திங்கள், 11 ஏப்ரல், 2011

மைக் பிடித்த எம்.எல்.ஏ- என்ன கொடுமை சார் இது?


ஒரு நன்றி.....

ஸ்...அப்பாடா.....ஒருவழியாக பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. மக்களை பார்த்து நீங்கள்தான் எஜமானர்கள் நல்லதீர்ப்பு தாருங்கள் என்று பிரச்சார வேன்களிலும், பொது மேடைகளிலும், காலில் விழுந்தும், ஹெலிகாப்டரில் பறந்தும் வாக்கு வேட்டையாடியாடிய தலைவர்கள் இதோ ஓய்வு வேண்டி தத்தம் வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தல் எவ்வளவோ தேவலை என்றுதான் சொல்லவேண்டும். சுவர் விளம்பரம், பிளக்ஸ் போர்டு, தோரணங்கள் என்று எல்லாமே மிக மிககம்மியாக இருந்தது.  அடிக்கும் வெயிலில் ஏற்கனவே காய்ந்து போயிருந்த நம்மை மூலைக்கு மூலை ஒலிபெருக்கியை கட்டி மேலும் காய வைத்திருப்பார்கள். அதற்காக தேர்தல் கமிசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
=================================

ஒரு வருத்தம்

நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சிவராஜ்(காங்கிரஸ்) அவர்களை ஆதரித்து நடிகர் வடிவேலுவின் பிரச்சாரத்தை ஏகப்பட்ட பில்டப்புடன் சிறிது நேரம் சன் நியூஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. கடந்த பதினைந்து வருடங்களாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்  சிவராஜ் வடிவேலுவிற்காக மைக் பிடித்துக்கொண்டு நின்றது பரிதாபமாக இருந்தது. ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு காமடி நடிகனுக்கு மைக் பிடித்த கேவலத்தை எங்கே போய் சொல்றது? வருத்தமாக இருக்கிறது.

==================================

ஒரு ஜோக்

ராத்திரி கரண்ட் கட்டானதும் எல்லோரும் சந்தோசமா வெளியே வந்து எட்டி பார்க்கறாங்களே ஏன்?

எந்த வேட்பாளராவது  பணம் கொடுக்க வாராங்களான்னு தான் பார்க்கறாங்க....

========================================

ஒரு வேண்டுகோள்....

தேர்தலன்று ஒரேயொரு நாள்  நீங்கள் கையில் வைக்கும் அந்த கருப்பு மை....அடுத்த 5 வருடங்களில் வளர்ந்து நம் முகத்திற்கு கரியாக மாறிவிடாத அளவிற்கு பார்த்து வாக்களியுங்கள் மக்களே.... 


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

18 கருத்துகள்:

  1. சென்னை போய்ட்டா லும் உங்க கடமை உணர்ச்சி.. ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கஸாலி

    அருமை அருமை - மைக் பிடித்த எம் எல் ஏ - அய்யோ அய்யோ - ம்ம்ம்ம் - வருத்தமும் ஜோக்கும் பிடிச்சிருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. //ஒரு நன்றி.....
    ஒரு வருத்தம்
    ஒரு ஜோக்
    ஒரு வேண்டுகோள்.... //

    இனி இது உங்களுக்கு...
    ஒரு ஓட்டு....
    ஒரு கமெண்ட் போட்டாச்சு...
    ஹி..ஹி.. பதிவு கலக்கல்.

    பதிலளிநீக்கு
  4. அருமை

    கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

    http://speedsays.blogspot.com/2011/04/1.html

    பதிலளிநீக்கு
  5. இன்னும் ஒரு நாள் தான் இருக்கு பார்க்கலாம் கணிப்புகள் எல்லாதிற்கும் என்ன விடை கிடைக்கிறது என்று ..........

    பதிலளிநீக்கு
  6. நல்ல கருத்துக்கள்...போட்டமில்ல ஒட்டு...

    பதிலளிநீக்கு
  7. ஆயிரம்....

    ரெண்டாயிரம்....

    நாலாயிரம்.....

    பதிலளிநீக்கு
  8. பல நிற வண்ணங்கள் கண்ணை உறுத்துகின்றது நண்பரே....

    நல்ல பதிவு

    நல்ல பதிவை விரிவாக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. நாலு காசு சம்பாதிக்கனும்ன்னா மைக் பிடிக்கிறதுல தப்பேயில்ல:)

    பதிலளிநீக்கு
  10. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  11. தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்
    தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்
    http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  12. //கடந்த பதினைந்து வருடங்களாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவராஜ் வடிவேலுவிற்காக மைக் பிடித்துக்கொண்டு நின்றது பரிதாபமாக இருந்தது.//ஏதோ.. ஒர்தருக்காவது உபயோகமா இருந்திருக்கிறாரே.. அத பாராட்டுவீங்களா.. அத விட்டுட்டு..

    பதிலளிநீக்கு