வெள்ளி, 28 ஜனவரி, 2011

வெங்காயம்னா சும்மாவா என்ன?

 அந்த வயல்ல போலீஸ்காரங்க காவலுக்கு நிக்கறாங்களே? ஏன் பெட்ரோல் கண்டுபிடிச்சிருக்காங்களா?
இல்லை. வெங்காயம் பயிரிட்டு இருக்காங்க.....

--------------------------

அந்த கட்சி எப்படி ஜெயிச்சு ஆட்சி பிடிச்சுச்சு. ஆச்சர்யமா இருக்கே?
அவங்க தேர்தல் அறிக்கையிலே நாங்க ஜெயிச்சா
வீட்டுக்கு ஒரு மூட்டை வெங்காயம் இலவசமா வழங்கப்படும்ன்னு சொல்லியிருந்தார்களே....அதான்.
-------------------------------

அந்த ஹோட்டல்ல மட்டும் கூட்டம் அதிகமா  இருக்கே....
பின்னே...இட்லிக்கு தொட்டுக்க வெங்காய சட்னி வைக்கிறாங்களே....

-----------------------------

போலீஸ் பந்தோபஸ்தோட போறாரே அவரு யாரு மந்திரியா?
அட நீவேற....அவரு பெரிய வெங்காய வியாபாரி. சந்தைக்கு யாவாரத்துக்கு போறாரு....
---------------------------------

டிஸ்கி:இந்த ஆளு வெங்காயத்தை விடவே மாட்டாரு போலன்னு என்னை பற்றி யாரும் கமென்ட் போட முடியாது....ஏன்னா......பின்னூட்டத்துல பாருங்க....

16 கருத்துகள்:

  1. இந்த ஆளு வெங்காயத்தை விடவே மாட்டாரு போலன்னு என்னை பற்றி யாரும் கமென்ட் போட முடியாது....ஏன்னா..........அந்த கமெண்ட நானே போட்டுக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. அரசர்குளத்தார் என்றால் சும்மாவா:-)

    பதிலளிநீக்கு
  3. தாலிக்கு தங்கம் இல்லை
    தாலிக்க வெங்காயம் இல்லை

    பதிலளிநீக்கு
  4. வெங்காய வெடி இந்த தீபாவளிக்கு கிடையாதாம்...
    வெங்கயத்தை வச்சி காமடி
    நான் கண்ணு கலங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. Hollo பாஸ் வெங்காயத்தை வச்சிக் கூட காமெடி எழுதலாமா...
    அப்ப இது காஸ்லி காமெடின்னு சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  6. ரஹீம் கஸாலி said... 1 இந்த ஆளு வெங்காயத்தை விடவே மாட்டாரு போலன்னு என்னை பற்றி யாரும் கமென்ட் போட முடியாது....ஏன்னா..........அந்த கமெண்ட நானே போட்டுக்கிட்டேன். ///அப்படி நீங்களே போட்டாலும் அந்த கேள்விய நாங்க கேப்போம்

    பதிலளிநீக்கு
  7. இதுதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதா?

    பதிலளிநீக்கு
  8. வெங்காயம் வெல குறையுதாம் மக்கா!இனிமே வெங்காயம் வெச்சி பதிவு எழுத முடியுமா??

    பதிலளிநீக்கு
  9. அன்பு... சகோதரரே.. நீங்கள் எனக்கு மிகவும் முக்கியமானர்
    என் தளத்தில் முதலில் வந்தது.. முதலில் வாக்களித்தது... முதலில் பின்தொடர்ந்தலவர்.. அதற்கு நன்றி .. தலைவா..
    இதையும் படிச்சிட்டு கருத்து சொல்லுப்பா..
    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
    ஓட்டு போட்டாச்சி...

    பதிலளிநீக்கு
  10. போடா வெங்காயம்னு யாராவது சொன்னா விலை மதிப்பில்லாத ஒரு பொருளோடு ஒப்பிடுகிறார்கள் என்று சந்தோஷ பட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  11. வெங்காயத்தை வெட்டினால்தான் நமக்குக் கண்ணீர் வரும்!இப்பொழுது வெங்காயமே கண்ணீர் விடுகிறது ,தான் படும் பாட்டை நினைத்து!

    பதிலளிநீக்கு
  12. கண்ணு கலங்கிடுசு, பின்னே வெங்காயமாச்சே?

    பதிலளிநீக்கு