்போது பட்டியலிடப்போகிறேன்.

குடும்பத்திற்கு பதவிகள் வழங்க கூடாது.
டாஸ்மாக் கடைகள்மூலம் பலரின் தாலிகளை அறுத்துஅந்த வருவாயினால்  இலவசங்கள் வழங்க கூடாது.
ஊழல் அறவே கூடாது
தன் கட்சியினர் ஊழல் செய்தால் அந்த ஆட்சியைவிட இது கம்மி, அந்த மாநிலத்தைவிட இது கம்மி என்று சப்பை கட்டு கட்டக்கூடாது.
ஈழத்திற்காக அரைநாள் உண்ணாவிரதம் கூடாது.
சொந்தமாக தொலைக்காட்சி தொடங்க கூடாது
முக்கியமாக தந்தி அடிக்கவே கூடாது

மலை வாசஸ்தலங்களில் படுத்துக்கொண்டு அறிக்கை அரசியல் செய்யக்கூடாது.
கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அரைவேக்காடுகளை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க கூடாது
நாங்கள் தூய்மையானவர்கள் என்று ஊர் சிரிக்க சொல்ல கூடாது
காலில் விழும் கலாச்சாரம் கூடவே கூடாது.
கூட்டணி தலைவர்களை காக்க வைக்க கூடாது
மந்திரிகளை அடிக்கடி மாற்றக்கூடாது

தனக்கு கட்சியிருப்பதையே மறந்து இன்னொரு கட்சி கிளை செயலாளர் போல் நடந்து கொள்ளக்கூடாது
பொது மேடைகளில் நீலிக்கண்ணீர் வடிக்க கூடாது
அய்யகோ இப்படித்தான் அந்த நாட்டில்...என்று உலக வரலாறு கூறல் கூடாது

தொட்டதற்கெல்லாம் புள்ளிவிபரங்கள் கூறக்கூடாது
மக்களோடும்,தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று குழப்பக்கூடாது
சினிமாவில் நடிக்க கூடாது

மகனுக்கு மந்திரி பதவி தரும்பட்சத்தில்  யாரோடும் கூட்டணி என்று சொல்லக்கூடாது
வாக்கெடுப்பு நடத்தி கூட்டணியை முடிவு பண்ணக்கூடாது
சங்க சொத்துக்களுக்கு தன் மனைவி  பெயரை வைக்கக்கூடாது


இன்னும் இருக்கு அடுத்த பதிவில் சொல்றேன்....

இப்படி பட்ட தகுதிகளில் ஒன்று இரண்டு குறைந்தாலும் பரவாயில்லை. அவர் தான் அடுத்த முதல்வர். அப்படி பட்டவரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி-1: மேற்கண்ட கட்டுரை படிக்கும்போது யாராவது உங்கள் மனக்கண்ணில் தோன்றினால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.

டிஸ்கி-2: இதுக்கு எதற்கு 18+ என்று தலைப்பு, இது ஹிட்ஸ் கிடைப்பத்தற்க்காக ஒரு மலிவான விளம்பர யுத்தி என்று பதிவுலக காவலர்கள் கச்சை கட்டவேண்டாம். ஏனென்றால், நம்  நாட்டில் ஓட்டு போடும் அடிப்படை தகுதி 18 வயதிலிருந்து தானே ஆரம்பிக்கிறது. அதான் இந்த  18+ தலைப்பு  . வேறு எதையாவது நினைத்து கொண்டு நீங்கள் வந்ததற்கு நானா பொறுப்பு?

திங்கள், 3 ஜனவரி, 2011

ஈழமும் இறையாண்மையும்


(குறிப்பு: நாடாளுமன்றத்தேர்தல் சமயத்தில் யூத்புல் விகடனுக்கு என்னால் எழுதி அனுப்பப்பட்டு என்ன காரணமோ தெரியவில்லை இந்தக்கட்டுரை நிராகரிக்கப்பட்டது. மீண்டும் உங்கள் பார்வைக்கு...)


ன்று திரும்பிய பக்கமெல்லாம் ஈழத்தமிழருக்காக நம் அரசியல்வாதிகளின் குரல் பிரதானமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. உண்ணாவிரதங்களும், வேலைநிறுத்தங்களும்,மனிதசங்கிலிகளும் இன்னபிற போராட்ட நாடகங்களும் ஜரூராக அரங்கேறிவருகிறது. இதெல்லாம் தேர்தல் வரைதான் என்ற நிஜமும், தேர்தலுக்கு பிறகு ஈழமாவது ஈனமாவது அது கிணற்றில் போடப்பட்ட கல்லாகிவிடும் என்ற நிதர்சனமும் நம் நஞ்சை சுடுகிறது.

எந்த ஒரு பிரச்சினையையுமே ஊதி பெரிதாக்கி பின் அதை வாக்குகளாக அறுவடைசெய்யும் நம் அரசியல்வாதிகள் இப்போது ஈழப்பிரச்சினையையும் அப்படியே அணுகுவதுதான் வேதனை. தோழர் முத்துக்குமார் போன்றவர்களின் சிதை நெருப்பில்கூட நம் தலைவர்கள் குளிர்காய்வதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


எந்தநேரமும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நினைப்பில் தினந்தோறும் மரணத்தின் மடியிலும் சாவின் விளிம்பிலும் நின்றுகொண்டு குண்டுமழைகளுக்கு மத்தியிலிருந்து கதறிக்கொண்டிருக்கும் இந்த அப்பாவி மக்களின் கூக்குரல், எந்த நேரமும் தம்மை சுற்றி ' இசட்' பிரிவு பாதுகாப்பு, பூனைப்படை பாதுகாப்புடன் ஏ.சி. அறையில் இருந்துகொண்டும் ஹெலிகாப்டரில் பறந்துகொண்டும் அரசியல் செய்யும் நம் தலைவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதுமட்டும் சரியாக கேட்பதுதான் விந்தை.


இந்த ஓட்டுப்பொறுக்கி தலைவர்களுக்கு ஈழத்தமிழர்களின் கதறலும்,கத்தலும் அவர்களின் ஓட்டுப்பெட்டியை நிரப்பப்போகும் ஒரு துருப்புச்சீட்டு அவ்வளவுதான். அக்கறையுமில்லை. அனுதாபமுமில்லை. எல்லாம் அரசியல் ஆதாயம்தான். அதன் பிறகு அடுத்த தேர்தல்வரும் வரை ஈழத்தமிழர்கள் என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும், அந்த கத்தல் எல்லாம் கடல்கடந்து நம் தலைவர்களுக்கு கேட்பதேயில்லை.


காவேரி, ஒகேனக்கல், முல்லைபெரியாறு என உள்நாட்டிலேயே இந்த தலைவர்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் பொது இவர்கள் எப்படி அடுத்த நாட்டு பிரச்சினையை தீர்ப்பார்கள்?.
கடந்த காலங்களில் பல வருடங்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள், இப்போது ஆட்சியை அலங்கரிப்பவர்கள் எல்லோரும் தன் கூட்டணிக்கட்சி தலைவர்களின் பக்கவாத்தியங்களுடன் , எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் ஈழப்பிரச்சினையை இல்லாமல் செய்துவிடுகிறோம் என்று கோரஸ் பாடுகிறார்கள்.

இதையும் நிஜமென நினைத்து நம் இளிச்சவாய் வாக்காளர்கள் இவர்கள் பின்னால் அணிவகுக்கவும், கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் தயங்குவதில்லை. ஈழப்பிரச்சினையை இல்லாமல் செய்துவிடுவோம் என்று இவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை.
ஆம்.....இன்னும் சில மதங்களிலோ, வருடங்களிலோ ஒட்டு மொத்த அப்பாவிகளை போர் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ராஜபக்சே அரசு கனகச்சிதாமாக அழித்தொழித்து விடும்.ஈழத்தில் தமிழர்கள் என்று ஒரு இனம் இருந்தால்தானே ஈழப்பிரச்சினை வரும். தமிழர்களே இல்லாமல் போய்விட்டால்....? இந்த நம்பிக்கையில் தான் நம்தலைவர்கள் பேசுகிறார்கள்.


இதற்கிடையில் ஈழப்பிரச்சினையில் உண்மையாகவே போராடுபவர்கள் இறையாண்மை சாயம் பூசப்பட்டு சிறைக்கொட்டடிகளில் அடைக்கப்படும் கொடுமைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று இலங்கையில் தினந்தினம் குவியல் குவியலாய் செத்து மடிந்துகொண்டிருக்கும் தமிழருக்காக, சக மனிதருக்காக குரல் கொடுப்பதும், குமுறுவதும் எப்படி இறையாண்மைக்கு எதிரானதாகுமென்று விளங்கவில்லை.
ஆடு, மாடு என்று விலங்கினத்துக்காக போராடுகிறது ரெட் கிராஸ் என்ற செஞ்சிலுவை சங்கம். சினிமாவில்கூட உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது என்கிறது சென்சார் போர்டு என்ற தணிக்கைக்குழு.
இப்படி உயிரினத்துக்கெல்லாம் போராடுவதற்கு இயக்கங்களும் அமைப்புகளும் இருக்கும்போது, அதை விட உயர்ந்த உயிரான மனிதர்கள் சாகும்போதும்,துன்புறுத்தப் படும்போதும் சக மனிதனாக மனிதாபிமான அடிப்படியில் தட்டிக்கேட்பதும், கதறுவதும் இறையாண்மைக்கு எதிரானது என்று சொன்னால்.....எதிர்காலத்தில் மனிதாபிமானம் செத்துப்போய், மனிதாபிமானிகளே இருக்க மாட்டார்கள்.எல்லோரும் சுய நலமாக சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.பக்கத்து வீட்டுக்காரன் மரணத்திற்கு கூட அழ ஆளில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. ஜாக்கிரதை.