சனி, 8 ஜனவரி, 2011

என் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......

 என்  வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......இப்போதுதான் ஜோக் எழுதுகிறேன். என் கன்னி முயற்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 
திருட்டு வீ.சி.டி.-வியாபாரிகல்லாம் சேர்ந்து அந்த நடிகர் வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்காங்களே...எதுக்கு?
அதுவா அந்த நடிகர் நடிச்ச படத்த திருட்டு வீ.சி.டி-யா நிறைய காப்பி போட்டிருந்தாங்களாம். விக்காம நட்டம் வந்துடுச்சாம்..அதான் நடிகர்ட்ட நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரதம் இருக்காங்க...


தலைவரே நம்ம ஊழல் பண்ணி கோடிகோடியா சேர்த்தது மக்களுக்கு தெரிஞ்சு போச்சு?
எப்படிய்யா சொல்றே?
வெளில எட்டிப்பாருங்க இந்த தடவை ஒரு ஓட்டுக்கு இருபதாயிரம் ரூபாயா உயர்த்தி கொடுக்கணும்ன்னு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க....


நம்ம தலைவருக்கு உள்ள திறமை யாருக்கும் வராது
அப்படி என்னப்பா பண்ணினாரு?
என் சுயசரிதை முதல்பாகம்ன்னு சொல்லி போன வருஷத்து டைரிய ஒரு லட்சம் காப்பி போட்டு வித்துட்டாருன்னா பார்த்துக்கோயேன்....





அந்தாளு கஞ்சி  குடிக்கறாரு....அவரப்போயி பணக்காரன்னு சொல்றே?
நல்லாப்பாரு தொட்டுக்க வெங்காயம் வச்சிருக்காரு....


அந்தாளப்போட்டு ஏன் நம்ம டாக்டரு அடிக்கறாரு
பாலி கிளினிக்குன்னு எழுதச்சொன்னா போலி கிளினிக்குன்னு எழுதிட்டாராம்.

எப்படி இருக்குன்னு பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்களேன் 

34 கருத்துகள்:

  1. நல்லாயிருக்குங்க .
    தொடருங்கள் .
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. //நம்ம தலைவருக்கு உள்ள திறமை யாருக்கும் வராது
    அப்படி என்னப்பா பண்ணினாரு?
    என் சுயசரிதை முதல்பாகம்ன்னு சொல்லி போன வருஷத்து டைரிய ஒரு லட்சம் காப்பி போட்டு வித்துட்டாருன்னா பார்த்துக்கோயேன்....
    //

    ஹி...ஹி...

    சூப்பர் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்லாதாங்க இருக்குங்க ... தொடர்ந்து கலக்குங்க ....

    பதிலளிநீக்கு
  4. ஹா...ஹா...ஹா...

    ஜோக்ஸ் நல்லா தேன் இருக்கு... தொடர்ந்து எழுதுங்க தலீவா...

    ஆமாம், அதென்ன (அந்தாளு காஞ்சி குடிக்கறாரு)னு எழுதி இருக்கீங்க... கஞ்சின்னு எழுதுங்க... ரொம்ப காஞ்சி போய் இருக்காரோன்னு நெனச்சேன்...

    பதிலளிநீக்கு
  5. வரலாறு தொடரட்டும்! :-)//என் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......இப்போதுதான் ஜோக் எழுதுகிறேன்.//அந்த போலி கிளீனிக் ஜோக் படு சூப்பர்!

    பதிலளிநீக்கு
  6. "தொட்டுக்க வெங்காயம்"__சூப்பர்

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டமிடும்போது
    கட்டுப்பாடுகளை தகர்த்து, கதவை அகலமாக திறந்து வையுங்கள்... புனைப்பெயரில் எழுத அனுமதியுங்கள்..
    அனானிகளையும் அனுமதியுங்கள்>>

    பதிலளிநீக்கு
  8. முதல் முயற்சி அருமை

    //
    என் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......//

    என்னங்க பாஸ் ஏதோ தலைமுறை தலைமுறையா ப்ளாக் எழுதுறமாதிரி தலைப்பு வெச்சி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  9. ramanindia25@gmail.com said...

    பின்னூட்டமிடும்போது
    கட்டுப்பாடுகளை தகர்த்து, கதவை அகலமாக திறந்து வையுங்கள்... புனைப்பெயரில் எழுத அனுமதியுங்கள்..
    அனானிகளையும் அனுமதியுங்கள்>>///
    [co="yellow"]நண்பரே...ஆரம்பத்தில் அனானிகளையும் அனுமத்தித்தேன். சில நேரங்களில் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் அனானியின் பெயரில் பின்னூட்டம் வந்ததனால் அனானியை தடை செய்துவிட்டேன்.[/co]

    பதிலளிநீக்கு
  10. THOPPITHOPPI said...

    முதல் முயற்சி அருமை

    //
    என் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......//

    என்னங்க பாஸ் ஏதோ தலைமுறை தலைமுறையா ப்ளாக் எழுதுறமாதிரி தலைப்பு வெச்சி இருக்கீங்க////
    [co="yellow"]இந்த பதிவுலக உள்குத்து அரசியலில் ஆறுமாதம் தொடர்ந்து தாக்குபிடிப்பதே, ஓரிரு தலைமுறை நிற்பது போல்தான். அதான் இப்படி.....[/co]

    பதிலளிநீக்கு
  11. அந்தாளு கஞ்சி குடிக்கறாரு....அவரப்போயி பணக்காரன்னு சொல்றே?நல்லாப்பாரு தொட்டுக்க வெங்காயம் வச்சிருக்காரு....////சூப்பர்.....

    பதிலளிநீக்கு
  12. வலயுலகில் முதல் முயற்சியே செம கலக்கல்
    முக்கியமா எனக்கு புடிச்ச ஜோக்ஸ்
    /நம்ம தலைவருக்கு உள்ள திறமை யாருக்கும் வராது
    அப்படி என்னப்பா பண்ணினாரு?
    என் சுயசரிதை முதல்பாகம்ன்னு சொல்லி போன வருஷத்து டைரிய ஒரு லட்சம் காப்பி போட்டு வித்துட்டாருன்னா பார்த்துக்கோயேன்....
    தொடர்ந்து கலக்குங்க

    பதிலளிநீக்கு
  13. உங்க கன்னி முயற்சி வெர்றி பெற்று விட்டது எல்லா ஜோக்ஸ்ம் சூப்பரா இருக்கு
    நான் புதுசு இந்த கன்னிக்கும் ஆதரவு கொடுங்க..
    http://jokespic.blogspot.com/2011/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  14. நல்லா இருக்குங்க. உங்க கன்னி முயற்சி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சகோ.கஸாலி,////தலைவரே நம்ம ஊழல் பண்ணி கோடிகோடியா சேர்த்தது மக்களுக்கு தெரிஞ்சு போச்சு?///.....இது ஜோக் மாதிரி தெரியவில்லை. பல விஷயங்களை பட்டவர்த்தனமாய் போட்டு உடைத்திருக்கிறது. நெத்தியடி... இல்லை... இல்லை... மரணஅடி..! (ஜோக் மூலமாகக்கூட சிந்திக்க வைக்க முடியுமா?)

    பதிலளிநீக்கு
  16. //இந்த பதிவுலக உள்குத்து அரசியலில் ஆறுமாதம் தொடர்ந்து தாக்குபிடிப்பதே, ஓரிரு தலைமுறை நிற்பது போல்தான். அதான் இப்படி.....//---உண்மை... உண்மை.... உண்மை.....

    பதிலளிநீக்கு
  17. ஜோக்ஸ் சூப்பர்..அதுசரி, அப்போ இவ்ளோநாளா சீரியஸாவா எழுதிட்டிருந்தீங்க?

    பதிலளிநீக்கு
  18. //அந்தாளு கஞ்சி குடிக்கறாரு....அவரப்போயி பணக்காரன்னு சொல்றே?
    நல்லாப்பாரு தொட்டுக்க வெங்காயம் வச்சிருக்காரு....//
    சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்...

    பதிலளிநீக்கு
  19. ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)8 ஜனவரி, 2011 அன்று 10:27 PM

    நன்றாக இருக்கிறது. ரசிக்கும்படி எழுதுங்கள்.

    அனைத்தும் அரசியல் நகைச்சுவையாக இருப்பது இன்னும் சிறப்பு.

    அதிலும்,டைரிய சுயசரிதையா விற்றது, வெங்காயம் மேட்டரு எல்லாம் சூப்பர்.

    தொடருங்கள் சகோ

    பதிலளிநீக்கு
  20. அந்தாளு கஞ்சி குடிக்கறாரு....அவரப்போயி பணக்காரன்னு சொல்றே?
    நல்லாப்பாரு தொட்டுக்க வெங்காயம் வச்சிருக்காரு....

    சரியான நேரத்தில் சரியான ஜோக்...

    பதிலளிநீக்கு
  21. //என் வலையுலக வரலாற்றில் முதன்முறையாக......இப்போதுதான் ஜோக் எழுதுகிறேன்.//

    அப்ப இத்தன நாளா நீங்க எழுதுனது ஜோக் இல்லையா?

    நான் ஜோக்னு நெனச்சி தான் இத்தன நாளா படிச்சேன், அடக்கடவுளே!

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துக்கள்.. நன்றாக இருக்கிறது.. தொடருங்கள் பாஸு

    பதிலளிநீக்கு
  23. நல்லா இருக்கு தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  24. நல்ல இருக்கு தொடருங்க. அரசர்குளம் எங்கே இருக்கு, ஆலங்குடி பக்கத்திலையா ?

    பதிலளிநீக்கு
  25. நல்ல இருக்கு தொடருங்க. அரசர்குளம் எங்கே இருக்கு, ஆலங்குடி பக்கத்திலையா ?

    பதிலளிநீக்கு
  26. ஆஹா ,நீங்களும் ஜோக் போட ஆரம்பிச்சுட்டீங்களா? ஆபத்து வந்துடுச்சு.. ஹா ஹா சும்மா சொன்னேன். நல்லாருக்கு வாரம் ஒரு பதிவு இப்படியே போடுங்க. இதை குமுதம் புக்குக்கோ குங்குமத்துக்கோஅனுப்புங்க

    பதிலளிநீக்கு
  27. ஹாய் நல்ல இருந்தது வாழ்த்துக்கள் -ராமலிங்கம் குத்தாலம் 609801

    பதிலளிநீக்கு
  28. எதார்த்தமாக உங்க ப்ளாக்கை பார்த்தேன்.ஜோக்குகள் நல்லாயிருக்கு,பார்த்ததுக்கு பரிசாக பீட்ஜிட் ஐ நானும் என் ப்ளோகில் சேர்த்துக்கொண்டேன்.அதை பார்த்து என் பிளாக்கையும் யாரோ பாக்ராங்கனு நப்பாசை பட்டுக்கிறேன்

    பதிலளிநீக்கு